.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, November 22, 2015

கொசு !!

"கடிங்க..." எனக் கொசுக் கூட்டம் வந்தால், "அ..டிங் கு...புடிங்கு.." என்று ஓடுகின்ற நிலையில் சுத்தம் சுகாதாரம் மற்றும் அலட்சியம் செய்யாத கவனம் தேவைப் படுகிறது.



அசுத்தம் சேருகின்ற
   அனைத்து இடமெங்கும்
கொசு, தம் குடும்பத்தை
   குஷியோடு பெருக்கிடுமே !

கொசுபோல் இருக்கின்றாய்
  'என்னிடமா மோதலெ'ன
அசுர சிரிப்போடு
   அலட்சியமாய் கேட்கின்றோம் !

கொசுவை விரட்டுகிற
  சூட்சமம் தேடித்தான்
நசுக்குவோம் எனச்சொல்லி
  கொசுஅழிப்பான் செய்தார்கள் !

வலைப்பூ இணையத்தில்
  வார்க்கின்ற முன்பேநாம்
வலைக்குள் ஒளிந்தவர்கள்
  கொசுவின் கடிபயந்து !

உருவம் அதுகண்டு
  எள்ளாமை வேண்டுமென
அருமை யாயன்றே
  ஐயனும் சொன்னானே !

கொசுவின் கடிக்கிங்கே
  மனித உயிர்போகுதுங்க !
அசுத்தம் அதுஅகற்றி...
  விழிப்புடனே வாழணுங்க !









   

Tuesday, November 17, 2015

மழை - பல பார்வைகள்


எல்லா நிகழ்வுக்கும் உள்ளது போல, சமீபத்திய மழைக்கும் அவரவர் கருத்துக்கள் இருந்தன...ஒரு நிருபராகி,  "இந்த மழை பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று பல தரப்பு மக்களிடம் கேட்டால் என்ன பதில் வரும்...படியுங்கள்...





மாணவன்: இந்த மாதிரி மழை பேஞ்சா ஜாலி...ஸ்கூல் லீவு...(பதில் சொன்ன பள்ளிக் கூட சிறுவன் வீட்டுக்குள்ளும் தண்ணீராம் !)

அப்பா: கடைசியா, நாங்க கேரளா போனபோது என் பையன் "போட்டிங்" போகணும்னு சொன்னான். நாங்க போன ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ஒரு "போட்" கவிழ்ந்து  விபத்து நடந்ததா கேள்விபட்டிருந்தோம். அதனால..."போட்டிங்" போகல...அந்த குறை இப்ப இந்த மழையால தீர்ந்துச்சு ! என் பையன் வீட்டுக்கு பால் வாங்கவே போட்லதான் போயிட்டு வர்றான்...!

அம்மா: இந்த பிள்ளைங்கள வீட்டுல வெச்சுகிட்டு முடியல...காய்கறி விலை ஏறிடுச்சு ! ஆர்டர் பண்ணி சாப்பிடலாமுன்னா டெலிவரி இல்லன்னு சொல்றாங்க...!

பக்கத்து வீட்டு மாமி: மழையினால எதுக்கு கரெண்ட் கட் பண்றங்கன்னு தெரியல..மூணு நாளா, சீரியலே பார்க்க முடியல...!

எதிர்கட்சி அரசியல்வாதி: இந்த மழைக்கு காரணம் ஆளும் கட்சிதான்...! இலவச மிக்சி கொடுப்பதற்கு பதில் இலவச குடை கொடுத்திருந்தால், மக்களுக்கு உதவியாக இருந்திருக்கும்...நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச குடை, ரெயின் கோட் வழங்கு திட்டத்தை நிறைவேற்றுவோம் !

ஆளும் கட்சி அரசியல்வாதி: மக்களுக்கு நல்லது செய்யும் வகையில், மழைக் காலத்தில், நமது அரசு நகரத்துக்குள்ளேயே  "படகு" வசதி செய்து தந்துள்ளது. ஊரெங்கும் தண்ணீர் இருந்தாலும், "தண்ணி"க் கடைகளை மூடாமல் நடத்துவதும் நாங்கள்தான்...!

நாலும் தெரிந்த வாட்ஸ் அப் க்ரூப்: நாங்க அப்பவே சொன்னோம். ஏரிகள் எல்லாம் வீடு கட்டினதுனாலதான் இந்த மழையின் பாதிப்பு அதிகமா இருக்கு. (க்ரூப் சொல்லாமல் சொன்னது: எங்க ஊரு ஏரி பக்கம் வீடு கட்டும் போதே நாங்க கேட்டோம்...அந்த இடத்தில எங்களுக்கும் பங்கு கொடுங்கன்னு...!)

முகநூலில் படம் போடுவோர்: சும்மா செல்fபி எடுத்து போட்டு போரா இருந்தது. இந்த மழையால தண்ணீர் தேங்கியிருக்குற இடம் நிறைய கிடைச்சுது போட்டோ எடுக்க...எதிர்ப்புறமா ஒருத்தங்க தண்ணீர்ல மூழ்கி "காப்பாத்துங்க!"ன்னு கத்தினாங்க..அத அப்படியே வீடியோ எடுத்து பேஸ்புக்ல போட்டேன். வைரல் ஆயிடுச்சு ! (அதுக்கு அவங்கள காப்பாத்திருக்க முயற்சி செஞ்சுருக்கலாமே !)

மருத்துவர்கள்: இந்த சீஸன் வழக்கத்தைவிட எங்களை ரொம்ப பிஸியா வெச்சிருக்கு...இப்போ யூட்யூப், பேஸ்புக்-லயே வைரல் ஆகிறதுனால...வைரல் ஜுரம்ன்னு சொன்னா மக்கள் புரிஞ்சுக்கிறாங்க...!

வானிலை ஆராய்ச்சி மையம்: நாங்க இருக்கிறதே இந்த சீஸன்லதான் மக்களுக்குத் தெரியுது. மீடியாவும் எங்கள பேட்டி எடுக்க வராங்க...அதனால மழையை நாங்க வரவேற்கிறோம் !

Monday, November 16, 2015

ஜோக்ஸ் - பாகம் - 13

"உங்க பையனுக்கு உங்க ஜீன்ஸ்-தான இருக்கும் ! உங்கள போலவே செய்யறான்..."

"அதுக்காக என் ஜீன்ஸ் பேண்ட்-டை எடுத்து போட்டுகிட்டு நிக்கறானே !"

"!!!"




"ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பருவ மழை  பொழிஞ்சதுனால...கிராமத்தில விவசாயிங்க சந்தோஷமா இருக்காங்க..."

"அப்ப நகரத்தில?..."

"ஸ்கூல் பசுங்க சந்தோஷமா இருக்காங்க (ஸ்கூல் லீவு இல்ல...!)"





"காலையில எங்க வீட்டுக்குள்ள தண்ணி பூந்துடிச்சு டீச்சர்..."

"அப்படியா..வீட்டுல யாரும் இல்லையா...உங்க அப்பா எங்க?"

"அவருக்குள்ள நேத்தி நைட்டே தண்ணி பூந்துடிச்சு டீச்சர் !"


Friday, November 13, 2015

காதலா...கூ(ந்)தலா?



"பொண்ணுங்கன்னா, தலை முடி நிறைய்ய இருக்கணும்டா ! அந்தக் கூந்தல் அப்படியே பின்னழகு தாண்டி நீளமா இருக்கணும். அத மாதிரி ஒரு பொண்ணத் தான்டா மச்சான் நான் காதலிப்பேன்..." - இது வாசு...

"ஏன்...நல்லாத் தானே இருந்த? என்னாச்சு? இப்படி ஆயிட்ட?" - இது கோபால்...

"கூந்தலுக்கு வாசம் உண்டுன்னு  கேள்வி பட்டு இருக்கியா? நீண்ட கூந்தல்...அதுல அப்படியே தொலஞ்சு போயி அந்த வாசத்த...விடுடா மச்சான்...உனக்கு அதெல்லாம் புரியாதுடா..."

"டேய்...நெசமாத்தான் பேசறியா? பொண்ணு பார்க்க அழகாயில்லைன்னாலும், கூந்தல் நீளமா இருந்தா லவ் பண்ணுவியா?"

"கண்டிப்பாடா..அழகுன்னா...நீளமா கூந்தல்...அவ்ளோதான்..."

"சரிடா மச்சி...உனக்கு என்னவோ ஆயிடுச்சு ! இன்னிக்கு நம்ம குமார் வீட்டு ரிசப்ஷன் இருக்கு. ஈவ்னிங் எத்தனை மணிக்கு போகலாம்? அப்படியே அந்த கல்யாண கூட்டத்திலே யாராவது நீளமா கூந்தலோட இருக்கங்களான்னு பார்க்கலாம்..." என்று சொல்லிவிட்டு சிரித்தான் கோபால்....

மாலை 6:30 மணி...இருவரும் ரிசப்ஷனில்...கண்கள் மேய்ந்து கொண்டிருந்தன...


அப்போது நடு வரிசையில், சுவர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் நீள் கூந்தல் வாசுவின் கண்ணில் பட்டது. அந்தப் பெண்ணின் கூந்தல் நாற்காலியிலிருந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. அவளது பின் புறத்திலிருந்து பார்த்ததால் நன்றாகத் தெரிந்தது..."மச்சான்...உன் வாய்க்கு சர்க்கரைடா... நான் தேடற ஆள் கிடைச்சாச்சு வா... "  பேசிக்கொண்டே அவள் அமர்ந்திருந்த நாற்காலி நோக்கி நடந்தான் வாசு.

அவள் அருகில் சென்று முகத்தை பார்த்தவுடன்..."அட..இவளா..." என முணுமுணுத்தான்...அவளும், "ஹாய்..! நீ வாசுதானே !" என்றாள்...

"ஹாய்...நீ காவ்யா?"

"ஆமாம்...காவ்யாதான்...நீ இந்த ஊர்லதான் இன்னும் இருக்கியா? நான் சென்னையில இருக்கேன்..."

"ஓ ! அப்படியா...நான் இங்கதான்..அப்பாவோட பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்ணிகிட்டு இருக்கேன்...இது என் ப்ரெண்ட்..கோபால்..."

வாசுவும், காவ்யாவும் ஒன்னா படிச்சவங்க...பள்ளிக் கூட காலத்தில....பல வருஷங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்...காவ்யா...மிகவும் அழகாக இருந்தாள்...அவளது உடலழகும், சிரிப்பும், கூந்தலுடன் சேர்ந்து வாசுவை மிகவும் கவர்ந்தது. அங்கேயே ப்ரபோஸ் செய்யலாம் என்ற முடிவை எடுத்து விட்டான். அந்த நேரத்தில், யாரோ காவ்யாவிடம் பேச்சு கொடுத்து அவள் கவனத்தை திருப்பினாள்.

"சரி லக்குடா உனக்கு மச்சி...தெரிஞ்ச பொண்ணு...நீ கேட்ட மாதிரி நீளமா முடி...அழகோ அழகு வேற...ஓகே தானே !"

"இப்பவே ப்ரபோஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்டா மச்சான்...இப்ப பாரேன்..." - மெல்லிசைக் கச்சேரி மற்றும் கல்யாண கோலாகலத்தில், இவர்கள் பேசிக்கொண்டது, அவளுக்குக் காதில் விழ வாய்ப்பில்லை...

கொஞ்சம் வழிந்தவாறே வாசு மீண்டும் காவ்யாவிடம் நெருங்கினான்.

வாசு வருவதை கவனித்த காவ்யா, "ஹாய்...சாரி ! இது என் ஆன்ட்டி...அதுக்குள்ளே ஏதோ சொல்ல வந்தாங்க..."

"அது சரி...இவ்ளோ நேரமா நின்னுகிட்டு பேசிகிட்டு இருக்கேன். நீ எழுந்திருக்கவே மாட்டேங்கற?" - உரிமை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கேட்டான் வாசு...

"சாரி வாசு...ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடண்ட்...என் கால்..." என்று அவள் முடிப்பதற்குள் வாசுவுக்கு நிலைமை புரிந்தது....அவன் மனதில் 'பக்' என்றது...

"சாரி காவ்யா...வெரி சாரி." - வாசு சொல்லி முடிக்கும் நேரத்தில் அவனது மொபல் சிணுங்கியது...மொபைலை  'அட்டண்ட்' செய்து அவன் அங்கிருந்து நகர்ந்தான்...கோபாலும் தொடர்ந்தான்...'கால்' முடிந்தவுடன், வாசு சொன்னான்..

"வாடா மச்சான்...சாப்பிடப் போகலாம்..."

"மச்சி...காவ்யா?"

"பாவம்டா அவ...விடுடா..."

"என்னடா சொல்ற? விடுடாவா?"

"கால் போன பொண்ணுடா..கூந்தல ஓகே...அவ மேல எனக்குக் காதல் வரலடா...பரிதாபம்தான் வருது..."

கோபால் அப்படியே ஷாக் ஆயிட்டான்..!

Sunday, November 8, 2015

தீபாவளி வாழ்த்துக்கள் !

சகிப்புத் தன்மையும்,
பெருந்தன்மையும் 
சர்ச்சையாகும் காலத்தில்...

தீப ஒளி நாள் கார்த்திகைத் திருமகள்
பின்னால் வருவதை...
முன்பே தன் பெயரில்
கொண்டாடும் 
பெருந்தன்மைப் பண்டிகையாம் ...
தீபாவளி...

அனைவர் வாழ்விலும்
அகலேற்ற வாழ்த்துக்கள்...!

Sunday, November 1, 2015

ஜோக்ஸ் - பாகம் - 12

"ஊறுகாய் வியாபாரம் செஞ்ச கம்பெனி இப்ப ஏன் இந்த பிசினஸ்ல காலை விட்டாங்கன்னு தெரியல..."

"கையை விட்டாங்கன்னுதான சொல்லுவாங்க...காலை விட்டாங்கன்னு சொல்றீங்களே...ஏன்?"

"அவங்க ஆரம்பிச்சது 'லெக் இன்ஸ்' பிசினஸ் ஆச்சே !"






"பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டு கால் குடுக்கறேன்னு ஓவரா பண்றாரு !"

"அப்படி என்ன ஆச்சு?"

"என் வீட்டுல காலிங் பெல்-ல ஒரு தடவை மெதுவா அழுத்திட்டு கதவைத் திறக்கறத்துக்குள்ள காணா போயிடறாரு !"
​​​​​​​​​​​​​​​​


"எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்ல-ன்னு சொல்லிட்டு, வரும் 30ந்தேதி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்-ன்னு சொல்லியிருக்கீங்களே தலிவரே !"

"'30ந்தேதி தொகுதிப் பங்கீடு'-ன்னு தலைப்புச் செய்தி வந்தா 'கெத்'தா இருக்குமுன்னுதான்.."

"???"


Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates