.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 17, 2019

தங்க்லீஷ் ஜோக்ஸ்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 92

1993-ம் ஆண்டு, அன்றைய நாளில்  பிரபலமாக இருந்த விவேகானந்தா கல்வி நிலையம் (Spoken English)  நடத்திய "தமிழ்-ஆங்கிலம் கலவை ஜோக்ஸ்" போட்டியில், மூன்றாவது பரிசு பெற்ற எனது ஜோக். மறைந்த திரு,க்ரேஸி மோகன் ஐயா அவர்கள் வெற்றி பெற்ற ஜோக்ஸை தேர்வு செய்த குழுவில் இருந்தவர் என்பது பெருமைக்குரியது... 

 தொடர்ந்து.... இன்றைய fresh jokes...

"இல்லாத No-Ball-ஐ நடுவர் நோ-பால் கொடுத்துட்டார்ன்னு அம்பயர் மேல வழக்கு போட்டதோட இல்லாம, அந்த பந்தை எடுத்து வந்து நீதிபதி மேசையில வேற வெச்சீங்களே ! எதுக்கு?"

" The ball is in your court-  ன்னு சொல்லத்தான்...!"

***************************************************


"இவனோட தாத்தா நல்லா சாப்பிடுவாராம் ! வீட்டுல அவர சாப்பாட்டு ராமன்னுதான் சொல்வாங்களாம் ! அதே போல இவனோட அப்பா..அவரும் நல்லா கட்டுவாரு...இவன் அப்படியே நல்ல வாரிசா வந்திருக்கான்...தின்ற விஷயத்தில..."

"Following their FOOD steps- ன்னு சொல்லுங்க...!"

****************************************************************

Saturday, May 18, 2019

ஜிம்-முன்னு சில ஜோக்ஸ்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 91


மாடல் ஆகுவேன் மம்மி !

"ஏன்டீ ! பேஷன் ஷோ மாடல் ஆகப் போறேன்னு சொல்லிகிட்டு இப்படி நொறுக்கு தீனியா தின்னுகிட்டு இருந்தா எப்படிதான் மாடல் ஆகமுடியும்?"

"முடியும் அம்மா ! ப்ள்ஸ் சைஸ் மாடல் ஆயிடுவேனே !"

"????"

ஜிம் பாடின்னா என்ன?


"ஏங்க தரகரே ! மாப்பிள்ளை பையனுக்கு 'ஜிம் பாடி' ந்னு சொன்னீங்க...பாத்தா அப்படி தெரியலையே !"

"108 கிலோ இருந்தவரு, இப்ப வெயிட் கொறச்சு 99 கிலோ ஆயிருக்காரே ! அதைச் சொன்னேன்!"

"!!!!"

ஷ்..அப்பா...வெயிட்டீஸ் !
"வெயிட் லிப்டிங் பண்ணிகிட்டு இருந்தப்போ, போன் வந்தவுடனே ஒரு கையை விட்டுட்டு டக்-குன்னு போன் எடுத்ததனால, கால்-ல அடிபட்டுகிட்டாரு நம்ம மதன் !"

"வெயிட் பண்ணி கால் எடுக்காததினால...கால்ல வெயிட் விழுந்திடுச்சுன்னு சொல்லுங்க !"

"???"


Thursday, April 18, 2019

கோபக்கார தலைவர்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 90
 
டெலிவரி எங்கடா?

" உணவு டெலிவரி செய்யும் APP பண்ணி - அதில வர்ற ஆர்டர் எல்லாம், டெலிவரி பண்ணாம, தானே சாப்பிடறாராமே அந்த ஏகாம்பரம்!"

"அவரோட APP, "ஏகாம்பரம் ஈட்ஸ்" - தானே !


"???"
ஒய் கிவ் ய ஸ்லிப்?

"பூதம், பேய் எல்லாம், ஸ்லிப்-புல அவங்க பேர் இருந்தும் ஓட்டுரிமை இல்லையான்னு போராட்டம் பண்ணுதாமே !"

"அவங்க பேர்ல என்ன இருக்கு? "

"பூத் ஸ்லிப்...தான்..!"

கோபக்கார தலைவர்"நம்ம தலைவருக்கு ஆனாலும் இத்தனை கோபம் ஆகாது..."

"அப்படி என்ன பண்ணினாரு?"

"ஓட்டு போட போனபோது வாக்கு இயந்திரத்தில எதிர்க்கட்சி சின்னத்தை பாத்த உடனே அவருக்கு  கோபம் வந்து 'கும்'-முனு அதுல ஒரு குத்து விட்டாராம் . வாக்கு பதிவாயிடுச்சு !"

Friday, February 8, 2019

தெறிக்கவிடும் தலைவா !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 89

வாட் டூ யு மீன்?"புதுசா ஆரம்பிக்கிற கட்சிக்கு தலைவர் ஏன் "மீன்" சின்னம் தான் வேணும்-ன்னு அடம் பிடிக்கிறாரு...!"

"அவரு எப்போதும் தண்ணியிலேயே இருக்கிறத சிம்பாளிக்கா சொல்லத் தானாம் !"

"!!!!"தெறிக்கவிடும் தலைவா !
"நம்ம தலைவர் மேடையில பேசும்போது எச்சில் தெறிக்குதாம்!"

"அதுக்காக...?"

"கூட்டத்தில "தலைவா !"ன்னு கோஷம் போடாம எல்லாரும் "சலைவா" (Saliva)-ன்னு சொல்றாங்க...!"

"????"
வடை போச்சே !
"பேஷண்ட்-டுக்கு போடற இன் ஜெக்ஷன் உடைஞ்சாலும், பேலன்ஸ்-ஆ இருந்த வடை வீணா போனாலும்
டாக்டர் என்ன சொல்வாரு?"

"தெரியலலையே !"

"ஊசி போச்சு...!"


Monday, January 14, 2019

பானை பொங்குது மேலே??#கடி ஜோக்ஸ் - பாகம் - 88

"ரோடு போடற ஜல்லிய மாலையாய் கட்டி அந்த  மாட்டு கழுத்துல போட்டிருக்கே ஏன்?"

" ஜல்லிக்கட்டு-ங்கிறத அவரு தப்பா புரிஞ்சுகிட்டாரு !"

"???"
--------
" எல்லா வீட்டுலயும் பொங்க பானை மேலதான பொங்கி வரும். அது என்ன உங்க வீட்டுல கீழே பொங்கி வருதுன்னு சொல்றீங்க?"

" பானை அடியில ஓட்டையாச்சே !"

"!!!!"
---------

" அந்த கரும்பு விக்கிறவர்க்கிட்ட அப்படி என்ன சொன்ன? கோவிச்சுகிட்டாரு?!"

" கரும்பு தின்னனும்னு சொன்னேன். 30 ரூபாய் கொடுன்னாரு ! கரும்பு தின்ன கூலியான்னு கேட்டேன்..அதான்..!"
Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates