.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, July 30, 2015

ஷீரடி சாய்நாதம் - எங்கோ ஒருவனை பாடல் !

சமீபத்தில் வெளியான எனது 2வது சி.டி.யான "ஷீரடி சாய்நாதம்" - அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் வரிகள் இங்கே....இந்த பாடலை திரு. உன்னி மேனன் அவர்கள் பாடியுள்ளார். பாடலைக் கேட்க...

https://soundcloud.com/psdp1/engo-oruvanai


பாடல் வரிகளை ZOOM செய்து படிக்க - அடிப்பகுதியில் சொடுக்கவும் -


Tuesday, July 28, 2015

சலாம் ! Dr. கலாம் !




எத்தனையோ அறிவியலார் வந்து போகலாம் ! - அதிலே
  நமது கால அறிஞ ரவர் அப்துல் கலாம் !
முத்தெனவே இராமேஸ்வரம் பெருமை கொள்ளலாம் !
  மனதளவில் மாணிக்கமே ! போடு நீ சலாம் !

கனவு கண்டு  புதிய பாதை பார்க்கச் சொன்னவர் ! - நம்
   கண்களின் முன் பாரதியாய் புரட்சி செய்தவர் !
மனதினுள்ளே நம்பிக்கையின் ஒலி எழுப்பியவர் !
  விண்வெளியில் சாதனையால் மண்ணில் ஜொலித்தவர் !

கோளனுப்பும் கோமகனைக் காண வேண்டித்தான்.. - அந்த
   மேலுலகம் அவருயிரை எடுத்துக் கொண்டதோ !
மேலனுப்பும் அவராத்மா சாந்தி அடையட்டும் !
  மேன்மேலும் அவர்பெருமை எங்கும் பரவட்டும் !
______________________________________________________________

படம்: நன்றி கூகுள் இமேஜஸ்
 

Saturday, July 25, 2015

ராஜாவோட பையன் ராஜா !



முன் குறிப்பு: மன்னன் காலத்தில் ஈ மெயிலா என்று ஷாக் ஆக வேண்டாம்...இவர் மாடர்ன் மன்னன்....! இந்த முன் குறிப்பை பதிவு போட்ட பின் சேர்த்துள்ளேன்....



போண்டிய நாடு - மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இருந்தும்,  இந்நாட்டு மன்னனுக்கு  வாரிசு இல்லை ! வழக்கம் போல்  மன்னனுக்கு  இரண்டு மனைவியர்...முக்கியமான விஷயம்...மன்னனின் பெயர்...இளவரசன்..! இளவரசனே இல்லாத நாட்டில் இளவரசனுக்கு வாரிசு இல்லை என்பது தான் கவலை !

நாட்டின் மக்கள் தொகைக் கணக்கில் கணிசமான பங்கு வகித்தவர் ராஜ குரு ராயப்பச்சார்யார் - 15 பிள்ளைகளுக்குத் தந்தையானவர்...அவரது யோசனை படி மன்னன் ஏதோ செய்ய. மன்னனுக்கு குழந்தை பிறந்தது. மன்னன் இளவரசனுக்கு வாரிசு வந்த செய்தியினால் நாடே பரபரப்பானது...'லேட்-டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டான்னு' ஊரெல்லாம் கொண்டாட்டம்.

"மன்னா..! பிறந்துள்ள குழந்தை சிவப்பு நிறத்தில் ராஜா போல் இருக்கிறது" - ஜிங் ஜாங் போட்டது மந்திரி !

"என்னது...! என்னைப் போலவே உள்ளதா? ஹா..ஹா..." மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி...

"இல்லை மன்னா...! ராஜ களை இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்..."

"இருக்காதா பின்ன? ஹா..ஹா..இவனுக்கு ராஜா என்று பெயர் சூட்டுகிறேன்...ஹா..ஹா.."

நாட்டின் இளவரசனாய் வந்த 'ராஜா' வளர்ந்து ஆளாகினான்....



பெண்கள் குளிக்கும் குளத்தங்கரையில் இளம் பெண்கள் சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்...அதில் ஒரு இளம் பெண் சொன்னாள்.."நான் இளவரசனைக் காதலிக்கிறேன்...அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்...!" - இந்த உரையாடலை ஒட்டுக் கேட்ட ஒரு அரசவைக் காவலன், மன்னனிடம் ஓடிச் சென்று செய்தியைச் சொன்னான...

"மன்னா ! நான் இளவரசனைக் காதலிக்கிறேன்...அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என ஒரு இளம் பெண் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்...

"என்னது.என்னைக் காதலிக்கிறாளா...! நான் அந்த நங்கையை உடனே பார்க்கவேண்டும்..." - மன்னனின் ரியாக் ஷன்...

"மன்னா...இளவரசை..." என்று தயங்கியே இழுத்தான் செய்தியைக் கொண்டுவந்தவன்..

"ஆமாம்...என் பெயர் தானே இளவரசன் !" - மன்னனின் உடனடி பதிலுக்கு பதில் பேச முடியவில்லை அவனால்...

"ம்...நீ பார்த்த அதே இடத்தில் நாளை நான் அந்த பெண்ணை பார்க்க வேண்டும்...என்னை அழைத்துச் செல்..."



அன்று மதியம், அரசவையின் பொது மின்னஞசல் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது..

"நான் ராஜாவைக் காதலிக்கிறேன்...அவரையேத் திருமணம் செய்து கொண்டு ராணியாக விரும்புகிறேன்" - என்று செய்தி வந்திருந்தது..வல்லுனர்களை வைத்து மின்னஞ்சல் அனுப்பிய இடத்தையும், அனுப்பிய பெண்ணையும் அன்றே கண்டு பிடித்துவிட்டனர் .

அரசவையில் அந்த பெண்ணை வைத்து விசாரித்தான் அரசன்.

"ராஜாவைக் காதலிக்கிறேன் என்றாயே...என் மேல் அவ்வளவு காதலா?"

"ஐயோ மன்னா..! நான் சொன்னது இளவரசனை...!"

"என் பெயர்தான் இளவரசன்...நான் தான் இந்த நாட்டு ராஜா...என்னைத் தானே சொன்னாய் !"

"மன்னா ! மன்னிக்க வேண்டும்...நான் சொன்னது இந்த நாட்டின் இளவரசனான "ராஜா" என்கிற உங்கள் மகனை..."

அவள் சொல்லி முடிப்பதற்குள்..."ஆமாம் தந்தையே...நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்...திருமணம் செய்ய விரும்புகிறோம்" என்று சொன்னபடி நாட்டின் இளவரசனான ராஜா வந்தான்...

மன்னன் முகத்தில் பல உணர்ச்சிகள்..."ஹா...ஹா..." - இது சமாளிப்பு சிரிப்பு..."நல்லது...நாட்டு ராஜாவுக்கு இளவரசன் என்றும், இளவரசனுக்கு ராஜா என்றும் பெயரிட்டதால் இந்த குழப்பம் நேர்ந்துவிட்டது எனக்கு..."

"கவலைப் படாதீர்கள் தந்தையே ! எங்கள் வாரிசுக்கு தாத்தாவான உங்கள் பெயரையே 'இளவரசன்' என்று வைத்து விடுகிறோம்...நான் ராஜாவாகும் போது அவன் இளவரசன் தானே ! குழப்பம் இருக்காது..." என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்...

சுபம் !!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, July 24, 2015

ஜோக்ஸ் - பாகம் - 7






"டாக்டர், வீட்டுல  செஞ்சுவெச்ச வடைக்கு இன் ஜெக் ஷன் போட்டாராமே ! ஏன்?"

"அவங்க மனைவி வடை ஊசி போச்சான்னு கேட்டாங்களாம்..!"

"!!!"



"அந்த டாக்டர் போலி டாக்டர்ன்னு எப்படி சொல்ற?"

"வயத்துல் காஸ் ப்ராப்ளம்ன்னு சொன்னா, காஸ் அடுப்புல சமைச்சதை சாப்பிடாதீங்க ! இன்டக் ஷன்ல சமைச்சு சாப்பிடுங்கன்னு சொல்றாரே !"

"???"






"டாக்டர் எனக்கு பாதி பல் புடுங்கியாச்சு !"

"அதனால என்ன ஆச்சு !"

"பல்ஸ் கம்மி ஆயிடுச்சு டாக்டர் ! நீங்கதான் காப்பாத்தணும் !



Wednesday, July 22, 2015

ஜோக்ஸ் - பாகம் - 6




​"எங்க தலைவர் மாயவரத்தில் மீட்டிங் பேசினா ஏற்காட்டுல எதிரொலிக்கும்ன்னு பேசினீங்களே​...அதுக்கு என்ன அர்த்தம்?"
"இது தெரியாதா ! தலைவரோட சம்சாரம் இருக்குறது ஏற்காட்டுல...சின்ன வீடு இருக்கிறது மாயவரத்துல....!"

"!!!"


-------------------------------------------------------------------------------
"வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்னு சொல்லித்தானே கட்சி ஆரம்பிச்சீங்க...இப்ப உங்க மகனையே அரசியல்ல குதிக்க வெச்சுட்டீங்க்களே தலைவா...! இது நியாயமா?"
"இப்பதான் நான் அத உணறுகிறேன்..."
"எத?"
"வலியும் வாரிசும், தனக்கு வந்தாதான் தெரியும்-ன்னு !"



---------------------------------
"தலைவரின் வெல்லம் போன்ற பேச்சைக் கேட்க வெள்ளமாய் கூடியுள்ள செல்லங்களே...ன்னு ஒரே பில்டப் கொடுத்தீங்களே..எதுக்கு?"
"தலைவரோட மனைவி பேர்ல் இருக்கிற செல்லம் வெல்ல மண்டி-க்கு ஒரு விளம்பரம் தான் !"

"???"

Sunday, July 12, 2015

ஜோக்ஸ் - பாகம் - 5

"டெய்லர் ரவி, ப்ளவுஸ் தைக்கறப்போ மிஷின் - ல  கையை விட்டாராம்?"

"அச்சச்சோ ! ரவிக் கை என்னாச்சு?"

"தையல் போட்டாங்களாம்...!"
"!!!"


"பசி வந்தா பத்தும் பறந்து போகும்ன்னு சொல்லுவாங்க...ஆனா...என் கணக்கு படி எட்டுதான் பறந்தது சார் ! இது என்னோட அனுபவம் !"

"என்ன சொல்றீங்க?"

"நான் இன்னிக்கு சமையல் ரெடி பண்ண  லேட் ஆனதால என் மனைவி கோபத்துல வீசி எறிஞ்ச பொருளையெல்லாம் கவுண்ட் பண்ணி சொல்றேன்!"





"இவரு கார்-ல தான போனாரு ! ஹெல்மட்-டால இவருக்கு தலையில அடி பட்டுருக்குன்னு சொல்றாங்களே அது எப்படி?"

"இவரோட காரு, லேசா ஒரு பைக்ல இடிச்சிடுச்சாம். அந்த  பைக்காரார் தன்னோட ஹெல்மட்டை கழட்டி, இவரு தலைல அடிச்சிட்டாராம் !"

"!!!"

Friday, July 10, 2015

தலைக்கவசம் !


மலை போல உனை நம்பி மக்களுண்டு வீட்டினிலே !
தலைக் கவசம் அணியாமல் சுற்றலாமோ ரோட்டினிலே !

சிலை செய்து தலைவனென போற்றிடுவார் அரசியலில் !
தலைக் கவசம் அணியாமல் சிலையாக அவசரமா?

முல்லைக்குத் தேர்தந்த வள்ளலென உனைநினைத்தாய்!
செல்கையிலே வண்டிக்கே தலைக்கவசம் அணிவித்தாய் !

காவலரைக் கண்டவுடன் அஞ்சியதை அணிவதுமேன் ?
காலனுக்கு அஞ்சி இங்கே உனக்கெனவே அணிந்திடுவாய் !

மயிர் கொட்டும், வலிகூட்டும்...கழுத்தோடு என்றாலும்...
உயிர் காக்கும் என்பதைநீ மறவாதே உணர்ந்திடுவாய் !

சொகு சான கவசம் அதைத் தொழில்நுட்பம் தரும்வரையில்
'பிகு' ஏதும் செய் யாமல்  தலைக்கவசம் அணிந்திடுவாய் !

Thursday, July 9, 2015

ஷீரடி சாய் நாதம் - எனது புதிய CD !


(For CD Related communications, please email to: psdprasad.music@gmail.com)

அன்புடையீர் !

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர விழைகிறேன். ஷீரடி சாய் பாபா மீது நான் எழுதிய தமிழ் பாடல்கள் அடங்கிய CD (எனது இரண்டாவது முயற்சி)  தற்போது வெளியாகியுள்ளது. 'ரமணா விஷன்' என்னும் நிறுவனத்தின் பெயரில் இது வெளியாகியுள்ளது. இதில், நான் 10 பாடல்களை எழுதியுள்ளேன்.  திரு.உன்னி மேனன், திரு. உன்னி கிருஷ்ணன் அவர்களும் பாடியுள்ளனர்.

இந்த CD, தங்கள் அருகிலுள்ள பாபா ஆலயங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சி.டி.யை வாங்கிக் கேட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால், அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊக்கமாய் அமையும்...நன்றிகள் ! சாய் ராம் !

Saturday, July 4, 2015

டெலிவரி !

அலுவலகத்தில் கொஞ்சம் டென்ஷனுடனே உலவிக்கொண்டிருந்தான் சஞ்சய்.

"ஹாய் ! சஞ்சய்...இன்னிக்கு ஃபர்ஸ்ட் டெலிவரி-ன்னு கேள்விப் பட்டேன்...! ஆல் தி பெஸ்ட்...! எப்படி போயிட்டிருக்கு?"

"எஸ்...தாங்க் யூ...அல்ரடி அட்மிட்டட்...ஈவ்னிங் 4 மணிக்கு ஆப்பரேஷன்..."

விசாரித்த நண்பன், பெரிதாக சிரித்தான்..."ஓ...! ஹா...ஹா...ஹா...! அது வேறயா? நான் கேட்டது ஆஃபிஸ் ப்ராஜகட் பத்தி-தான்...வீட்லயும் டெலிவரியா....ஹா...ஹா...ஹா...எனி வே...அதுக்கும் என் விஷஸ்..." - சிரித்துக் கொண்டே நகர்ந்தான் கேட்ட நண்பன்...

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் சஞ்சய்.... டீம் லீடராகி இன்று தான் முதல் 'டெலிவரி' அலுவலகத்தில்.... வீட்டிலோ, சிசேரியனுக்காக மாலை 4 மணிக்கு நேரம் குறித்திருந்தார்கள், அவன் மனைவிக்கு....அவள் ஏற்கனவே மருத்துவ மனையில் அட்மிட் ஆகி இருந்தாள். சஞ்சய்-க்கு முதல் முறை தந்தையாகப் போகும் பரபரப்பு... சந்தித்த நண்பர்களிடம் எல்லாம் மாறி மாறி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...

"என்னப்பா சஞ்சய் ! இன்னிக்கு டெலிவரி-ன்னு சொன்னியே ! என்ன..எல்லாம் ஓகே வா?"

"யெஸ்...யெஸ்...கடைசியா ஒரு தடவை எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணிகிட்டு இருக்காங்க..."

"ஓ..! டாக்டர் வந்துட்டாரா? இதெல்லாம் பயப்படாதே ! ரொட்டீந்தான்...ஸ்கேன்..ப்ளட் டெஸ்ட்..."

"அப்சள்யூட்லி இல்லை...சாரி...நீ ஆஃபிஸ் ப்ராஜக்ட் டெலிவரி பத்தி கேட்டியோ-ன்னு நெனச்சுகிட்டேன்...! ஹி...ஹி...ஹி..." - மீண்டும் வழிந்தான்...

"ஹா...ஹா...ஹா... ! கம் ஆன் சஞ்சய்...! இது கிடக்குது...! நானே அந்த டெலிவரி பத்தி கேட்கிறேன்...நீ என்ன...ஒய்ஃபோட- கூட இல்லாம இங்க வந்து டென்ஷனா உக்கார்ந்திருக்க?...வீட்டுக்கு போப்பா...அது தான் முக்கியம்..." - இவனும் சிரித்துக் கொண்டே நகர்ந்தான்...




"என்னடா இது...! காலைலையே ஒரே பல்பா இருக்கு...! ச்சே !" - என்று தனக்குள்ளே நொந்து கொண்டு தனது கேபினுக்குச் சென்றான்.

"ட்ரிங்...ட்ரிங்..." - அவன் நாற்காலியில் அமர்ந்த நேரம், அவனது மேனஜரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது...சஞ்சயின் மேனேஜர், சஞ்சயிடம் மிகவும் நெருக்க மானவர். அலுவலக விஷயங்களை விட சொந்த விஷயங்களை இருவரும் அதிகம் பேசிப் பகிர்வார்கள்...

"ஹாய் சஞ்சய் ! குட் மார்னிங்..ஆல் செட் ஃபார் தி டெலிவரி டுடே?"

சஞ்சய்-க்கு கொஞ்சம் குழப்பமாய் இருந்த்து..."எந்த டெலிவரி பத்தி கேக்கறீங்க-ன்னு?" கேட்டு விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான்...பிறகு..."எப்படியிருந்தாலும், இவர் பர்சனல் மேட்டர் தான் கேட்பார்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டு...

"யெஸ் சார்...ஆல் செட்...ஈவ்னிங் 4 ஓ க்ளாக்..."

"வெரி குட்...அவங்க யூ.எஸ்...டைம்...அதனால இன்னும் லேட்டா கூட நாம அனுப்பலாம்...மேக் ஷ்யூர்...யூ கம்ப்ளீட்லி டெஸ்ட் இட்.. ஓகே?"

"ஐயோ ! ஒன் மோர் பல்பா ! நான் 4 மணிக்கு-ன்னு சொன்னது என் மனைவிக்கான டெலிவரி...இவர் கேட்டது..ப்ராஜக்ட் பத்தி போல.." - மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டு சமாளித்தான்...

"ஷ்யூர் சார்..வில் டேக் கேர்..."

"தாங்க் யூ...லெட் அஸ் மீட் பை ஃபோர்..."

சற்று தயங்கியவாறே சொன்னான்..."சார்...நான் சொன்னேனே.....வீட்டுல ஒய்ஃப்-க்கு இன்னிக்கு டெலிவரி...3 மணிக்கு கொஞ்சம் நான் ஆஸ்பிட்டல் போயிட்டு, நைட் 7 மணி போல வந்திடறேன் சார்.."

"ஓ....சாரி...நீ சொன்னத மறந்துட்டேன்...டேக் கேர்...! ஆல் தி பெஸ்ட்...!"

அழைப்பு கட் ஆனதும்..."உஃப்...இனிமே யாராவது வந்து கேட்டா...எந்த டெலிவரி பத்தி கேட்கறாங்க-ன்னு கண்டிப்பா கேட்டுக்கணும்...திஸ் ஈஸ் டூ மச்"  என்று நினைத்துக் கொண்டான்...அதே நேரத்தில் அவனது கைபேசி சிணுங்கியது...

"சொல்லுங்க அத்தை..."

"என்னடா டெலிவரி-க்கு ரெடியா?"

"எந்த டெலிவரி...?"

"டேய்..! என்னடா இப்படி கேட்குற? உன் பொண்டாட்டி பிரசவத்துக்காக அட்மிட் ஆயிருக்கா-ன்னு சொன்னியே !" - வெளியூரிலிருந்து பேசிய அத்தை...

"ஓ..! சாரி அத்தை...! நான் இப்ப ஆஃபிஸ்-ல கொஞ்சம் பிஸியா இருக்கேன்..அதான்...நானே கூப்பிடறேன்..." - என்று இன்னுமொரு சமாளிப்பு செய்து விட்டு இணைப்பைத் துண்டித்தான்...

"ச்சே ! டெலிவரி டென்ஷன் தாங்கலயே ! இந்த நெலம யாருக்கும் வரக்கூடாதுடா...ஒரே நாள்ல வீட்லயும் டெலிவரி..ஆஃபிஸ்லயும் டெலிவரி...!" - மீண்டும் நொந்துகொண்டான்...

மீண்டும் கை பேசி ஒலித்தது...

"சார் ! குட் மார்னிங்...4 மணிக்கா... டெலிவரி பண்ணனுமா.. சார்?"

"நீங்க யாரு பேசறீங்க-ன்னு சொல்லுங்க முதல்ல..."

"சார் ஆன்லைன்-ல செல் போன் ஆர்டர் பண்ணியிருந்தீங்க இல்ல...அந்த கொரியர் கம்பனியிலேர்ந்து பேசறோம் சார்...உங்க ஆர்டர்ல குறிப்பிட்ட டயத்துக்கு டெலிவரி-ன்னு சொல்லியிருக்கீங்க...பார்சல் வந்திடுச்சு...டெலிவரி பண்ணிடலாமா? 4 மணிக்கு வந்தா போதுமா?"

தன் மனைவிக்காக சர்ப்ரைஸ் கொடுக்க ஆன் லைனில் ஐபோன் ஆர்டர் செய்திருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது...

"இன்னொரு டெலிவரியா" - மனதுக்குள் நினைத்துக் கொண்டே..."3 மணிக்கா வீட்டுல டெலிவரி பண்ணிடுங்க...தாங்க் யூ.." ...

இன்றைக்குத் தனக்கு "டெலிவரி டே" என நினைத்துக் கொண்டு தானே சிரித்துக் கொண்டான்...


Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates