.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, December 30, 2010

குறை ஒன்றும் இல்லை...! ஐயப்பா...!

குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....
குறை ஒன்றும் இல்லை ...ஐயா....குறை ஒன்றும் இல்லை...ஐயப்பா...(குறை ஒன்றும்)

பதினெட்டு படிதாண்டி நிற்கின்றாய் ஐயா!
பதினெட்டு படி தாண்டி உனைக் காண் வருவோம்...
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....

ஹரிஹரனின் மைந்தனாம்...
கரிமுகத்தான் சோதரனாம்...
ஒளிமுகமாய் ஜோதியிலே...
வழிகாட்டும் ஐயனாம்....

மணிகண்டா...மலைவாசா...ஐயப்பா.! ஐயப்பா. !

மலைமீது குடி கொண்டாய் ஐயா...! ‍ ‍_ ஐயா....
மலைமீது குடி கொண்டாய் ஐயா....! _ எங்கள்
மனதோடு ஆலயம் கட்டினோம் வா...வா...! (மலைமீது)
எந்நாளும் எமை காக்க உனையின்றி யார் யார்...!
எந்நாளும் எமை காக்க உனையின்றி யார் யார்...!

ஸ்வாமியே சரணென்று சொன்னாலே போதும்...!
ஸ்வாமியே சரணென்று சொன்னாலே போதும்...!
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....
மணிகண்டா...மலைவாசா...ஐயப்பா.! ஐயப்பா. !

புவி ஆளும் ஐயன்...புலியின் மேல் வருவான்...
புளிப்பான வாழ்வையும் இனிப்பான தாக்குவான்...!
குறை ஒன்றும் இல்லை ...எனை ஆளும் ஐயா....

பக்தர் பணிந்தேற்றும் ஐயப்பா...!

பக்தர் பணிந்தேற்றும் ஐயப்பா..உன் பாடல்
பாடும் பலமிருக்க பாடும் ஏதுண்டோ?
எம்மைக் காத்திட‌... நீயிருக்கும் பொழுது...
எம்மைக் காத்திட‌... நீயிருக்கும் பொழுது...
ஒன்றும் குறை இல்லை...எனை ஆளும் ஐயா....
ஒன்றும் குறை இல்லை...எனை ஆளும் ஐயா....

மணிகண்டா...மலைவாசா...ஐயப்பா.! ஐயப்பா. !
ஐயப்பா.! ஐயப்பா. ! ஐயப்பா.! ஐயப்பா. !

Tuesday, June 15, 2010

விடுமுறை அனுபவம்

(காந்தீய கவிதை மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் [13-Jun-2010] ஆறுதல் பரிசு பெற்றது !)

வேலையில் விடுப்பு பெற்று முறையாய் திட்டமிட்டு
வேடிக்கை காண்பதற்கு வெளியூர் செல்வதுண்டு
காலையும் மாலையுமாய் ஊர்பெயர் பேசிபேசி
கடைசியாய் சொந்தஊர் செல்வதாய் தான்முடிவு !

மொட்டவிழ் மலர்களென்ன ! மலர்களின் வாசமென்ன !
மெல்லிய தென்றலென்ன ! தென்றலின் சுத்தமென்ன!
கட்டுடல் உழவரெல்லாம் ஏர்பூட்டும் காட்சியென்ன !
கானம் அதுபாடி நாற்று நடும் பெண்களென்ன !

கிளையிலே தூளியிட்டு குழந்தையை ஆட்டிவிட்டு
வேலயைத் தொடரும்அப் பெண்டிரின் பெருமையென்ன !
இலையிலே சோறுபோட்டு இயற்கையோ டியந்துவாழும்
இனியநல் வாழ்க்கைவேண்டி என்மனம் கேட்பதென்ன !

சொந்தஊர் விட்டுவிட்டு பட்டிணம் வந்து விட்டேன் !
சொர்க்கமாய் அந்தஊர் இப்போது தெரிகிறது !
எந்தஊர் போனாலும் விடுமுறைக் காலமென்றால்
சொந்தஊர் போல்வருமா ஆண்டாண்டு ஆனாலும் !

Saturday, March 13, 2010

காக்க...காக்க!

கலிகாலம்...
வம்சமே விழுதுகள் இல்லாமல்
வீழ்ந்திடுமோ என‌
வனவாசம் செய்யும் புலியின்
வயிற்றிலேயே
புளியைக் க‌ரைக்கும்
கலிகாலம்...

பசுந்தோல் போர்த்திய புலியெல்லாம்
பெரிதாய் பணம் பண்ணும்
சிறுமை எண்ணத்தில்

நாடினார் காட்டை...
ஆடினார் வேட்டை...

சிறந்தது வ்ணிகம்...
குறைந்தது புலி ரகம்...!

பாய்ந்திடும் வேங்கை
பாரத விலங்கை
காத்திடும் தோழனாய்
நீயும் வா நண்பனே !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates