.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, February 16, 2007

காஞ்சி மாமுனி சரணம்

ஜகமே புகழும் ஜகத்குரு - அவர்
எளிமை என்பதன் மறுவுறு
தெய்வத் தோற்றம் தான் திருவுரு - அவர்
சரணம் பாடி அருள் பெறு

சரணம் சரணம் சுவாமிகள் சரணம்
காஞ்சி மாமுனி மலர் பதம் சரணம் (ஜகமே)

மனத்தால் குணத்தால் பெரியவர்
பண்பால் அன்பால் பெரியவர்
அவர் பதம் சரண் என்று தினம் தினம் நீ பாட
துன்பமெல்லாம் துன்பம் கொண்டுகணத்தினில் ஓடி போகும் (சரணம் சரணம்)

மதத்தின் குருவாய் இரு ந்தவர்
மதச்சார்பின்றி சிற ந்தவர்.
நடமாடும் தெய்வமாய் நமக்கெல்லாம் அருள் செய்த
புனிதரான மனிதருக்கு மாலை சூடி பூஜை செய்வோம் (சரணம் சரணம்)

என் மகனின் முதல் வருட பிற ந்த நாளுக்கு

ஆட வ ந்தான் தொட்டில் ஆட வ ந்தான்
சதயத்திலே உதயமான சூரியன் - இவன்
பண்பினிலே குளுமை தரும் ச ந்திரன்
இவனைப் பெற்றிடதான் என்ன தவங்கள் செய்தோமோ - தவங்கள் இன்றியேஇவன் பிறக்கக் கூடுமோ (ஆட வ ந்தான்)

இவன் ஒவ்வொரு அசைவிலும் - புதுஇன்பங்கள் பிறக்குது - அதைப்பாட்டினில் பாட - என்கவிதை சிறக்குது

இவன் சிரிப்பைப் பார்த்துதான் - பலகோடி பூக்களும் - தினம்
பொலிவுடன் மலர - கடும்பயிற்சி எடுக்குது

இவன் பேச்செல்லாம் புது இசையே - மூச்சுக்காற்றிலூம் புது இசையே...
இறைவன் எமக்கு உவன்து அளித்த செல்வமும் இவனன்ற்றோ (ஆட வ ந்தான்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates