.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, September 12, 2008

என் தம்பி திருமண நிச்சயத்திற்கு...

மெட்டு: என்ன இதுவோ என்னைச் சுற்றியே

சின்னப் பொண்ணுதான் சவுமியாவுக்குப் பின்னால் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் வர மறுக்குது தூக்கம்

நேற்று வரைக்கும் இல்லாதது...
இன்று படுத்தும் பொல்லாத‌து...

ஆம்..வேறு என்ன...புது நாணம் தானடி...(சின்னப் பொண்ணுதான்)

சங்கரா சங்கரா என்று சொல்லத் தோணுதோ..?
பக்தியா இல்லையே...வேறு என்னவோ?

எங்கெங்கு காணினும் சங்கர் பிம்பம் தோணுதோ...
என்னதான் சொல்வதோ..என்ன செய்யவோ?

தொலை..பேசியில்..அழைப்புகள் அதிகமாய் ஆனதுவோ..
உலை பானையின் குமிழிபோல் இதயமும் துடிப்பதுவோ..
கடிகார நேரம் மட்டும்..பைய பைய போகுதோ?

(சின்னப் பொண்ணுதான்)

Tuesday, August 26, 2008

எழுகிறது இந்தியா

அலுவலகக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றது 1st Runner Up

அகிம்சை என்கிற ஆயுதம் எடுத்து _ புது
அறவழி சென்று போரினைத் தொடுத்து
'மலர்ச்சி' எழுந்திட பெற்றது சுதந்திரம் ! _ நம்
'எழுச்சி வெல்லும்' என்பதே ம்ந்திரம் !

அறிவியல் துறையில் செயற்கை கோளும் _ பெரும்
ஆய்வியல் துறையில் கண்டுபிடிப் புகளும்..
பொறியியல் துறையில் கணிணியில் வேகம் _ புதுப்
பொலிவுடன் வளரும் பொருளா தாரம் !

கலைத் துறை கல்வி விளையாட் டிலுமே _ ஒரு
சரித்திரம் படைத்திட இளம்படை இருக்கு..
நிமிர்ந்த நன்னடை போட்டென் தோழா _ சொல்
எழுந்தது இந்தியா வல்லர சாகவே..!

Thursday, August 14, 2008

மரம் நடுவோம்

வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...

வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...

மரம் நடுவோம்...மழை பெறுவோம்...
மரம் நடுவோம் இப்போதே...

இன்றே நட்டால்தான்
எதிர்காலம் அப்போதே... (வீட்டுக்கு ஒரு மரம்)

காடுஅது செழித்தால்தான்
நாடுஅது செழித்திடும்

வீடு ஒன்று மரம் ஒன்று
என்ற்கொள்கை வேண்டுமே...

ஏடெடுத்து படிக்கும்புள்ள _
இன்றே வைநீ தென்னம்புள்ள...

தேடவேண்டாம் நாளைநீயும்
செல்வம் ரொம்ப அருகிலே....
(வீட்டுக்கு ஒரு மரம்)

மாரியது பெய்தால்தான்
காரியமே நடந்திடும்!

பாரிதனை உணர்ந்திடவே
காடுபல வேண்டுமே..

பயிர்த் தொழிலே உயிர்த்தொழிலாய்
ஊரெல்லாம் ஏத்துக்கணும்...!

வயிற்றறுப் பசி இல்லயெனும்
நெலமதன்னை காத்துக்கணும்...!

(வீட்டுக்கு ஒரு மரம்)

Friday, August 8, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 2

பாடல் சூழல்: காதல் பிரிவில் சோகம்


அன்பே வா‍_வென்றேன் வந்தாய் _ வந்து
இன்பங்கள் நீ தந்தாய்...(அன்பே)

வேகம் உண்டானபோதே ஒரு சோகம் உண்டாச்சு கண்ணே...
சோகம் உண்டாந்தாலே இந்த நெஞ்சம் ரெண்டாச்சு பெண்ணே !

புனிதமான் நம் காதல் வேள்வியில் தொல்லை வந்தது ஏனடி?
மனித ஜாதிக்கு நமது காதலின் ஆழம் புரியல தானடி...!

முள்ளில் விழுந்தது சேலையே _ அதில்
முள்ளைப் போடுதல் லீலையே !

(அன்பே)

நிலவு வீசும் இந் நேரம்..உன் அன்பன் நெஞ்சில் ஓர் பாரம்..
உலவும் என் நெஞ்சில் என்றும்... நம் நீக்கமில்லாத பந்தம்...

உடலில் தீயைத்தான் வைக்கலாம்...உயிரில் இல்லையடி பைங்கிளி..!!
கடலில் அலைகளும் ஓய்வதில்லையே...உண்மைக் காதலும் சாய்வதில்லையே...
கால நேரங்கள் மாறலாம் _ நம்
காதல் அது போல மாறுமா?

(அன்பே)

Friday, July 25, 2008

சாய‌னாபுர‌ம் அய்ய‌னார் மீது...

ஆவ லோடு நாம வாழும் ஊரு _ இதைக்
காவல் செஞ்சுக் காப்ப துவும் யாரு?
எல்லை யிலே நின்னு ரிப்பார் பாரு ! _ நம்ம‌
தொல்லை தீர்த்துக் காக்கும் அய்ய னாரு!

முன்ன வங்க சாமி சாத்த னாரு _ வீரச்
சின்ன முங்க நம்ம வேம்ப னாரு!
பூர ணாவும் புஷ் கலாவும் கூட _ சேர்ந்து
ஆத ரவா காத்து இருப் பாரு!

மீசை வெச்சு வீரம் காட்டும் சாமி ! _ நம்மேல்
ஆசை வெச்சு பாசம் காட்டும் சாமி !
தீட்டி வெச்ச வீசும் அரி வாளு! _ அதைத்
தூக்கி வெச்சு காவல் செய்யு வாரு !

மடை திறந்த தண்ணி யதைப் போல _ சீறித்
'தடதட' ன்னு பாயும் குதிரை மேல...
சுடலை மாடன் கருப் பண்ணனும் கூட _ வந்து
கவலை யெல்லாம் தீர்த்திடுவார் பாரு!

ப‌டைய‌ல் வெச்சு கும்பி டுவோம் வாங்க‌ ! _ வெற்றி
அடைய னும்னு வேண்டிக் க‌லாம் வாங்க‌!
க‌ன்னுக் குட்டிய‌க் காக்கும் ப‌சு போல‌ _ ந‌மைக்
க‌ண் ம‌ணியாய் காத்தி ருக்கும் சாமி!

Monday, July 14, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 1

பாடல் சூழல்: ஊர்ப் பெரியவரைப் போற்றிப் பாடுவது

பூ மாலை கட்டி போடுங்கடி ! _ புதுப்
பாட்டெடுத்து பாடுங்கடி..!

நம்ம ஊரு காவல்சாமி !
பல்லாண்டு வாழ வாழ்த்துங்கடி!

அம்மன் அருள் வேண்டுங்கடி
அய்யா நலம் போற்றுங்கடி !!

(பூமாலை)

நல்ல உள்ளம் உள்ளவரு!
நாடு போற்றும் நல்லவரு

தப்புகளை தட்டி கேட்கும்
தங்கமான உத்தமரு!

வெல்லம் போல இனியவரு
வெற்றி நாட்டும் புதியவரு...

வள்ளலென வாரித் தரும்
எங்க ஊரு கர்ணரு! _ அவர்
பூமுகத்தில் பூத்திருக்கும்
புன்னகையை பாருங்கடி ! _ பல

கண்ணுபடும் ஓடிவ ந்து
திருஷ்டி சுத்தி போடுங்கடி...!

(பூமாலை)

சிங்க வீரம் கொண்டவரு..!
நம்ம ஊரு ஆண்டவரு!

சங்கத் தமிழ் பேசுகின்ற‌
எங்குலத்து நாயகரு!

மங்காதப் புகழ் உள்ளவரு!
மாணிக்க ந்தான் நல்லவரு!

பொங்கி வரும் வெள்ளம் போல‌
கொள்கை திடம் உள்ளவரு!

சொன்னபடி நட ந்திடுவார் ...
குறைவு இல்லா கண்ணியம்டி!

இ ந்த வீரர் இங்குவர
செய்திருக்கோம் புண்ணியம்டி!

(பூமாலை)

Friday, July 11, 2008

குத்தால‌ம் அருள்மிகு ப‌ரிபூர‌ண‌ வினாய‌க‌ர் அட்ட‌க‌ம்

ராக‌ம்: பூர்விக‌ல்யாணி

பூதலத்து நாயகனே நான்கு
வேதப் பொருள் ஆனவனே _ உன்
அட்ட‌க‌ கீத‌ம் இசைக்கின்றேன் _ இனிய‌
நாத‌மாய் வ‌ருவாய் நீயே


1)

ராக‌ம்: க‌ல்யாணி

நிறைவாழ்வு த‌ந்த‌ருளும்
நில‌ வேந்த‌ன் க‌ண‌ப‌தியே

ம‌றைபொருளாய் ஆகி நிற்கும்
ப‌ரிபூர்ண நாய‌க‌னே

குறைககூறும் குர‌ல்கேட்டு
க‌ற்ப‌க‌மாய்த் த‌ருப‌வ‌னே

சிறைப‌ட்டேன் உன்ன‌ழ‌கில்
சித‌ம்ப‌ர‌த்தான் திரும‌க‌னே

2)

ராக‌ம்: ஹ‌ம்ச‌த்வ‌னி

திரும‌க‌னே திருக்கும‌ர‌ன்
திரும‌ண‌த்தை முடித்த‌வ‌னே

வ‌ருப‌வனே வ‌ர‌ம‌ருள‌
விறைந்திட்டே வாக‌ன‌மேல்

திருமுருக‌ன் மூத்தவ‌னே
திருத்துருத்தி ஆண்ட‌வ‌னே

பேருவ‌கை அடைந்திட்டேன்
பெற்ற‌தெல்லாம் உன்ன‌ருளே

3)

ராக‌ம்: ர‌ஞ்ச‌னி

அருள் பொழியும் மேக‌ம் நீ
அழ‌கு ப‌ரி பூர‌ணனே

பொருள் பெருக்கும் கார‌ணனே
போற்றுகிறேன் காத்திடுவாய்

இருள் நீக்கி ஒளித‌ந்து
இட‌ர்விலக்கும் திருவிளக்கே

பேருள்ள‌ம் கொண்ட‌வ‌னே
பார்காக்கும் வ‌ல்ல‌வ‌னே

4)
ராக‌ம்: கானட‌

வ‌ல்ல‌வ‌னே உன்நாம‌
வ‌ண்மைத‌ன்னை உண‌ர்ந்திட்ட‌

நல்ல‌வ‌ர்க்கே அருள்புரிவாய்
ந‌ன்மைக‌ளைச் செய்திடுவாய்

அல்ல‌ல்க‌ளை அழித்திடுவாய்
அக‌முவ‌ந்து பாடுகிறோம்

வ‌ள்ள‌லேஉன் திருவ‌டிக‌ள்
ந‌ம்பினார்க்குத் துணையாகும்

5)

ராக‌ம்: ஆரபி

துணையாகும் நின் நினைவு
தெளிந்திட்டால் அச்ச‌மில்லை

இணையில்லை வேரொருவ‌ர்
இங்குன‌க்கு முன்நிற்க

வினைத்தீர்க்கும் நாய‌க‌னே
வேழ‌முக‌ வ‌ந்திடுவாய்

உனைக் க‌ண்டேன் எனைம‌ற‌ந்தேன்
உண்மைப‌ரி பூர‌ண‌னே

6)

ராக‌ம்: மோக‌ன‌ம்

ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே
ப‌ண்பு நல‌ன் த‌ருப‌வ‌னே

க‌ரிமுக‌த்து பால‌க‌னே
க‌டைக் க‌ண்ணால் த‌ருப‌வ‌னே

ஹ‌ரிஹ‌ர‌னின் மூத்த‌வ‌னே
அவ‌னிக்கே முத‌ல‌வ‌னே

நெறித‌வ‌றா உன்ன‌ருளே
நிக‌ழ்த்திடுமே அற்புத‌ங்க‌ள்

7)

ராக‌ம்: ம‌லைய‌மாருத‌ம்

அற்புத‌ங்க‌ள் ஆற்றிடுமே
அருள்புரியும் உன்க‌ர‌ங்க‌ள்

பொற்பாதம் பிடித்திட்டேன்
ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே

ந‌ற்க‌தியை த‌ந்திடுவாய்
ந‌ல‌ம‌ருள‌ வ‌ந்திடுவாய்

ஏற்ற‌முற‌ச் செய்திடுவாய்
எங்க‌ள் ம‌ணிபால‌க‌னே

8)

ராக‌ம்: ம‌த்ய‌மாவ‌தி

பாலகனே கணபதியே
பார் போற்றும் பண்டிதனே

நீலகண்டன் மைந்தனே நீ
நிற்கின்றாய் எம்நெஞ்சில்

வேல‌வ‌னின் சோதர‌னே
வேண்டுவ‌ர‌ம் த‌ந்திடுவாய்

ஆல‌ம‌ர‌த் தெய்வ‌மேநீ
அடியார்க்கு அமிழ்த‌ம்தான்

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates