.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 27, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 27



"என் பையன்... கிரிக்கெட் பந்து, கால்பந்து, ஹாக்கி பந்து-ன்னு எல்லா விளையாட்டு பந்துகளையும் வெச்சு ஆராய்ச்சி செய்யறான்....!"

"உங்க பையன் ஒரு பா(Ba)லியல் நிபுணர்-ன்னு சொல்லுங்க !"

--------------------------------------



"இந்தத் த்யேட்டர்ல, இடைவேளையின் போது, பாலும் பழமும் இலவசமா கொடுப்பாங்களா?"

"ஏன் கேட்கறீங்க?"

"பால் கனி சீட்டு வாங்கிட்டு வந்திருக்கேனே !"

--------------------------



"அந்தத் தூங்கு மூஞ்சி நடிகரை வெச்சு ஒரு படம் எடுத்தீங்களே... என்ன ஆச்சு?"

"படம் வெளியாகும்-ன்னு கனவுல கூட நினைக்க முடியல...!"

"!!!!"

Sunday, August 21, 2016

சில்வர் சிந்து - பூப்பந்து !



கிடைக்குமா பதக்கம் ஒன்று...
   எதிர்பார்ப்பு தினமும் உண்டு...
தடைகளைத் தாண்டிச் சென்று...
   வெற்றியைத் தழுவிக் கொண்டு...
புயலென வந்தாள் சிந்து...!
     போட்டியில் பதக்கம் வென்று...!

'பேட்மிட்டன்' எனும் பூப்பந்து...!
    போட்டியில் வென்றாள் சிந்து..!
'ஹேட்ஸ் ஆஃப்' சொல்லிக் கொண்டு...!
    ஹேப்பியாய் பகிர்ந்து கொள்வோம்...
உழைப்பதன் பெருமை உணர்த்தும்
   உதாரணம் மீண்டும் கண்டோம் !

'சோதனைக் காலம்' என்று
  பெண்சிசு பிறந்தால் நினைக்கும்
வேதனை நாட்டில் உண்டு...
   வேறென்ன சொல்வது இன்று...?!
சாதனை செய்வது எல்லாம்..
   பெண்மையே புரிந்தால் நன்று !

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - இறுதிக் காட்சி - 10

தொடர் நாடகத்தின் முந்தைய காட்சிகள்
காட்சி - 1
காட்சி - 2
காட்சி - 3,4
காட்சி - 5
காட்சி - 6
காட்சி - 7
காட்சி - 8,9

காட்சி-10

இடம்: முத்துவின் வீடு...
-----------------------------------------------------------------------
(முத்து தூக்கத்தில் கத்துகிறான்...)

முத்து: காப்பாத்துங்க...!காப்பாத்துங்க...!

முத்துவின் தந்தை: என்னடா முத்து இது? தூக்கத்தில இப்படி கத்தற ! என்ன ஆச்சுடா?

முத்து: அப்பா ! நான் என்ன இப்ப ஆத்துலயா இருக்கேன்...!

முத்துவின் தந்தை: என்னது ?! ஆத்துலயா? ஏன்டா..பெட் ஈரமா இருக்கா?

முத்து: ச்சே ! ஒண்ணிமில்லப்பா...! ஒரு கெட்ட கனவு கண்டேன்..!

முத்துவின் தந்தை: சரி..சரி..! சீக்கிரமா போய் பல் துலக்கிட்டு குளிச்சிட்டு வா !

முத்து: என்னது....? குளிச்சிட்டா?!!!!

Sunday, August 14, 2016

நா.முத்துக்குமார் - அஞ்சலி !




விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வருவாள்
கவிதைப் பெண்ணென்று..
நிரந்தரமாய் கண் மூடி விட்டாயோ?

இனி
அவள் தரும் பாடல் வரிகளை
யார் எமக்கு படைத்துத் தருவார் ?

ஆனந்த யாழை மீட்டி, தேசிய விருதினால்
பேரானந்தம் தந்தாய் தமிழுக்கே ...!
இன்று, சோக கீதம் மீட்ட வைத்துச் சென்றதுவும் நியாயமா?

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்...!
இளம் வயது...! எளிய பண்பு...
ஏனிந்த அவசரம்?

போகாதே ! போகாதே ! என்று சொல்கிறோம்...!


உன் பாடல் கேட்கும்போதெல்லாம்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் பண்டிகை போல்தான் !

பல்லாயிரம் பாடல்கள் நீ படைப்பாய் !
அதையெல்லாம் வரி வரியாய் ரசிக்க வேண்டும் என்றிருந்தோம் !

சொர்க்க லோகத்தில் பாடல் பூக்கள் தொடுப்போர் இல்லை போல...!
அதனால் தான் உன்னை அழைத்துக் கொண்டான் அந்த
க் கடவுள் !

உன் புகழ் ஓங்கிட உன் பாடல் பாடுவோம்...
இந்நாளும்...எந்நாளும்...

Saturday, August 13, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 8, 9

இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: மனோ, சிவாவின் தந்தை,
----------------------------------------------------------------------------------
(சிவாவின் வீட்டு வாசற் கதவ்)

டக்...டக்...டக்

சிவாவின் தந்தை: யாரது?...ஓ..மனோவா...! வாடா...

மனோ: என்னடா ஆச்சு? நேத்து அந்த முத்து குளிச்சானா?

சி.தந்தை: இல்லடா..சிவா சொன்னான்...

மனோ: நான் அப்பவே நெனச்சேன்...!

சி.தந்தை: டேய் மனோ ! அவன் குளிக்கிறான்...குளிக்காம போறான்...நீ ஏன்டா இதுல இன்வால்வ் ஆற?

மனோ: அப்படி கேட்காதடா...! ஒரு ஆசிரியனா, பசங்களோட சுத்தம், சுகாதாரம் எனக்கு ரொம்ப முக்கியம்...நீ கூட நான் வந்த உடனே என்ன கேட்ட? உங்க ஸ்கூல்ல சுத்தம் பத்தி சொல்லித் தர்றதில்லையான்னுதானே !

சி.தந்தை: சரி...ஒத்துக்கிறேன்...இப்ப என்ன செய்யணும்?

மனோ: இது கரெக்ட்...சிவா எங்கே?

சி.தந்தை: அவன் கடைக்குப் போயிருக்கான்...இப்போ வந்திடுவான்...!

மனோ: சரி..சிவா வந்த உடனே அந்த முத்துவை ஒரு ஒன்பது மணி போல ...எப்படியாவது பார்க்  பக்கம் அழைச்சிட்டு வரச்சொல்லு...!

சி.தந்தை: ஆஹா..சொல்றேன்...ஆனா எதுக்குன்னு புரியலையே !

மனோ: அவன்கிட்ட இனிமே "குளிடா..குளிடா.."ன்னு கெஞ்சினா வேலைக்கு ஆகாது. நான் ஒரு வாளி தண்ணியோட வந்து அவன் தலையில கொட்டிடலாம்-ன்னு இருக்கேன்...

சி.தந்தை: ஓ,கே...டன்...

(மனோ புறப்படுகிறான்)



காட்சி - 9

இடம்: பூங்கா

முத்து: சிவா..! இப்ப எதுக்குடா என்னை இங்கே வரச் சொன்ன?

சிவா: ஒண்ணிமில்லடா..சும்மா அப்படியே பார்க்-ல காத்து வாங்கிக்கிட்டு அப்படியே பேசலாமுன்னுதான்... (தனக்குள்) மணி ஒன்பது ஆயிடுச்சே...!

முத்து: மணி ஒன்பதா? அதுக்கு என்ன இப்போ?

சிவா: ஒண்ணுமில்லடா..எங்க அப்பா 10 மணிக்குள்ள வீட்டுக்கு வரச் சொன்னாரு...அதான்...

முத்து: சிவா..எனக்கு ஏதோ நடக்கப் போகுது போல இருக்கு...! நான் கிளம்பறேன்...!

சிவா: டேய்..! உட்காருடா !

முத்து: இல்ல...நான் போகணும்..!

சிவா: வெயிட் பண்ணுடா...ப்ளீஸ்...

முத்து: சிவா..! அங்க பாரு...கையில ஒரு வாளியோட..மனோ சாரும், உங்க அப்பாவும் வர்றாங்க...

சிவா: (தனக்குள்) அடப்பாவி...!பார்த்துட்டானே...! சமாளிப்போம்...!
முத்து..அது அவங்க இல்லடா...வேற யாரோ...

முத்து: என்ன விடுடா..நான் போகணும்...(முத்து ஓடத் துவங்குகிறான்)

சிவா: டேய் முத்து...! ஓடாத...நில்லு...நில்லுடா...!

மனோ (அருகில் வந்தவுடன்): என்னடா சிவா..! அந்த முத்து பயல தப்பிக்க விட்டுட்ட...

சிவா: அவன் திருந்தமாட்டான் சார்...! விட்டுடுங்க...!

மனோ: சரி..சரி...நீ வீட்டுக்குப் போ...நானும்...உங்க அப்பாவும் அவனைத் துரத்திகிட்டுப் போறோம்...

சிவா: சரி சார் !

(துரத்துகின்றனர்)\




சிவாவின் தந்தை: மனோ..! எனக்கு மூச்சிறைக்குது...இப்படியே ஓடினா, கொஞ்சம் தூரத்தில ஒரு ஆறு வேற வரும்...நாம எங்கேயாவது அதுல போயி விழுந்திறப் போறோம்...!

மனோ: அதுவும் சரிதான்...நாமத் திரும்பிடலாம்...!

சிவாவின் தந்தை: மனோ ! அங்க பாருடா ! அவன் ஆத்துல விழுந்துட்டான்...!

மனோ: அய்யயோ..! வா..போய் பார்ப்போம்...!

(தொடரும்...)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates