.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, February 25, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் !



​ஊற்று மன்றம் நடத்திய பொங்கல் கவிதைப் போட்டி-2016-க்கு நான் எழுதிய படைப்பு...உங்கள் பார்வைக்கு....​வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...!
----------------------


வானம்பார்த்த பூமியில நாமவாழறோம் ! - அந்த
   வருணனவன் பார்வையையே நம்பியிருக்கிறோம் !
யாகம்செஞ்சு படையல்வெச்சும் வேண்டிக்கிட்டோமே !  - பஞ்ச
   கல்யாணிக்கு கல்யாணமும் செஞ்சுவெச்சோமே!

பரவலாக பொழியுமுன்னு நினைச்சிருந்தோமே ! - மழை
    சிலமணியில் தொடர்ந்துவர தவிச்சுபுட்டோமே !
இரவலாக வாங்கியதை கொடுத்தமனுஷனே...- வந்து
   இரக்கமின்றி பிடுங்கியதைப்போல் திகைச்சுபுட்டோமே !

வெள்ளமென கரையுடைத்து ஊரில்வந்ததே... !- மழை
   நீருமட்டும் வந்திடல... அதையும்தொடர்ந்துதான்...
உள்ளம், நல்ல உள்ளங்களும் வாசல்வந்ததே ! - ஒரு
   உதவிக்குநாம் இருக்கோமுன்னு சொல்லிவந்ததே !

சாதிஎன்ன? மதமுமென்ன? கேள்விகேட்கல - நம்ம
  சோகத்துக்கு தோள்கொடுத்த முகமும்மறக்கல !
'சோதி'யென ஒளிருமந்த உதவும்மனசுதான் ! - இங்கே
  இருண்டுபோன வாழ்க்கையில வெளிச்சம்காட்டுது !

நல்லஉள்ளம் இன்னும்பல இருப்பதைச்சொல்ல - பெரும்
  வெள்ளம்வந்து ஊருக்கெல்லாம் உணர்த்தவேணுமா?
சொல்லிடுவோம் நன்றியினை அப்புனிதருக்கெல்லாம் ! - இங்கே
  தெளிந்ததுவே மானுடத்தின் பெருமைநமக்கெல்லாம் !

Saturday, February 6, 2016

ஜோக்ஸ் - பாகம் - 18

​ஸ்டாக் மார்க்கெட்டும் ஜல்லிக்கட்டும்



​ "நகரத்துல இருந்துகிட்டு, ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணிகிட்டு காசு பார்க்கிற நீங்க "ஜல்லிக்கட்டு"க்கு ஆதரவு தெரிவிச்சிருக்கிங்களே !"

"எனக்கு BULL RUN-ன்னா ரொம்பப் புடிக்கும்...! அதான்...!"

"???"

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தரகர் பாட்டு !

"அந்தக் கல்யாணத் தரகர் பாட்டுபாடினார்ன்னு அவர்கிட்ட ஏங்க சண்டை போடறீங்க?"
"பின்ன என்னங்க? மனைவி அமைவதெல்லாம் தரகர் கொடுத்த வரன்" ன்னு பாடறாரு !"

"!!!"

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிலாப் பெண்


"உங்கக் காதலியே உங்களை பக்கத்து வீட்டு பொண்ணு நிலாவையேக் கல்யாணம் ​பண்ணிக்கங்கன்னு  சொன்னாளா?"

"ஆமா ! ஏங்க நான் சொன்ன அந்த நிலாவையே கையில புடிச்சுட்டு வருவீங்களா...ன்னு கேட்டாளே !"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates