.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, April 24, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 22



"உங்க பையன் விஜய் ரசிகனா?"

"ஏன் கேட்கறீங்க?"

"மணி என்னன்னு கேட்டா "மூணு"-ன்னு சொல்லாம.... "த்தெறி" -ன்னு சொல்றானே !"

"???"
---------------------------------------------------------------



"இந்த சுட்டெறிக்கும் வெயில் நேரத்தில வியர்வையோடு கல்யாணத் தம்பதிக நிக்கறாங்களே ! இவங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்றது !"

"Hot Couples...!"

"!!"
----------------------------------------------------------


"நம்ம தலைவரு, வாட்ஸ்-அப்-ங்கறது ஒரு கூரியர் சர்வீஸ்ன்னு நினைச்சுட்டாரு !"

"எப்படி சொல்ற?"

"ஓட்டு போட பணம், வாட்ஸ்-அப் மூலமா அனுப்பலாமான்னு கேட்கறாரே !"

Saturday, April 16, 2016

வேல் !

கோடை விடுமுறையின் முதல் நாள். கணேஷுக்கு வீட்டில் பொழுது போகவில்லை. மாலை 5 மணிக்கு மேல், 'பீச்'சுக்கு புறப்பட்டான். கடற்கரையில் உலவிக் கொண்டிருந்த போது, எதிரே, ஒரு குரல்..

"ஹாய் ! கணேஷ் ! "

நிமிர்ந்து பார்த்தான்.."ஹாய் ! வேலு ! எப்படிடா இருக்க? பாத்து எவ்ளோ நாளாச்சு?" - கேட்ட குரல் தன்னுடைய நண்பன் வேல்முருகனுடையது என்பதை அறிந்தான்...வேலு சற்றே குண்டாகவும்,  கருப்பாகவும் இருந்தான். 

"என்னடா இப்படி கருத்து போயிட்டே?"

"என்னடா பண்றது...! சேல்ஸ்மேன் உத்யோகம். எப்போதும் வெயில்லதான் நிக்கறேன்...!"









வெகு நாள் கழித்து சந்தித்ததனால், ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

வீடு திரும்பிய கணேஷ், தன் குறும்பு தம்பியிடம் சொன்னான்...

"டேய் ! பீச்-சுக்கு போனேன்டா...! அங்க நம்ம வேலுவ பார்த்தேன்டா..! ரொம்பக் கருப்பா ஆயிட்டான்டா...!"

தம்பி சிரித்துக் கொண்டே சொன்னான்...

"டேய் ! கடலுக்குப் போனா ப்ளூ வேல் பார்த்துட்டு வருவேன்னு நினைச்சா...நீ ப்ளாக் வேல் -ஐப் பார்த்துட்டு வந்திருக்க...!"

Thursday, April 14, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 21

உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !





"'புகை நமக்கு பகை'-ன்னு சொல்றது சரிதான்...அதுக்காக இப்படியா பண்ணுவாங்க?"

"என்ன ஆச்சு?"

"'புகை வண்டி நிலையம்' -ன்னு எழுதியிருந்ததில் 'புகை'-யை அழிச்சுட்டாங்க !"


"???"






"வீட்ட சுத்தம் பண்ண வந்த ஆளு, என்னங்க குடிச்சிட்டு வந்து தகராறு பண்றான்...?"

"நீங்கதான அவன்கிட்ட தண்ணி போட்டுத் துடைன்னு சொன்னீங்க...!"

"!!!"

 

"ரெயில்ல போகும் போதே யோகா பயிற்சி எடுத்துக்கறீங்களே ! இது என்ன யோகா?"

"இது யோகா training இல்ல TRAIN-ing யோகா !

Saturday, April 2, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 20




"ஒரே நாள் காதலிச்சிட்டு என் காதலன் ஓடி போயிட்டான்டி !"

"போகும் போது என்ன சொல்லிட்டு போனான்?"

"நாம சந்திக்கிற இந்த ஏப்ரல் முதல் தேதிதான் நமக்கு வேலன்டைன்ஸ் டே-ன்னு சொன்னான் !"



"???"

------------------------------------------------



"உங்க வீட்டுக்காரர் நடு பிட்ச்-ல நின்னுகிட்டு மேட்ச் பார்ப்பார்ன்னு சொன்னியே ! என்னையும் கூட்டிகிட்டு போகச் சொல்லு அக்கா !"

"ஏய் ! அவரு அம்ப்பயரா இருக்கார்ன்னு சொன்னேன் !"

"!!!!"

___________________________________________



 "அவங்க பேய் படத்துக்குத் தான் போறாங்க-ன்னு எப்படி சொல்ற?"

"போகும்போது 'பேய்'-ட்டு வர்றோம்' -ன்னு சொன்னாங்களே !"

"!!!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates