.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, May 30, 2009

ரஞ்சனி _ குகராம் திருமணத்திற்கு (28‍_ மே _ 2009)

பாடல் 1

மெட்டு: வாடா மாப்பிள்ளை...(படம்: வில்லு)

ராமன் பக்தையாய் நாள்முழுக்க சிரத்தையாய்...
ராம ஜபம் செய்யறாளே !

இது என்ன பக்தியா? வேறேதும் யுக்தியா?
கேக்குறப்போ நாணம் பாத்தியா ?

மாப்பிள்ளைக்கு ...
தொண்ட கட்டாம்...

பொண்ணு இங்கே...
கனைச்சு காட்டுறா !

கை வைத்தியம்...
செய்ய வேண்டி...

தன் மனச...
அனுப்பி வெக்குறா...! (ராமன் பத்தையா)

காதல் சொல்ல பாக்குறா...
கவிதை எழுத பாக்குறா...
இப்பெல்லாம் தனிமையதான்
அதிகம் விரும்பறா...

தனிமையிலே கனவுதான்...
கன‌வினிலே கணவந்தான்...
அப்புறமா வேறுஎன்ன‌
சொல்ல வேணுமா?

எஸ். எம். எஸ்.ஸு...
மெசேஜுல...
ஹார்ட்டு படம்...
அம்பு பாய்க்கிறா! (ராமன் பத்தையா)

அவரு ஃபோட்டோ எடுக்கறா !
கட்ட மீச வரயறா...
கட்டபொம்மன் நென்ச்சுகிட்டு
மனசில் சிரிக்கிறா...

பவரு போசு கொடுக்கிறா !
ஃபோட்டோ எடுத்து அனுப்புறா !
தொலைத்தொடர்பு வசதிக்கெல்லாம்
தேங்க்ஸ் சொல்லுறா!

வீட்டுக்குள்ளே ...
பொய்ய சொல்லி...
ஹோட்டலில மீட்டு பண்ணுறா... (ராமன் பத்தையா)

Wednesday, May 27, 2009

ராமன் தேடிய ரஞ்சனி

ரஞ்சனி _ குகராம் திருமணத்திற்கு (28‍_ மே _ 2009)

பாடல் 2

மெட்டு: தோழியா என் காதலியா
_________________________________

மோகினி மன மோகினி ‍_ குக‌
ராமனின் மன மோகினி....

யாரடி அது யாரடி? ‍_ குக‌
ராமனின் ஸ்ரீரஞ்சனி...

தூக்கத்தைக் கெடுத்துத் தொலைத்தவள் !
ஏக்கத்தை தூண்டி விட்டவள் !

கனவுலகில் மிதக்கவிட்டவள்....

ஒ ...ஒ ..ஓ ...யாரு?

பிம்பமாய் உடன் வருகிறாள் ! ‍_ புதுத்
தெம்புகள் தனைத் தருகிறாள் !

அன்பினால் பெரும் அன்பினால்
உள்ளத்தில் ஒரு கோட்டை செய்தாள் !

(பிம்பமாய் உடன் )

(மோகினி)

மண நாளை எதிர்பார்த்து...
மனதினில் படுத்தல்கள் தனைக் கொடுத்தாள் !

ரிங்டோனாய் சிணுசிணுத்து
டெலிஃபோன் பில்லினை எகிற வைத்தாள் !

பூவைப் பார்க்கும் போதும்தான்
பூவைமுகமாய்த் தெரிய வைத்தாள்..!

நாவின் மீது நீர்த்துளிகள்
ஊற்றல் எடுக்க வழி வகுத்தாள் ..!

சூறாவளியைப் போன்றவனை
செல்லத் தென்றலாய் ஆக்கிவிட்டாள்!

தீரா ஆவல் நெஞ்சினிலே...
தந்துவிட்டு தந்துவிட்டு கண்மணியாய் ஓடிவிட்டாள்..!

(மோகினி)

Friday, May 22, 2009

ஸ்ரீகணபதி கீர்த்தனை

ராகம்: தோடி

பல்லவி

காலனையும் கெலித்திடுவேன்...
காரணம் நான் உன்னடியான்...கணபதியே..கணபதியே.. (காலனையும்)

அனுப‌ல்ல‌வி

ஜால‌ம் செய்யும் அர‌க்க‌ர்க‌ளை
கால‌டியில் கிட‌த்திய‌வா (ஜால‌ம்)
உன் துணையே துய‌ர் நீக்கும்
இணைய‌டிக‌ள் பிடித்திட்டேன் (காலனையும்)

ச‌ர‌ண‌ம்

நீல‌க‌ண்ட‌ன் ச‌க்தியையும்
வ‌ல‌ம்வ‌ந்து க‌னிபெற்றாய்..
வேழ‌முக‌ ஆண்ட‌வ‌னே..
சேவ‌ற்கொடியான் மூத்த‌வ‌னே...!
உன் புக‌ழ் கானம் நான் பாடுவ‌தால்..(காலனையும்)

முருகன் கீர்த்தனை

ராகம்: ஷண்முகப்ரிய

பல்லவி
ஆறு தலையான் ஆறுதலை அருள்வான்.._ அவன்
அருட்பதம் நீ நாடி தினம் பாட...தினம் பாட.. (ஆறு தலையான்)

அனுபல்லவி
ஏறும‌யில் ஏறிவ‌ந்து ஏற்ற‌ங்க‌ளைத் த‌ந்திடுவான்..(ஏறும‌யில்)
ஏழைப் ப‌ங்காளன் அவன் எங்கள் முருகன்.....(ஆறு தலையான்)

சரணம்
வேறுதுணை ஏது என்று வேல‌வ‌னை வேண்டிக் கொண்டால்
மாறிவிடும் சோத‌னைக‌ள்... தீர்ந்துவிடும் வேத‌னைக‌ள்
ஆறுப‌டை வீடு கொண்ட ஆண்ட‌வ‌னை நீ வ‌ண‌ங்கு
ஆராத்துய‌ர் ஆற்றிடுவான் ஸ்ரீபிர‌சாத்தே...! (ஆறு தலையான்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates