.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, January 21, 2017

(ஜல்லிக்கட்டு) கடி ஜோக்ஸ் - பாகம் - 38

ஜல்லிக்கட்டு !


மனைவியை அடக்க ஒரு சான்ஸ் !

"உங்க மனைவிய நகை போட்டுகிட்டு வெளியில வரக்கூடாது-ன்னு வீட்டுக்குள்ளயே பூட்டி வெச்சுட்டீங்களாமே...! ஏன்?"

"அவ போட்டு இருக்கிறது புல் (BULL)-லாக்கு (LOCK) ஆச்சே !"

"!!!"


தடையா?

"பீடா கடை சேட்டு ஏன் சோகமா இருக்காரு?"

"பீடா (PETA)-வ தடை செய்யணும்னு போராட்டம் செய்றாங்களே !"

"!!!"


வீரத் தலைவர் !

"தலைவரே ! ஜல்லிக்கட்டு களத்தில இறங்கி காளைய அடக்கத் தயாரா?ன்னு எதிர்கட்சி தலைவர் உங்களுக்கு சவால் விட்டு அறிக்கை விட்டுருக்காரு !"

"தலைவருக்கு ஜன்னி கட்டிருக்கு-ன்னு பதில் சொல்லிடு...!":

"???"Friday, January 13, 2017

இந்த பொங்கல்....!இனிய செங்கரும்பை
கடித்து சார் உறிஞ்சி
சக்கையை எறிந்துவிட..
ஈக்கள் மொய்த்திடுமே !

காசு லெஸ்ஸாக‌ (cash-less?) 
கரும்பே வாங்காமல்..
"E-கரும்பு" எனச்சொல்லி
படைக்கின்ற பொங்கலாச்சு !

துள்ளி வருகின்ற‌
ஜல்லிக்கட்டு காளையுடன்
மல்லுகட்டும் வீரர்களை..
தள்ளி நின்று பார்த்தாலும்
உள்ளம் அள்ளிப் போயிடுமே !

'மிருக வதை' என்று சொல்லி
அதற்கிங்கே ஆச்சு தடை..
மாட்டோடு மல்லுகட்டும் வீரரெல்லாம்...
கோர்ட்டோடு மல்லுகட்டும் பொங்கலாச்சு !

நெல் கலங்கள் நிரப்பி வைத்து
மகசூலை அளவுசெய்து..
உழவர் மனம் மகிழ்வோடு
ஊருக்கெலாம் படைத்திடுமே !

நீர் வரத்து நின்றதனால்
சோர்வுற்று உழவரெலாம்
சோறுடைக்க வழியின்றி
வாழ்வுடைத்த பொங்கலாச்சு !

ஆயிரம்தான் ஆயிடினும்...
மானமிகு தமிழினத்தின்
தனிப்பெருமை அதைஉணர்த்தும்
'போகி' , 'பொங்கல்'  திருநாளில்
ஆயிரம் ஆயிரமாய் 
வாழ்த்துக்களை சொல்லிடுவோம்...!

நாளை எனும் நாளை இங்கே
நல்லதொரு மாற்றம் தரும் !
பொங்கல் முதல் மங்கலமே
பொங்கி வரும் நம்பிடுவோம்...!


Sunday, January 8, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 37


தங்கல் பார்த்து வீட்ல பொங்கல் தான் !

"தஙகல் படம் பார்த்துட்டு வந்து  த‌னக்கும் 'குஸ்தி' கத்துக்கணும்-னு பையன் கேட்டான்-னு சொல்லி இவ்வளவு சோகம் ஆயிட்டீங்களே..ஏன்?."

"அட நீங்க வேற... கேட்டது பையன் இல்ல...என்  சம்சாரம்...! அதான்...!"

"!!!!"


புடிச்ச வரன்

"மனசுக்கு புடிச்ச வரன் அமையும்-ன்னு ஜோசியர் சொன்னது சரியாச்சு-மா?"'

"என்னடி சொல்லற? இன்னும் நாங்க பார்க்கவே ஆரம்பிக்கலையே !"

"நான் பக்கத்து வீட்டு 'ரகுவரனை'-க் காதலிக்கிறேனே...!"

"???"


அலங்கோலம் !"மார்கழி மாசக் கோலப் போட்டியில நீ ஏன்  GLOBE வரைஞ்சு வெச்ச?"

"பூ-கோலம்" -ன்னு தலைப்பு சொன்னதை, நான் "பூகோளம்"-ன்னு நினைச்சுகிட்டேன்...!"

"!!!"

Sunday, January 1, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 36

புத்தாண்டு கடி ஜோக்ஸ் !

"இந்த புது வருஷத்தில...காது கேட்காத எங்க தாத்தாவுக்கு "ஹியரிங் எய்ட்" வாங்கிக் கொடுக்கப் போறேன் !"

"நல்லது...அவருக்கு...என் சார்பா ''HAPPY NEW EAR" சொல்லிடுங்க !"

ஜோஸ்யர்: "புத்தாண்டுல உங்களுக்கு பணம் பணமாக் கொட்டும்-ன்னு நல்ல சேதி-தானே சொன்னேன்...அதுக்கு ஏங்க இப்படி சோகமாகி ஏதோ யோசனையில உட்கார்ந்துட்டீங்க?"

தலைவர்: "இவ்வளவு பணம் எங்கேர்ந்து வந்துது-ன்னு ரெய்டு-ல கேட்டா என்ன சொல்றது-ன்னு யோசிக்கிறேன்.."

"???"

"புத்தாண்டுல புதுசா ஒரு காபி/டீ கடை திறக்கலாமுன்னு இருக்கேன்...உங்க வாழ்த்து சொல்லுங்க ஐயா..!"

"காப்பி நியூ இயர்...!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates