.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, June 24, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 55

பொண்ணு 'கெட்டி'-காரி  !


"என்ன தரகரே ! பொண்ணு 'குண்டா' இருக்கும்-ன்னு சொல்லவே யில்லையே !"

"நான் தான் சொன்னேனே - 'பொண்ணு ரொம்ப 'கெட்டி' காரி. அவள யாரும் அசைக்கமுடியாது-ன்னு....!"

"!!!"

பல் இளி...!

"அந்த நடிகை ஸ்கூல் பக்கமே போனதில்ல-ன்னு எப்படி கரெக்டா சொன்ன‌?"

"அவங்க கொடுக்கிற பேட்டியிலெல்லாம் 'எனக்கு பல்லி பள்ளி -ன்னாலே பயம்-ன்னு சொன்னாங்களே !"

மழை வருமா?


"சார் ! எங்க ஸ்கூல் மைதானத்தில மழை வேண்டி யாகம் செஞ்சோம்...அப்படியும் மழை வரல...!"

"ஆனா, க்ளாஸ் உள்ள 'ரெயின் ரெயின் கோ அவே !'-ன்னு சொல்லித் தராங்களே ! அதான்..."

Sunday, June 18, 2017

ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா ! - ஆல்பம் பாடல்கள்

periyava 
காஞ்சி பெரியவர் மீதான எனது பாடல்கள் இப்போது ஐட்யூன்ஸ், அமேசான் மற்றும் அனைத்து முன்ணணி இணைய தளங்களிலும் கிடைக்கிறது.

பாடல் வரிகளுக்கு: http://www.paattufactory.com

கடி ஜோக்ஸ் - பாகம் - 54"நானும், அதோ போறானே பாண்டி...அவனும் சின்ன வயசில ஒரே தெருவுல பால் பாக்கெட் போட்டோம்...!"

"அப்படியா...பா(Pa)ல்ய சினேகிதன்-னு சொல்லுங்க !""நம்ம ஏட்டு ஏகாம்பரம் திடீர்-ன்னு சாமியார் ஆயிட்டாராமே !"

"போலி சாமியாரா? இல்ல போலிஸ் சாமியாரா?"

"!!!"

"ஏங்க க்ளாஸ்-க்கு போயிருக்கிற பொண்ணுக்கு ஃபோன் பண்ணி வரும்போது ஆயில் வாங்கிட்டு வரச் சொல்லாம...வீட்டுல இருக்கிற பையனை அனுப்பி வாங்கிட்டு வரச்சொல்றீங்க?"

"நீ கேட்டது 'சன்' - ஆயில் ஆச்சே !"

Saturday, June 10, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 53


"என்னங்க ஸ்பெஷன் சிக்கன் பிரியாணி 150 ரூபாய்-ன்னு வாங்கினா, அதில சிக்கனையும் காணும்...அளவும் கம்மியாத்தான் இருக்கு..."

"அது ஸ்பெஷல் சிக்கன பிரியாணி-யாம்...!""டெக்னாலஜி தெரியாதவர்கிட்ட வழி கேட்டது தப்பா போச்சு !"

"என்னாச்சு?"

"ஆப்பிள் ஸ்டோர்ஸ் இந்த ஏரியாவுல எங்க இருக்குன்னு கேட்டா, பக்கத்தில இருக்கிற பழக் கடையக் காட்டறாரே !"

"!!!!""எப்ப டாஸ் போட்டாலும் அவன் 'ஹெட்ஸ்" தான் சொல்லுவான்-ன்னு உனக்கு எப்படிடா தெரியும்?"

"ஏன்னா அவன் 'தல' யோட தீவிர ரசிகனாச்சே !"

Sunday, June 4, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 52
"உங்க அபார்ட்மெண்ட்ல செக்யூரிட்டி த்ரெட் இருக்குன்னு சொல்ற...ஆனா...காவலுக்கு இருந்த ஒரு செக்யூரிட்டியையும் வேலையிலேர்ந்து நீக்கிட்டீங்களே! ஏன்?"

"செக்யூரிட்டியால த்ரெட்-ன்னு சொல்லிதான்...!""சின்ன வயசிலயே நெடுஞ்சாலைகளில் உள்ள பை-பாஸ் எல்லாம் பஸ் ஒட்டின நம்ம பரந்தாமன், இப்போ டாக்டரா இருக்காரு..."

"என்ன டாக்டர்"

"பை பாஸ் சர்ஜன்...!"
"சுட்டு போட்டாலும் உனக்கு டான்ஸ் வராதுன்னு எங்க அம்மா சொன்னது சரிதான் போலிருக்கு...!"

"எப்படி சொல்ற?"

"தீமிச்ச காலோட டான்ஸ் க்ளாஸ் போனேன்... கால கீழயே வைக்க முடியலையே !"

"???"

Friday, June 2, 2017

இசையே ! வாழ்க !இசைக்கொரு உருவம் தரவே
 விரும்பினன் நான்முகன் ப்ரம்மா !
தசையோடு ரத்தம் எல்லாம்
  சுருதியும், லயமும் கூட்டி..
அவ்வுரு தன்னைக் கருவாய்
   சுமந்தது இசையின் அம்மா !

கலைமகள் என்னும் வாணி !
   கலைகளின் அதிபதி ராணி !
அலைகடல் புவியின் வாழ்வில்
   அமைதியில் மனதைக் கட்டும்
இசைக்கடல் வேண்டும் என்றே
   திறனெல்லாம் அவ்வுருக்கே தந்தாள் !

வயல்வெளிப் பாடல் எல்லாம்
   திரையிலேத் தேனாய் கேட்க..
அயற்சிகள் நீக்கும் புதிய‌
    அரும்பெரும் மருந்தாய் ஒன்றை
மருத்துவம் கண்டது இங்கே !
   மகத்துவம் என்னே சொல்வேன் !

விருதுகள் இவனிடம் வந்தால்
  வேகமாய் பெருமை கொள்ளும் !
சுருதிகள் இவன்கை பட்டால்...
  கிருதியாய் தேனை வார்க்கும் !
அரியதோர் பிறவியாம் ராசா !
   மனதிலே பூத்திடும் ரோசா !

ஆயிரம் ஆயிரம் ஆண்டு
   அவனியில் அவனும் வாழ்ந்து
ஆயிரம் கோடி பேரின்
   இதயத்தை இசையால் ஆண்டு
சாதனை மேலும் செய்ய‌
   சரஸ்வதி அருளும் செய்வாள் !

பிரியமுடன்...
பி.பிரசாத், 

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates