.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, January 27, 2007

என் அக்கா மகளுக்காக

ஞாயிறு ஒளி போல் வ ந்தவளே - இ ந்த
ஞாலம் உனக்குப் பிடித்துளதா?
தாயிரு கைகளில் இருப்பவளே - இ ந்த
தாய்மொழி வார்த்தைகள் புரிகிறதா? (ஞாயிறு)

தி ங்கள் முகத்தை கொண்டவளே - நீ
தின்னவே செவ்வாய் திற ந்திடுவாய்
எ ங்கள் அன்புதன் பாத்திரமே - நீ
எம்பிக் குதித்திடும் நாள் எதுவோ? (ஞாயிறு)

வியாழன் வரும்முன் வ ந்தவளே - நீ
விளையாட பொம்மைகள் நான் தரவா?
யாழின் ஓசையைத் தருபவளே - நீ
யாராரை மிகவும் விரும்புகிறாய்? - (ஞாயிறு)

வாழ்வெனும் வானின் விடிவெள்ளியே - நல்ல
வாடாத மலர் கொண்டு நான் வரவா?
பாழ்படும் கண்கள் பட்டிருக்கும் - ஒரு
பூசணி பொம்மையும் வரை ந்திடுவேன் - (ஞாயிறு)

Wednesday, January 10, 2007

PUN

பண் என்றால் பாடல் என்ற அர்த்தம் தெரி ந்திருக்கும். ஆங்கிலத்தில் PUN என்றால் ஒரு வித நகைச்சுவை பாணியை குறிக்கும். வார்தைகளை வைத்து ஜாலம் செய்வதும் இதில் அடங்கும்.இ ந்த ஆங்கில PUN பற்றித்தான் இங்கே எழுதுகிறேன்.

ஒரு நாள் என் இரண்டரை வயது மகனுடன் என் அக்கா வீட்டிற்கு போயிருந்தேன். என் அக்கா மகள் பாடம் எழுதிக்கொண்டிரு ந்தாள்.

என் மகன்: எனக்கும் ஏதணும்...பேப்பர் கொடு

என் அக்கா மகள் அவனுக்கு ஒரு பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டு மிகுந்த ஆவலாய் அவன் என்ன எழுதுகிறான் என்று பார்த்தாள். அவன் ஏதோ கிறுக்க ஆரம்பித்தான். அவள் என்னிடம் வ ந்து "மாமா..அவனுக்கு என்ன எழுத தெரியும்? என்று கேட்டாள்.

என் பதில்: அவன் alphabets ல் o எழுதுவான். numbers-ல் zero எழுதுவான். shapes-ல் circle வரைவான் என்று சொன்னதுதான்...அவள் சிரித்த சிரிப்பை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும்...

சரி..னீ ஙளும் இது போன்ற வார்த்தை விளையாட்டுக்களை பகிர் ந்து கொள்ளு ங்களேன்

Wednesday, January 3, 2007

ஷேர் ஆட்டோ

மூணு சக்கர வண்டியில எத்தனை பேர் போலாமுன்னா
மூணு நொடிக்குள் சொல்லிடலாம் - நாளோ அஞ்சோ-பதி
மூணு பேர சுமந்துகிட்டு போகுமான்னா

மூக்குல தான் விரல் வைக்கனும்...
அதோ பாரு ஆட்டோ...ஷேர் ஆட்டோ அது பேரு

சுமந்து போகுது பல பேரு
னின்னுகிட்டே ஓட்டுராரு ஓட்டுனரு...- அவரு
சீட்டுல தான் அமர் ந் திருக்கான் மூணு பேரு

மீட்டர் இல்ல பேரம் இல்ல ஆண் பெண் பேதம் இல்ல
குறைந்த பட்ச கட்டணமோ அஞ்சு ரூபாய் மேல இல்ல
மூணு சக்கர தேரு இது ஜாலம் காட்டும் பாரு
காவலரைக் கண்டால் கொஞ்சம் ஓரம் கட்டும் பாரு

Tuesday, January 2, 2007

அழகான அதிகாலை

புத்தாண்டு பொற ந்தாச்சு...என் உளமார் ந்த வாழ்த்துக்கள்..

புத்தாண்டும் கூட ஒரு புது நாளோட தான பொறக்குது..ஓவ்வொரு நாளும் விடியும் காட்சிதான் எத்தனை அழகு...அ ந்த அழகை ரசிச்சு வர்ணிக்கர பாட்டு தான் இது...

----------------

அதிகாலைப் பொழுது பிறக்கின்ற பொழுது
புதுப் பாடல் உருவாக்கும் மனது - ஒரு
புதுப் பாடல் உருவாக்கும் மனது

(அதிகாலைப் பொழுது)

துயில் நீக்கும் சேவல்தான் கூவி..-புது நாட்கதவைத் திறக்கின்ற சாவி.
ந‌ன்னாளை வரவேற்கு கோலம் - நம் நங்கையர் கைகளின் ஜாலம்

விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்

விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்

(அதிகாலைப் பொழுது)

சுப்ரபாதம் இசைத்திடும் கோவில் - முதல் தொழுகைதான் செய்யும் பள்ளிவாயில்
இரு நாதம் ஒரு சேர இன்பம் அது பொங்கிட துள்ளிடும் உள்ளம்

நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்
நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்

(அதிகாலைப் பொழுது)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates