.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, December 24, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 35"பத்லு-வோடு நண்பன் 'சமோசா மோட்டு'வையும், நடிகை ஹன்சிகாவையும் எப்படி ஒரே வாக்கியத்தில கூப்பிடறது?"

"தெரியலையே !"

"மோட்டு வா நீ !..."

"????""இருந்த சில்லரையெல்லாம் காலி...வாலெட்-ல 'ஈ' கூட இல்ல..."

"அப்ப ஈ-வாலட் -டுக்கு மாறிட்டிங்கன்னு சொல்லுங்க...!"

"!!!""அந்த டாக்டர் ஒவ்வொரு பேஷண்ட்-கிட்டேயும் ரொம்ப நேரமா பேசறாரே !"

"அவரு  Doctor இல்ல...Talk-tor"

Saturday, December 10, 2016

ஐயனை நான் மறவேன் !


பல்லவி
-------------------
மண்டல விரதம்...
மணிகண்டன் சரணம்...
மகர தீபம் இவை மூன்றும்...
இன்னொரு ஜென்மம் கொண்டு வந்தாலும்
நிச்சயம் நான் மறவேன்..!
நிச்சயம் நான் மறவேன்..!

ஐயப்ப சரணம்  ! சாமியே சரணம்  !
ஐயப்ப சரணம்  ! சாமியே சரணம்  !

சரணம் - 1
-------------------

விரதம் இருந்தும் படிகள் ஏறும் தேக பலம் தருவான் !
சரணம் சொல்லி உருகும் அடியார் துணையும் ஆகிடுவான் !

சபரி மாமலை சென்றிடும் அனுபவம் நிச்சயம் நான் மறவேன் !
நிச்சயம் நான் மறவேன்..!


ஐயப்ப சரணம்  ! சாமியே சரணம்  !
ஐயப்ப சரணம்  ! சாமியே சரணம்  !

(மண்டல விரதம்)

சரணம் - 2
----------------------

நெய்ய பிஷேகம் செய்திடும் போது மெய்யது சிலிர்த்திடுமே !
ஐயனை ஜோதி வடிவாய்க் காண ஆனந்தம் கூத்திடுமே !

சபரி வாசனின் சத்திய தரிசனம் நிச்சயம் நான் மறவேன் !

நிச்சயம் நான் மறவேன்..!

ஐயப்ப சரணம்  ! சாமியே சரணம்  !
ஐயப்ப சரணம்  ! சாமியே சரணம்  !

(மண்டல விரதம்)

---பி.பிரசாத்

Saturday, December 3, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 34

பல் டாக்டர் வேற என்ன செய்வாரு?

 

"டென்டல் டாக்டர்-கிட்ட போனியே ! என்ன செக் பண்ணினாரு?"

" 'பல்'ஸ் தான்" !

"???"தடுக்கி விழும் ஃபீல்டர்


 
"கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கடி தடுக்கி தடுக்கி விழறாரே...யார் அவரு?"

" 'ஸ்லிப்'   ஃபீல்டர் தான் !"

"???"


தலைவரா சேர்க்கும் கூட்டம்


 

"நம்ம தலைவரு, 'உடல் பலம் மிகுந்த இளைஞர்கள் 10 பேர் வேலைக்குத் தேவை'-ன்னு விளம்பரம் கொடுத்திருக்காரே ! என்ன அடியாள் சேர்க்கறாரா?"

"அட நீ வேற ! ஏ.டி.எம்-ல நின்னு பணம் எடுக்கத்தான்...!"


"!!!!"

Sunday, November 20, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 33

"டா", "டி" 

"சின்ன வயசில 'போடா..போடி'-ன்னு சண்டை போட்டுகிட்டு இருந்த ராமுவும், ஷீலாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டு போயி...இப்போ ஹோட்டல் வெச்சு நடத்தறாங்களாமே...!  இப்பவும் "டா", "டி" உண்டா?"

"இப்ப கூட இவன் போன் 'டா', பகோ 'டா' போடறான். அவ பச்ச 'டி', கிச்ச 'டி' யும் செய்யறாளாம் !"
ஜாதகமே தெரியும்"பூனைக் கண் புவனாவோட ஜாதகமே உன் கையில இருக்குன்னு சொன்னியே...அவ நட்சத்திரம் என்ன சொல்லு பார்க்கலாம்..!"

"கேட் டை ! (Cat-eye) "

"!!!"கிழிஞ்ச படம்"'கிழிஞ்ச துணி'-ன்னு ஒரு படம் எடுத்தீங்களே...ரிவ்யூ எப்படி இருக்கு?"

"படத்துல நிறைய ஓட்டை இருக்கு-ன்னு சொல்றாங்க..!"

"!!!!"

Saturday, November 12, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 32


மகுடி வித்வான் !


"அந்த நாதஸ்வர வித்வான், தன்னோட காதலி ஞாபகம் வந்தா மகுடி வாசிப்பாராமே!!! ஏன்?"

"காதலி பேரு 'நாக' லட்சுமி ஆச்சே !"


சவுண்டு பார்ட்டி !


அந்த சேனல்ல இரைச்சலா  பேசி நாட்டு நடப்பு ப்ரோக்ராம் பண்ணுவாரே...அவர் ஏதோ படத்துல நடிக்கிறாராமே...என்ன படம்?

'கத்தி' சண்டை...!ர‌வுண்டு பார்ட்டி !


ஏற்கனவே குண்டா இருந்த காமெடி நடிகர் காங்கேயம், பட வாய்ப்பு இல்லாம ஒரு வருஷம் இருந்ததுல...இன்னும் குண்டாயிட்டாரே...!

அவரு, 'இன்னும் ஒரு ரவுண்டு வருவேன்'-னு சொன்னாரே...அதான்...!வள்ளல் மன்னன் !"மன்னர் ஜாகிங் போகும் போது இளநீர் குடித்துவிட்டு 20 ரூபாய்க்கு, 500 ரூபாய் கொடுத்துவிட்டுப் போறாரே ! எவ்வளவு பெரிய வள்ளல் நம்ம மன்னர்?"


"அட நீ வேற..! இளநீர்காரன் 'சேஞ்ஜ்' தர முடியாது'ன்னு சொல்லிட்டானாம்...!"Saturday, November 5, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 31கணக்கு வெச்சு செய்யறோமுல்ல...!"மாசா மாசம் அந்தக் கடையில ஷேவ் பண்ணிகிட்டு  பணம் கொடுக்காம வர்றியே ! ஏன்?"

"அங்க‌ என்னோடு ஷேவிங்ஸ் அக்கௌண்ட் இருக்கு...!"

"???"
மூக்கு பிடிக்க..."நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டேன்-னு சொன்னீங்க...கூடவே ,..சாப்பாடு நல்லாவே இல்ல-ன்னு சொல்றிங்க?"

"மூக்கப் புடிச்சிகிட்டு சாப்பிடற அளவுக்கு துர்நாற்றம்-ன்னு சொல்ல வந்தேன் !"

"!!!!"


ஸ்ட்ரைக் !
"அந்த ஆஸ்பத்திரியிலே அடிப்படை வசதிகள் செஞ்சு  தராததுனால ஆப்பரேஷன் பண்ண முடியாது-ன்னு ஸ்ட்ரைக் பண்றாங்களாமே !"

"சர்ஜிகல் ஸ்ட்ரைக்-ன்னு சொன்னாங்களே ! இதுதானா அது...!"

"!!!"

Saturday, October 22, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 30

ஆன்லைன் மாமி

"பக்கத்து வீட்டு மாமி, காய் கறி-லேர்ந்து, மொபைல், டி.வி வரைக்கும் எல்லாமே ஆன்லைன்-ல தான் வாங்கறாங்க !"

"அப்போ அந்த மாமி, சாதாரண மாமி இல்ல...இமாமி ! (e-மாமி) !"

"!!!"


மரமா? மாமனா?

"உன்னோட வருங்கால கணவர் நீ என்ன சொன்னாலும், ரீ-ஆக்டே பண்ணாம மரம் போல‌ இருக்காரே !...ஏன்.."

"அவருதான் என் "wood" -பீ ஆச்சே !"

"!!!"விளையாட்டுப் பிள்ளை

"நான் 'படி படி'ன்னு சொன்னாலும் படிக்காம என் பையனும் 'படி படி'-ன்னு விளையாடிகிட்டிருக்கான் !"

"அப்படி என்ன விளையாடறான்?"

"கபடி-தான்..!"


Saturday, October 15, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 29சர்ஜிகல் ஸ்ட்ரைக்

"மன்னா ! மன்னா ! அண்டை நாட்டு மன்னன் படையெடுத்து நம் நாட்டு எல்லைக்குள் புகுந்துவிட்டான் !"

"என்னது? அப்படியா? உடனே என் அந்தப்புரத்திற்கு எட்டு கட்ட பாதுகாப்பை ஏற்பாடு செய்யுங்கள் !"

"???"ஜிங்கு ஜாங்கு ஜிங் !

"கச்சேரியிலே 'ஜிங் ஜாங்'-ன்னு வாசிப்பாரே நம்ம ஜால்ரா வித்வான் "கிரி", அவருக்கு தீபாவளிக்கு என்ன ஸ்வீட் வாங்கிக் கொடுக்கலாம்?"

"ஜாங்கிரி தான் !"
ஆப்பா டக்கார்"அப்பாடக்கர்-ன்னு கேள்விபட்டிருக்கேன். நம்ம அப்பாசாமிய ஏன் 'ஆப்பா டக்கார்'ன்னு சொல்றாங்க?"

"அதுவா...அவரு வெளியில எங்க போகணும்-னாலும், "App"-ல 'டக்'ன்னு கார் 'புக்' பண்றாரே...! அதான்...!"

"!!!"

Sunday, September 25, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 28"சதுரம், செவ்வகம், முக்கோணம் -ன்னு ஷேப்ஸ் பாடத்தில வெச்ச டெஸ்ட்டுல என்னடா மார்க்கு?"

"வட்டம்-பா !"

"???"

"ஆடித் தள்ளுபடியில வாங்கின கார் எப்படி இருக்குங்க?"

"ஆடிப் போயி..இப்போ தள்ளும் படி இருக்கு...!"

"!!!"
"தொழில் செய்யறோமுன்னு நாலு பேரா சேர்ந்து 'லோன்' வாங்கினிங்களே...என்ன ஆச்சு?"

"லோனைத் திருப்பிக் கட்டணும்-ன்னு சொன்னவுடனே, என்ன லோன்லியா விட்டுட்டு போயிட்டாங்க...!"

"!!!"

Saturday, August 27, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 27"என் பையன்... கிரிக்கெட் பந்து, கால்பந்து, ஹாக்கி பந்து-ன்னு எல்லா விளையாட்டு பந்துகளையும் வெச்சு ஆராய்ச்சி செய்யறான்....!"

"உங்க பையன் ஒரு பா(Ba)லியல் நிபுணர்-ன்னு சொல்லுங்க !"

--------------------------------------"இந்தத் த்யேட்டர்ல, இடைவேளையின் போது, பாலும் பழமும் இலவசமா கொடுப்பாங்களா?"

"ஏன் கேட்கறீங்க?"

"பால் கனி சீட்டு வாங்கிட்டு வந்திருக்கேனே !"

--------------------------"அந்தத் தூங்கு மூஞ்சி நடிகரை வெச்சு ஒரு படம் எடுத்தீங்களே... என்ன ஆச்சு?"

"படம் வெளியாகும்-ன்னு கனவுல கூட நினைக்க முடியல...!"

"!!!!"

Sunday, August 21, 2016

சில்வர் சிந்து - பூப்பந்து !கிடைக்குமா பதக்கம் ஒன்று...
   எதிர்பார்ப்பு தினமும் உண்டு...
தடைகளைத் தாண்டிச் சென்று...
   வெற்றியைத் தழுவிக் கொண்டு...
புயலென வந்தாள் சிந்து...!
     போட்டியில் பதக்கம் வென்று...!

'பேட்மிட்டன்' எனும் பூப்பந்து...!
    போட்டியில் வென்றாள் சிந்து..!
'ஹேட்ஸ் ஆஃப்' சொல்லிக் கொண்டு...!
    ஹேப்பியாய் பகிர்ந்து கொள்வோம்...
உழைப்பதன் பெருமை உணர்த்தும்
   உதாரணம் மீண்டும் கண்டோம் !

'சோதனைக் காலம்' என்று
  பெண்சிசு பிறந்தால் நினைக்கும்
வேதனை நாட்டில் உண்டு...
   வேறென்ன சொல்வது இன்று...?!
சாதனை செய்வது எல்லாம்..
   பெண்மையே புரிந்தால் நன்று !

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - இறுதிக் காட்சி - 10

தொடர் நாடகத்தின் முந்தைய காட்சிகள்
காட்சி - 1
காட்சி - 2
காட்சி - 3,4
காட்சி - 5
காட்சி - 6
காட்சி - 7
காட்சி - 8,9

காட்சி-10

இடம்: முத்துவின் வீடு...
-----------------------------------------------------------------------
(முத்து தூக்கத்தில் கத்துகிறான்...)

முத்து: காப்பாத்துங்க...!காப்பாத்துங்க...!

முத்துவின் தந்தை: என்னடா முத்து இது? தூக்கத்தில இப்படி கத்தற ! என்ன ஆச்சுடா?

முத்து: அப்பா ! நான் என்ன இப்ப ஆத்துலயா இருக்கேன்...!

முத்துவின் தந்தை: என்னது ?! ஆத்துலயா? ஏன்டா..பெட் ஈரமா இருக்கா?

முத்து: ச்சே ! ஒண்ணிமில்லப்பா...! ஒரு கெட்ட கனவு கண்டேன்..!

முத்துவின் தந்தை: சரி..சரி..! சீக்கிரமா போய் பல் துலக்கிட்டு குளிச்சிட்டு வா !

முத்து: என்னது....? குளிச்சிட்டா?!!!!

Sunday, August 14, 2016

நா.முத்துக்குமார் - அஞ்சலி !
விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வருவாள்
கவிதைப் பெண்ணென்று..
நிரந்தரமாய் கண் மூடி விட்டாயோ?

இனி
அவள் தரும் பாடல் வரிகளை
யார் எமக்கு படைத்துத் தருவார் ?

ஆனந்த யாழை மீட்டி, தேசிய விருதினால்
பேரானந்தம் தந்தாய் தமிழுக்கே ...!
இன்று, சோக கீதம் மீட்ட வைத்துச் சென்றதுவும் நியாயமா?

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்...!
இளம் வயது...! எளிய பண்பு...
ஏனிந்த அவசரம்?

போகாதே ! போகாதே ! என்று சொல்கிறோம்...!


உன் பாடல் கேட்கும்போதெல்லாம்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் பண்டிகை போல்தான் !

பல்லாயிரம் பாடல்கள் நீ படைப்பாய் !
அதையெல்லாம் வரி வரியாய் ரசிக்க வேண்டும் என்றிருந்தோம் !

சொர்க்க லோகத்தில் பாடல் பூக்கள் தொடுப்போர் இல்லை போல...!
அதனால் தான் உன்னை அழைத்துக் கொண்டான் அந்த
க் கடவுள் !

உன் புகழ் ஓங்கிட உன் பாடல் பாடுவோம்...
இந்நாளும்...எந்நாளும்...

Saturday, August 13, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 8, 9

இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: மனோ, சிவாவின் தந்தை,
----------------------------------------------------------------------------------
(சிவாவின் வீட்டு வாசற் கதவ்)

டக்...டக்...டக்

சிவாவின் தந்தை: யாரது?...ஓ..மனோவா...! வாடா...

மனோ: என்னடா ஆச்சு? நேத்து அந்த முத்து குளிச்சானா?

சி.தந்தை: இல்லடா..சிவா சொன்னான்...

மனோ: நான் அப்பவே நெனச்சேன்...!

சி.தந்தை: டேய் மனோ ! அவன் குளிக்கிறான்...குளிக்காம போறான்...நீ ஏன்டா இதுல இன்வால்வ் ஆற?

மனோ: அப்படி கேட்காதடா...! ஒரு ஆசிரியனா, பசங்களோட சுத்தம், சுகாதாரம் எனக்கு ரொம்ப முக்கியம்...நீ கூட நான் வந்த உடனே என்ன கேட்ட? உங்க ஸ்கூல்ல சுத்தம் பத்தி சொல்லித் தர்றதில்லையான்னுதானே !

சி.தந்தை: சரி...ஒத்துக்கிறேன்...இப்ப என்ன செய்யணும்?

மனோ: இது கரெக்ட்...சிவா எங்கே?

சி.தந்தை: அவன் கடைக்குப் போயிருக்கான்...இப்போ வந்திடுவான்...!

மனோ: சரி..சிவா வந்த உடனே அந்த முத்துவை ஒரு ஒன்பது மணி போல ...எப்படியாவது பார்க்  பக்கம் அழைச்சிட்டு வரச்சொல்லு...!

சி.தந்தை: ஆஹா..சொல்றேன்...ஆனா எதுக்குன்னு புரியலையே !

மனோ: அவன்கிட்ட இனிமே "குளிடா..குளிடா.."ன்னு கெஞ்சினா வேலைக்கு ஆகாது. நான் ஒரு வாளி தண்ணியோட வந்து அவன் தலையில கொட்டிடலாம்-ன்னு இருக்கேன்...

சி.தந்தை: ஓ,கே...டன்...

(மனோ புறப்படுகிறான்)காட்சி - 9

இடம்: பூங்கா

முத்து: சிவா..! இப்ப எதுக்குடா என்னை இங்கே வரச் சொன்ன?

சிவா: ஒண்ணிமில்லடா..சும்மா அப்படியே பார்க்-ல காத்து வாங்கிக்கிட்டு அப்படியே பேசலாமுன்னுதான்... (தனக்குள்) மணி ஒன்பது ஆயிடுச்சே...!

முத்து: மணி ஒன்பதா? அதுக்கு என்ன இப்போ?

சிவா: ஒண்ணுமில்லடா..எங்க அப்பா 10 மணிக்குள்ள வீட்டுக்கு வரச் சொன்னாரு...அதான்...

முத்து: சிவா..எனக்கு ஏதோ நடக்கப் போகுது போல இருக்கு...! நான் கிளம்பறேன்...!

சிவா: டேய்..! உட்காருடா !

முத்து: இல்ல...நான் போகணும்..!

சிவா: வெயிட் பண்ணுடா...ப்ளீஸ்...

முத்து: சிவா..! அங்க பாரு...கையில ஒரு வாளியோட..மனோ சாரும், உங்க அப்பாவும் வர்றாங்க...

சிவா: (தனக்குள்) அடப்பாவி...!பார்த்துட்டானே...! சமாளிப்போம்...!
முத்து..அது அவங்க இல்லடா...வேற யாரோ...

முத்து: என்ன விடுடா..நான் போகணும்...(முத்து ஓடத் துவங்குகிறான்)

சிவா: டேய் முத்து...! ஓடாத...நில்லு...நில்லுடா...!

மனோ (அருகில் வந்தவுடன்): என்னடா சிவா..! அந்த முத்து பயல தப்பிக்க விட்டுட்ட...

சிவா: அவன் திருந்தமாட்டான் சார்...! விட்டுடுங்க...!

மனோ: சரி..சரி...நீ வீட்டுக்குப் போ...நானும்...உங்க அப்பாவும் அவனைத் துரத்திகிட்டுப் போறோம்...

சிவா: சரி சார் !

(துரத்துகின்றனர்)\
சிவாவின் தந்தை: மனோ..! எனக்கு மூச்சிறைக்குது...இப்படியே ஓடினா, கொஞ்சம் தூரத்தில ஒரு ஆறு வேற வரும்...நாம எங்கேயாவது அதுல போயி விழுந்திறப் போறோம்...!

மனோ: அதுவும் சரிதான்...நாமத் திரும்பிடலாம்...!

சிவாவின் தந்தை: மனோ ! அங்க பாருடா ! அவன் ஆத்துல விழுந்துட்டான்...!

மனோ: அய்யயோ..! வா..போய் பார்ப்போம்...!

(தொடரும்...)

Friday, July 29, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 7

இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்து, மனோ, முத்துவின் தந்தை, சிவா
-----------------------------------
மு.தந்தை: டேய் முத்து ! (கெஞ்சலாக) இதோ பாரு ! முத்து, குளிக்கப் போறான், முத்து குளிக்கப் போறான்-ன்னு நீ என்னவோ கடல்ல இறங்கி முத்து குளிக்கப் போற மாதிரி, நீ குளிக்கறதைப் பார்க்க உங்க சாரு, உன் நண்பன் சிவா, அவனோட அப்பா எல்லாரும் வந்திருக்காங்க...! அவங்களுக்காவது இன்னிக்கு ஒரு நாள் குளிடா...! ப்ளீஸ்...!

முத்து: மாட்டேன்-பா !

மனோ: சார் ! நீங்க இருங்க...! நான் சொல்லி பார்க்கிறேன்...! இதோ பாரு முத்து...! இதுபோல நாலு அஞ்சு நாளா குளிக்காம இருந்தா உடம்புல அரிப்பு, சொறி எல்லாம் வந்து துர் நாற்றம் வரும்...! நீ நல்ல பையனாச்சே ! போ...! போய் குளி...!

மு.தந்தை: என்னடா...சார்-எல்லாம் இருக்காங்க-ன்னு வெட்கப்படறியா?

முத்து: ஆமாம்பா !

சி.தந்தை: வா ! மனோ...! நம்ம போகலாம்...அவனுக்கு ஷை-யா இருக்கு போல...!

(அனைவரும் வெளியேறுகின்றனர்)

மு.தந்தை:: முத்து...! குளிக்கிறியா? முடிஞ்சா குளி..! சரியா...!

முத்து: அப்பா ! நான் உங்ககிட்ட உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்திடிச்சு !

மு.தந்தை: உண்மையா? என்னடா அது...? சொல்லு...சொல்லு...!

முத்து: அப்பா ! ஒரு அஞ்சு நாள் முன்னாடி நான் ஒரு ஜோசியக்காரனைப் பார்த்தேன்...! அவன் சொன்னபடி எனக்கு தண்ணியிலதான் கண்டமாம்...

மு.தந்தை: அப்படியா?

முத்து: அன்னிலேர்ந்துதான் என்பேரு-ல கூட "ஜலம்" இருக்கக்கூடாது-ன்னு, என் பேரை முத்து-ன்னு மாத்திகிட்டேன்...!தாகத்துக்கு இப்போ நான் தண்ணி கூட குடிக்கிறது இல்ல..பன்னீர் சோடாதான் குடிக்கிறேன்...!

மு.தந்தை: அதுக்காக, இந்த வெயில் காலத்துல குளிக்காம இருக்க முடியுமா?

முத்து: என்னப்பா செய்யறது? நான் உயிரோட...

மு.தந்தை:(குறுக்கிட்டு) வேண்டாம்-பா - அத மட்டும் சொல்லாத...நீ நல்லாயிருக்கணும்..அது போதும்... நீ குளிக்கவே வேணாம்...இங்கே வந்துடுப்பா !

(தொடரும்)

Monday, July 25, 2016

( கபாலி ) கடி ஜோக்ஸ் - பாகம் - 26

டேய் கபாலி ! வேலை தேடி இன்டர்வ்யூக்குப் போனியே...! என்னாச்சுடா?

"உன் பேர் என்னன்னு கேட்டாங்க...பேரைச் சொன்னேன்...வெளிய அனுப்பிட்டாங்க...!"

"அப்படி என்னடா சொன்ன?"

"கபாலி-டா..........! ந்னு சொன்னேன், "டா" போட்டு பேசறேன்-னு அனுப்பிட்டாங்க..!"

--------------------


"ஏட்டையா ! ரிலீஸ் ஆகிப்போன கபாலி, மூணு மணி நேரத்துக்குள்ள வேறு ஒரு கேஸ்-ல உள்ள வந்துட்டானே ! என்ன செஞ்சான்? ஏதாச்சும் சொன்னானா?"

"திரும்பி வந்துட்டேன்-னு சொல்லு...ன்னு சொன்னான்..!"

----------------------------------------------


கபாலி ...! நீ கத்தியால குத்தின கந்தசாமி ஆஸ்பத்திரியிலே சீரியஸா இருக்காராம்..!"

"மகிழ்ச்சி....!"

"??????????????????"
===========================================================

பக்கத்து வீட்டு கொள்ளைப் பக்கம் தீப்பிடிச்சிருக்கு-ன்னு ஃபயர் சர்வீசுக்கு சொன்னியா?"

சொன்னேன்...ஆனா வரமாட்டாங்களாம்.."

"அப்படி என்னடா சொன்ன?"

"நெருப்புடா-ன்னு சொன்னேன்...பாட்டு பாடறேன்-னு நெனச்சுகிட்டாங்க போல..."Saturday, July 16, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 6

காட்சி - 6

இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்துவின் தந்தை, சிவாவின் தந்தை, மனோ
-----------------------------------------------------------------------------------------------------

குரல்: முத்து...முத்து...(டக்...டக்.. - கதவு தட்டும் சத்தம்...)

முத்துவின் தந்தை: யாரு? முத்து இல்லையே ! நீங்க யாரு?

மனோ: நான் முத்து படிக்கிற ஸ்கூல்ல டீச்சர்...

மு. தந்தை: ஓ ! அப்படியா...வாங்க...!

சிவாவின் தந்தை: நான் முத்துவோட நண்பன் சிவாவோட அப்பா...!

மு.தந்தை: ஓ ! அப்படியா..! வாங்க...! உட்காருங்க...!என்ன விஷயம்?

மனோ: சார் ! முத்து எங்க போயிருக்கான்?

மு.தந்தை: அவன் எங்கயோ வெளியில போயிருக்கான் சார் !

மனோ: என்ன சார் இது...பையன் காலையில எழுந்து எங்க போறான், என்ன செய்யறான்-னு கவனம் வெச்சுகிறது இல்லையா?

மு.தந்தை: இவனைப் பத்தி எனக்கு இந்த விஷயத்தில கவலை இல்லை சார் ! அவன் ஒரு வெகுளி ! ரொம்ப நல்ல பையன்...!

மனோ: அவன் "வெகுளி"-ன்னு எனக்கும் தெரியும் சார்...அதுக்காக அவனை வெயில் காலத்துல கூட குளி-ன்னு சொல்ல மாட்டீங்களா?

மு.தந்தை: ஓ ! அங்க வர்றீங்களா ! நான் எவ்ளவோ சொல்லி பாத்துட்டேன் சார் ! அவன் கேட்கமாட்டேங்கிறான்...!
எனக்கு ஒரே புள்ள...ரொம்ப செல்லம்..அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா...(உணர்ச்சி வயப்படுகிறார்)

மனோ: ஹலோ..ஹலோ...சார் ! இருங்க..!ரிலாக்ஸ் ! இன்னிக்கு நாட்டுல வளர்ற தீவிரவாத போக்குக்கு இதமாதிரியான பேரண்டிங்கும் ஒரு காரணம்-ன்னு சொல்லுவேன் ...! ஒரே புள்ள..ஒரே பொண்ணு...ன்னு ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி பசங்களுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்க்கிறதுனாலதான், அவங்க தன் இஷ்டத்துக்கு என்னன்னவோ பண்ணி தீவிரவாதியா கூட மாறிடறாங்க...!

மு..தந்தை: சார் ! என்ன சார் இது...! பையன் ஏன் குளிக்க-லன்னு கேட்கலைன்னா தீவிரவாதி ஆயிடுவான்னு புது தியரி சொல்றீங்க?

மனோ: சார் ! உங்க பையன் தீவிரவாதி ஆயிடுவான்னு நான் சாபம் எல்லாம் கொடுக்கல..அவன் நல்லவனா வரணும்ன்னும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் ! நீங்களும் கொஞ்சம் பொறுப்பான அப்பாவா நடந்துக்கங்க...!

மு.தந்தை: உங்க ஆசிக்கும், கரிசனத்துக்கும் ரொம்ப நன்றி சார்...! நாளைக்கு காலையில அவன..நானே...அமுக்கி உட்காரவெச்சு குளிக்க வெச்சிடறேன்...நீங்க என்ன சாப்பிடறீங்க?

மனோ: எதுவும் வேணாம் சார்...அப்ப..நாங்க கிளம்பறோம்...நாளைக்கு காலையில வருவேன் சார்...உங்க பையன் குளிச்சிட்டானான்னு செக் பண்ணுவேன்...

மு.தந்தை: சரி சார் ! கண்டிப்பா வாங்க...!

(தொடரும்...)


Saturday, July 9, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 5

காட்சி - 5
இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை, மனோகரன்
------------------------------------------------------------------------------------------------
தந்தை: என்னடா சிவா...! இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற? என்னாச்சு?

சிவா: அப்பா ! அப்பா ! நம்ம வீட்டுக்கு சி.எம். வர்றாரு...!

தந்தை: chief minister எதுக்குடா நம்ம வீட்டுக்கு வரணும்?

சிவா: அப்பா ! CM-ன்னு நான் சொன்னது, எங்க ஸ்கூல் சாரு...மனோகரன் சாரு..

தந்தை: ஓ ! அவனா..! வரட்டும் ! வரட்டும் !

சிவா: என்னப்பா இது? சாரை போயி அவன் இவன்னு சொல்ற?

தந்தை: அவன் உனக்குதான்டா சாரு ! எனக்கு friend...நாங்க ரெண்டு பேரும் டிகிரி வரைக்கும் ஒண்ணா படிச்சவங்க..!

சிவா: அப்பா..! சார் வந்தாச்சு ...!

தந்தை: வாடா மனோ ! வா ! என்ன திடீர்ன்னு இந்த பக்கம்?  எப்படி இருக்க?

மனோ: ஒண்ணுமில்லடா..! இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்...அப்படியா பார்த்துட்டு போகலாமுன்னுதான்...

தந்தை: நல்லது..என்ன சாப்பிடற?

மனோ: குடிக்க ஜில்-லுனு தண்ணி மட்டும் குடு...!

தந்தை: சிவா ! சாருக்கு தண்ணி கொடுப்பா !  அப்புறம் என்ன...வீட்டுல எல்லாம் சௌக்கியம்தான..?

(சிவா தண்ணீருடன் வருகிறான்)

சிவா: சார் ! வாட்டர்...

மனோ: தாங்க்ஸ்...ம்...சிவா கொடுத்தது செம ஐஸ்...! (சிரிக்கிறார்) சரி சிவா..! லீவெல்லாம் எப்படி போகுது? useful-ஆ ஏதாச்சும் செஞ்சியா?

சிவா: லீவு ஜாலியா போகுது சார் !

மனோ: உன்னோட close friend ஒருத்தன் இருப்பானே ! அவன் பேரு என்ன? ம்...அருணாச்சலம்...அவன் என்ன செய்யறான்?

சிவா: சார் ! அவன் பேரு இப்போ அருணாசலம் இல்ல..முத்து...

மனோ: அவனே பேரை மாத்திகிட்டானா? ஏன்?

சிவா: தெரியல சார்...!

தந்தை: மனோ ! அந்தப் பய முழுகாம இருக்கிற சேதி தெரியுமா உனக்கு?

மனோ: என்னடா ஜோக் அடிக்கிற?

சிவா: சார் .. அவன் குளிச்சு 4 நாள் ஆவுது...அதான் அப்பா சொல்றாங்க...

மனோ: ஏன் ? என்னாச்சு? அவங்க வீட்டுல தண்ணி கஷ்டமா?

தந்தை: தண்ணி கஷ்டமெல்லாம் இல்ல...அவனுக்கு இஷ்டம் இல்ல அவ்ளோதான்..

மனோ: என்ன சொல்ற நீ?

தந்தை: அது என்னவோ தெரியலடா..! குளிச்சா தான் செத்து போயிடுவோம்-னு சொல்லிகிட்டுத் திரியறான் அவன்...

மனோ: அப்படியா...அவன் நல்ல பையனாச்சே..! வெகுளிப் பையன்...

தந்தை: எனக்கு என்னவோ அவன் வெகுளி இல்ல..ஒரு பித்துக்குளின்னு தோணுது...! (சிரிக்கிறார்)

மனோ: சரி...என்னோட கொஞ்சம் வர்றியா இப்ப?

தந்தை: எங்கடா மனோ?

மனோ: அந்த முத்து வீட்டுக்குப் போகலாம்...

தந்தை: ஓ ! போலாமே ! சிவா...! வீட்டைப் பார்த்துக்கோப்பா...! நான் மனோவோட போயிட்டு வர்றேன்...

(தொடரும்...)

Sunday, July 3, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 3 & 4

காட்சி - 3

பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை
-------------------------------------------------------------------------------------------------------
சிவா: அப்பா ! அந்த முத்து ரொம்ப மோசம்பா !

தந்தை: ஏன்டா ! என்னடா செஞ்சான் அவன்?

சிவா: அவன் குளிக்கவே மாட்டேன்-ங்கிறாம்பா ! குளிச்சு 4 நாள் ஆவுது..

தந்தை: ஐயய...இது என்னடா கதை? எப்படிடா இந்த புழுக்கத்திலயும்...

சிவா: அப்பா ! அவன் ஒரு வெகுளி ப்பா ! அவன எப்படியாவது திருத்தணும்பா ! அவன், குளிச்சா தன்னோட உயிர் போயிடும்-னு நினைக்கிறான்-பா...அது ஏம்பா?

தந்தை: அவன் எதையும் சீக்கிரமா நம்பிடற ஆளுடா...! எவனாவது அவன்கிட்ட, "நீ குளிச்சா உயிர் போயிடும்-"ன்னு விளையாட்டா சொல்லியிருப்பான்...சரி...சரி...நாம என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்...இப்ப போயி வேலைய பாரு...

சிவா: சரிப்பா !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காட்சி - 4

பாத்திரங்கள்: முத்து, அவன் தந்தை
இடம்: முத்துவின் வீடு
-------------------------------------------------------------------------------------------------------


தந்தை: முத்து ! முத்து ! இருடா  கொஞ்ச நேரம் ! இதோ பூசைய முடிச்சிட்டு வர்ரேன்...! அதுக்குள்ள கிளம்பிட்டயா?

(பூசையிலிருந்து வெளியே வந்து)

தந்தை: முத்து...இங்க பாருடா...! இன்னிக்கு வேலைக்காரி வரல..நீ பாட்டுக்கு ட்ரெஸ்-ஸ கழட்டிபோட்டுட்டு போயிடாதே ! கையோட தோச்சிட்டு வா !

முத்து: இப்பவே சொன்னதுக்கு தாங்க்ஸ்-பா ! நான் இன்னும் ட்ரெஸ் மாத்திக்கல..நீங்க சொல்லிட்டீங்க...இனிமே...இந்த ட்ரெஸ்-லயே இன்னிக்கு இருந்திடறேன்...!

தந்தை: டேய் ! வெயிலுக்கும் அதுக்கும் ரொம்ப ஸ்மெல் ஆகும்டா..!

முத்து: அப்போ எனக்கு ஃபாரினி செண்ட் வாங்கிக் கொடு...!

தந்தை: செண்ட் போட்டுகிட்டு போனாலும் போவ...குளிக்க மாட்ட போலிருக்கு...! எல்லாம் என் நேரம்...!

முத்து: அப்பா ! நான் உயிரோட இருக்கணுமா...வேணாமா?

தந்தை: (சலிப்புடன்) ஆமாம்..இத ஒண்ணு சொல்லி பயம் காட்டுடா...போ ! போ! எப்படியாவது போ...!

முத்து: எப்படியாவது எப்படிப்பா போகறது...இப்படித்தான் வெளியில போக முடியும்...
(சொல்லியவாரே வாசல் பக்கம் செல்கிறான்)

தந்தை: (தனக்குள்) கடவுளே! இந்த பையனுக்கு நல்ல புத்தியக் கொடு...!

(தொடரும்)

Tuesday, June 28, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 2

காட்சி - 2

இடம்: ஒரு பூங்கா
பாத்திரங்கள்: முத்து, நண்பன் சிவா
-------------
முத்து: டேய் சிவா ! என்னடா இது ! மாட்ச் - பார்க்கப் போகாம இங்க வந்து உட்கார்ந்திருக்க?
சிவா: சும்மாதான்டா ! வீட்டுல கரண்ட் இல்ல...! அதான் இங்க வந்து காத்து வாங்கலாமுன்னு...இங்க பாரு...இந்த பார்க்க-ல இருக்கிற பூவெல்லாம் என்ன வாசனை பாரு...!

(முத்து அருகில் வருகிறான்)

சிவா: டேய் ! என்னடா இது ! திடும்-ன்னு ஒரே நாத்தமாயிருக்கு !

முத்து: ம்...எனக்கு ஒண்ணும் தெரியல...!

சிவா: ம்...எனக்குத் தெரிஞ்சுபோச்சு ! வெற்றிகரமா 4-வது நாளா இன்னிக்கும் நீ குளிக்கல...! அதானே ?

முத்து: போடா டேய் !

சிவா : ஏன்டா முத்து ! இப்படி புழுக்கத்துல உன்னால எப்படிடா குளிக்காம இருக்க முடியுது?

முத்து: சிவா ! நான் உயிரோடு இருக்கனும்னா, என்னால குளிக்க முடியாது...

சிவா: குளிச்சா செத்து போயிடுவ-ன்னு உனக்கு யார்-டா சொன்னா?

முத்து: சிவா...தேவையில்லாம ஏதேதோ கேட்காத...நான் கிளம்பறேன்...!

சிவா: உன்னோட இந்த பழக்கத்தினாலேயே உன்னோட நண்பர்கள் எல்லாம் உன்னை விட்டு போகப்போறாங்க பாரு !

முத்து: அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லடா ! முதல்ல நான் உயிரோட இருக்கணும் ...! அத விடு...நான் இப்போ மேட்சுக்குப் போறேன்...நீ வர்றியா இல்லையா?

சிவா: இல்லடா..! நான் வரலே ! வீட்டுக்குப் போகணும் !

முத்து: சரிடா ! நான் கிளம்பறேன்...பாக்கலாம்...

(செல்கிறான்)

சிவா: (மனசுக்குள்) ச்சே ! இவனத் திருத்தவே முடியாது போலிருக்கு ! ஆனாலும் நல்ல பையன்...இவன பத்தி நம்ம அப்பாகிட்ட பேசிப்பார்ப்போம் ...!

Sunday, June 26, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம்

காட்சி - 1
இடம்: முத்துவின் வீடு
------------------------------------------

முத்துவின் தந்தை: டேய்  அருணாசலம் ! அருணாசலம், என்னடா இது? காலையிலேயே எழுந்துகிட்டு, ட்ரெஸ் பண்ணிகிட்ட கிளம்பிட்டே !

முத்து: அப்பா ! உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? என் பேரு அருணாசலம் கிடையாது...முத்து...

தந்தை: டேய் கண்ணா ! அருணாசலம்-ங்கிறது உங்க தாத்தா பேருடா...!

முத்து: இருந்தா என்ன? முத்து கூடத்தான் என்னோட இன்னொரு தாத்தா பேரு...அப்புறமென்ன...அருணாசலம், விருதாசலம்-ன்னு பேரு...

தந்தை: சரி...சரி...மூணு நாளா முழுகாம இருந்தியே ! இன்னிக்கு முழ்கிட்டியா? இல்ல முழுகாமலேயே ட்ரெஸ் பண்ணிகிட்டு கிளம்பிட்டியா?

முத்து: இதோ பாருங்க அப்பா ! நான் உயிரோட இருக்கணும்னா என்னை இனிமே குளிக்க சொல்லதீங்க...

தந்தை: அய்யய்யோ ! முத்து என்னடா சொல்ற?

முத்து: அப்பா ! எல்லாம் நேரம் வரும்போது விவரமா சொல்றேன்...

தந்தை: என்னவோடா முத்து ! நீ நல்லாயிருந்தா சரி...ம்...உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரல...ஏதோ 21 வயசுக்கு மேல ஆனா தானா பொறுப்பு வராதா-ன்னு பார்க்கிறேன்...படிப்பு கூட ஓபன் யுனிவர்சிட்டியில படிச்சுக்கலாம்...

முத்து: ஓபன் யுனிவர்சிட்டி-ன்னா என்னப்பா?

தந்தை: திறந்த நிலைப் பல்கலைக் கழகம்...

முத்து: போப்பா ! நான் அங்கெல்லாம் படிக்க மாட்டேன்...மழை பேஞ்சா...நனைஞ்சிடுவேன் ...திறந்தே இருக்கில்ல...!

தந்தை: ஐயோ...கர்மம்டா ! உன்னை பெத்ததுக்கு...

முத்து: சரி..சரி..நான் வர்ரேன்-பா...!

தந்தை: டேய் ! முத்து..இருடா...எங்கடா போற?

முத்து: மேட்ச்-பார்க்க போறேன்-பா...

தந்தை: என்னது மேட்ச்சா...டேய் ! அதெல்லாம் நாங்க பார்த்து அந்த அந்த நேரத்தில செய்வோம்டா..

முத்து: அப்பா ! நான் கிரிக்கெட் மேட்ச் சொன்னேன்பா... நான் இப்ப சொல்லட்டுமா...உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரல...!

தந்தை: டேய் ! என்ன சொன்ன? நில்லுடா...(முத்து ஓடிவிடுகிறான்)...(தனக்குள்) ம்...எல்லாம் என் நேரம்...

(ரேடியோவில்..."நிலையத்தில் தற்போது நேரம் சரியாக ஆறு மணி ஐம்பது நிமிடம்...")

தந்தை: ச்சே ! இது வேற...முதல்ல இந்த ரேடியோவை நிறுத்துவோம்...!

(தொடரும்....)

Saturday, May 21, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 25

 தொழில் போல மனசு !

"நம்ம பொரி வியாபரி பொன்னம்பலத்துக்கு வெள்ள மனசுங்க ! ரொம்ப நல்லவரு"

"பொரிசுத்தமானவர்-ன்னு சொல்லுங்க !"


---------------------------------------------------------------கத்ரி-னா?!
"ஏங்க இந்த கத்ரி-ல நம்ம பையனுக்கு மொட்டை அடிக்கலாமா?"

"கத்திரி என்னா கத்தியால கூட அடிச்சிடலாம் !" ______________________________________________________


டெபாசிட்
"நம்ம தலைவரு பேங்க்-ல போட்டிருந்த ஒரு லட்ச ரூபா FD-யை வேற யாரோ கையெழுத்து போட்டு வாங்கிகிட்டாங்களாம் !"

"பேங்க்-லயும் டெபாசிட் போச்சா ....?!!"

Monday, May 16, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 24

ஆங்கில வார்த்தை கொண்ட தமிழ் ஜோக்ஸ் (?) !! 


"சமையல் ரூம்-ல வெச்சிருந்த ஒரு சொம்பு பாலைக் குடிச்சியா?ன்னு பூனைகிட்ட கேட்டா அது என்ன சொல்லுது?"

"It CATegorically denies !"

"பூவா தலையா போட்டு கேட்டா, எங்க வீட்டு நாய் எப்போதும் பூ-தான் சொல்லும்.."

"எப்படி சொல்ற....?"

" Head or Tail  கேட்டா வாலை (tail) ஆட்டிகிட்டு நிக்குதே !"

"கூட்டணி கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளை ஒதுக்கிக் கிட்டு, தனக்கு மட்டும் அதிகமான தொகுதிகளை ஒதுக்கிக்கிட்டாரே நம்ம 'சிங்கம்' சின்னத்துக் கட்சிகாரர்...!"

"அப்படியா !  Lion's share எடுத்துக்கிட்டாங்கன்னு சொல்லுங்க !"

Saturday, May 14, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 23

"24 படம் பார்த்து நம்ம நல்லகண்ணு என்ன பண்ணினாரு தெரியுமா?"

"என்ன பண்ணினாரு?"

"வீட்டுலேர்ந்து லேட்-ட்டா கிளம்பினதுனால, ட்ரெயின் கிளம்பி 10 நிமிஷம் கழிச்சுதான் ஸ்டேஷனுக்குப் போவோமுன்னு தெரிஞ்சு, அவரோட வாட்ச்சை நிறுத்தி வெச்சுட்டாரு !"

"???"


**************************************************

"அந்த இதய நோய் மருத்துவர், ஹார்ட் 'டிக் டிக் டிக்'ன்னு அடிக்கும்ன்னு கருத்தரங்கத்தில சொன்னதுக்கு என் பையன் என்ன சொன்னான் தெரியுமா?"

"என்ன சொன்னான்?"

"நான் ஒரு வாட்ச் மெக்கானிக். எனக்கு இதெல்லாம் சகஜம்-ன்னு சொல்றான்..."

******************************************************

"பதவி போன உடனே நம்ம தலைவரு, நடிகர் சூர்யாவை போய் பார்க்கணும்-னு துடிப்பா இருக்காரே ! ஏன்?"

"அவருக்கு டையம் ட்ராவல் பண்ணி, தான் பதவியில இருந்த நாட்களுக்குத் திரும்பப் போகணுமாம்..."

Monday, May 9, 2016

பகலவன் !பகலிலே 'பளிச்'சென்று
  பாரெல்லாம் ஒளிபரப்பும்
பகலவனே ! உன் சுடரால்
  மின்னாற்றல் சேமிப்பாய் !

வைகறைப் பொழுதினிலே
   மெய்நனைய நடந்தாலே..
வைட்டமின் சேர்த்திடுவாய்!
    வைத்தியராய் உதவிடுவாய் !

மரங்களும் செடிகொடியும்
   மகரந்த சேர்க்கையுற‌
வரமெனவே ஒளிதருவாய் !
   மலர்,கனியும் ஆக்கிடுவாய் !

சுடர்மிகு ஒளிக்கற்றை
    சூட்டோடு படர்ந்திடவே
உலர்ந்திடுமே ! நீரதனில்
   நனைந்தவைகள் யாவையுமே !

நன்றிதனை நவின்றிடவே
   தைத்திங்கள் நாளதனில்
அன்புடனே படைத்தோமே..
   படையலினை உனக்கிங்கு !

வெம்மையின் கதிராலே
   வாட்டுகிறாய் ! எமையெல்லாம் !
பொம்மையா புவியுனக்கு...
   பொறுத்தருள வேண்டுகின்றேன் !

Sunday, April 24, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 22"உங்க பையன் விஜய் ரசிகனா?"

"ஏன் கேட்கறீங்க?"

"மணி என்னன்னு கேட்டா "மூணு"-ன்னு சொல்லாம.... "த்தெறி" -ன்னு சொல்றானே !"

"???"
---------------------------------------------------------------"இந்த சுட்டெறிக்கும் வெயில் நேரத்தில வியர்வையோடு கல்யாணத் தம்பதிக நிக்கறாங்களே ! இவங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்றது !"

"Hot Couples...!"

"!!"
----------------------------------------------------------


"நம்ம தலைவரு, வாட்ஸ்-அப்-ங்கறது ஒரு கூரியர் சர்வீஸ்ன்னு நினைச்சுட்டாரு !"

"எப்படி சொல்ற?"

"ஓட்டு போட பணம், வாட்ஸ்-அப் மூலமா அனுப்பலாமான்னு கேட்கறாரே !"

Saturday, April 16, 2016

வேல் !

கோடை விடுமுறையின் முதல் நாள். கணேஷுக்கு வீட்டில் பொழுது போகவில்லை. மாலை 5 மணிக்கு மேல், 'பீச்'சுக்கு புறப்பட்டான். கடற்கரையில் உலவிக் கொண்டிருந்த போது, எதிரே, ஒரு குரல்..

"ஹாய் ! கணேஷ் ! "

நிமிர்ந்து பார்த்தான்.."ஹாய் ! வேலு ! எப்படிடா இருக்க? பாத்து எவ்ளோ நாளாச்சு?" - கேட்ட குரல் தன்னுடைய நண்பன் வேல்முருகனுடையது என்பதை அறிந்தான்...வேலு சற்றே குண்டாகவும்,  கருப்பாகவும் இருந்தான். 

"என்னடா இப்படி கருத்து போயிட்டே?"

"என்னடா பண்றது...! சேல்ஸ்மேன் உத்யோகம். எப்போதும் வெயில்லதான் நிக்கறேன்...!"

வெகு நாள் கழித்து சந்தித்ததனால், ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

வீடு திரும்பிய கணேஷ், தன் குறும்பு தம்பியிடம் சொன்னான்...

"டேய் ! பீச்-சுக்கு போனேன்டா...! அங்க நம்ம வேலுவ பார்த்தேன்டா..! ரொம்பக் கருப்பா ஆயிட்டான்டா...!"

தம்பி சிரித்துக் கொண்டே சொன்னான்...

"டேய் ! கடலுக்குப் போனா ப்ளூ வேல் பார்த்துட்டு வருவேன்னு நினைச்சா...நீ ப்ளாக் வேல் -ஐப் பார்த்துட்டு வந்திருக்க...!"

Thursday, April 14, 2016

(கடி) ஜோக்ஸ் - பாகம் - 21

உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

"'புகை நமக்கு பகை'-ன்னு சொல்றது சரிதான்...அதுக்காக இப்படியா பண்ணுவாங்க?"

"என்ன ஆச்சு?"

"'புகை வண்டி நிலையம்' -ன்னு எழுதியிருந்ததில் 'புகை'-யை அழிச்சுட்டாங்க !"


"???"


"வீட்ட சுத்தம் பண்ண வந்த ஆளு, என்னங்க குடிச்சிட்டு வந்து தகராறு பண்றான்...?"

"நீங்கதான அவன்கிட்ட தண்ணி போட்டுத் துடைன்னு சொன்னீங்க...!"

"!!!"

 

"ரெயில்ல போகும் போதே யோகா பயிற்சி எடுத்துக்கறீங்களே ! இது என்ன யோகா?"

"இது யோகா training இல்ல TRAIN-ing யோகா !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates