.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, September 29, 2017

கோள் மூட்டி இப்ப என்ன செய்யறான்?

#கடி ஜோக்ஸ் - பாகம் - 70

வந்தாள் மஹாலட்சுமி !"நவராத்திரியும் அதுவுமா,  வீட்டுல் 'வந்தாள் மஹாலட்சுமி'யே-ன்னு பாட்டு பாடின புருஷன்கிட்ட ஏன் சண்டை போட்ட?"


"பூ கொடுக்க வீட்டுக்கு பூக்காரி லட்சுமி வந்தப்போ-தானே அவர் அப்படி பாடினாரு !"

"???"

கோள் மூட்டி


"சின்ன வயசில எல்லாரையும் பத்தி டீச்சர்-கிட்ட கோள் மூட்டி விட்டுகிட்டே இருப்பானே ! அவன் இப்போ என்ன பண்றான்?"

"கோள் ஆராய்ச்சி விஞ்ஞானியா இருக்கான்...!"

"!!!!"


கறிக்கடை 


"என்னங்க கறி கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வாங்க-ன்னு சொன்னா...ப்ரெட்-டும், பட்டர் பிஸ்கெட்டும் வாங்கிட்டு வந்திருக்கீங்க?"

"நான் போன கறிகடை-யில இதான் கிடைச்சது!"

"அப்படி எந்த கடைக்கு போனீங்க?"

"பேக்கரி..!"

Saturday, September 23, 2017

கணவனும் மனைவியும் விளையாட்டு வீரரானால்...

#கடி ஜோக்ஸ் - பாகம் - 69
 
தூங்கிச் செல் !


"நீ புதுசா செல்போன் வாங்கி யூஸ் பண்ணாம அப்படியே தூங்க வெச்சிருக்கியா? ஏன்டா?"

"ஏன்னா...அது சாதாரண செல் இல்ல...ஸ்லீப்பர் செல்...!"

"!!!!"
கபடி...காலைப் புடி..


"நீதான் Football  ப்ளேயர் ஆச்சே ! உன்  தெறம‌ எல்லாம் பயன்படுத்த வேண்டியது தானே ! அப்படியும் ஏன் மனைவிகிட்ட அடிவாங்கற?"

"அவ கபடி ப்ளேயராச்சே !"

"???"


தொபகடீர்-ன்னு..!
"அந்த நடிகர் நேத்திக்குத்தான புதுக் கட்சி தொடங்கினார்...இன்னிக்கு கால்ல அடிபட்டு நொண்டிகிட்டு வர்றாரே !"

"அவர் அரசியல்ல குதிச்சாரே ! அதான்...!"

தமிழ்மணம் வாக்களிக்க...

Monday, September 18, 2017

ஜிமிக்கி கம்மலும் ஆட்டமும் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 68"இந்த ஜிமிக்கி கம்மல் பாட்டு வந்தாலும் வந்துது...வீட்டுல என் சம்சாரம் போட்டு பிண்ணி எடுக்குறா!"

"ஏங்க அவங்களும் டான்ஸ் ஆடுவாங்களா? நல்லதுதானே ?"

"அட நீங்க வேற ! எப்பவோ அவளுக்கு ஜிமிக்கி வாங்கித் தரேன்-ன்னு சொன்னது இப்போ ஞாபகம் வந்திடிச்சாம்...அத சொல்லிக் காட்டி பிண்ணி எடுக்குறா...!‍"

"???"
#ஜிமிக்கி கம்மல்# ################################################"மூணு தலைமுறையா அவங்க வீட்டுல புல்லட் மட்டுந்தான் வாங்கறாங்க சரி...அதுக்காக மூணையும் இப்படி ஒன்னு பின்னாடி ஒன்னா கயித்தகட்டி ஏன் போறாங்க?"

"அவங்கதான் நாட்டிலேயே முதன்முதலா புல்லட் ட்ரெயின் விடறாங்களாம் !"

"???"
#bullet train ################################################


"நம் மன்னரை விருந்துக்கு அழைத்து தன் அரண்மனையை சுற்றி காண்பித்த அண்டை நாட்டு மன்னன் கடைசியில் 'அப்செட்' ஆயிட்டாராமே ! அப்படி நம்ம மன்னர் என்ன கேட்டார்?"

"அந்தப்புரம் எந்தப் புறம்-ன்னு கேட்டாராம்...!"

"!!!"

Saturday, September 16, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 67


இது புது மாடல் !
"சாப்பாட்டக் கொறச்சுக்கோ ! நொறுக்குத் தீனி தின்னாதன்னு சொன்னா கேட்கிறாயா? இதுல மாடல் ஆகணும்-ன்னு ஆசை வேற? எப்படி முடியும்?"

"எனக்கு ப்ளஸ் சைஸ் மாடல் ஆகணும்-ன்னு ஆசை...!"

"???"

 
வீட்டுக் க்ளீனர்

"வீட்டோட மாப்பிள்ளை இருக்கிறதுனால...தினம் வீட்ட துடைச்சு சுத்தம் செய்யறேன்னு சொல்றீங்களே? தினம் யார் செய்வாங்க அந்த வேலைய?"

"MOP - பிள்ளைதான் !"

 

சிம்பாளிக்கா சொல்றாங்களாம் ! 

"உங்களத் திருடன் புடிச்சு மிரட்டினப்போ...ஆ...ஆ-ன்னு கரெக்டா பத்து தடவ கத்தினீங்களாமே ! ஏன்?"

"ஆ பத்து-ன்னு மத்தவங்களுக்கு சொல்றதுக்குத்தான்...!"

Thursday, September 14, 2017

சேர்த்து வைத்த கனவு !

பெற்றோர்கள், தன்னால் நினைவாக்க முடியாத கனவுகளை, தன் பிள்ளைகள் மூலம் நினைவாக்க முயற்சி செய்வர்...!Shared from:
Dinamani


Saturday, September 9, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 66


மேயர் மார்த்தாண்டம் !"உங்க பையன் இந்த ஊர் மேயரா? அப்படின்னா நீங்க ரொம்ப செல்வாக்கான ஆளு-ன்னு சொல்லுங்க !"

"அட நீங்க வேற...ஒழுங்கா படிக்கவும் படிக்காம, வேலைக்கும் போகாம, ஊர் மேய்ஞ்சிகிட்டிருக்கான். அதனாலே, தன்னை  'ஊர் மேயர்'-ன்னு தானே சொல்லிகிடுத் திரியறான் !"

"!!!"DISCOUNT OFFER
"நம்ம கம்பெனி வரவு செலவு கணக்கு பார்க்கிறவரு கூட தன்னோட fees-ல‌ 'ஆடி' மாச டிஸ்கௌண்ட் கொடுக்கறாராமே !"

"அவர் 'ஆடி'-ட்டர் ஆச்சே !"

"???"


ஸ்பெஷல் டே !
 
 

"இன்னிக்கு என்னங்க ஸ்பெஷல்? ஃப்ரைட் ரைஸ், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் -ன்னு எல்லாம்  ஃப்ரைட் அயிட்டம்ஸ்?"

இன்னிக்கு FRI DAY ஆச்சே !

Wednesday, September 6, 2017

தலைப்பு 1: மனம் ஒரு குரங்கு ! தலைப்பு 2: வாழ்வும் சாவும் !

​இரு தலைப்பு - ஒரு கவிதை ?!....#Bluewhale

"அருகிலே உள்ள‌
அண்ணாச்சி கடைசென்று
அரைகிலோ அரிசி வாங்கி வா !"
அம்மா சொன்னது 
அவன் காதில் விழவில்லை !
அலைபேசியில்
அயராது ஆழ்ந்திருந்தான்...!
அரைமணி கழித்து
'என்னாச்சு? அரிசி' என்றால்..
'எப்போ சொன்ன' என்கின்றான் !

அன்னை சொல்கின்ற‌
சிறு வேலை செய்யாமல்
அன்றாட சோத்திற்கு
வழியேதும் செய்யாமல்...
எவனோ சொல்கின்ற
'டாஸ்க்'(TASK) எல்லாம் செய்கின்றான் !
தன்னை தன்கையால்
மாய்த்திடும் நாள் குறித்து....!
Monday, September 4, 2017

Saturday, September 2, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 65


சாப்பிட்டு நேரா வாங்க !"தன்னோட ஒரு பையனுக்கு ஹோட்டலும், இன்னொரு பையனுக்கு ஹோட்டல் பக்கத்திலேயே ஒரு மருந்து கடையும் வெச்சு கொடுத்த நம்ம ராமசாமி புத்திசாலி !"

"எப்படி சொல்றீங்க?"

"ஹோட்டலேர்ந்து வெளியில வந்தா நேராக் கண்ணுல படுற மாதிரி "இங்கு வயிற்று வலி மருந்து கிடைக்கும்'ன்னு போர்டு வெச்சிருக்காரே !"

"!!!"


CATCH THE POINT

"பவுண்டரி அருகில் நின்றிருந்த FIELDER எதிரணி பேட்ஸ்மேன் கொடுத்த ரெண்டு கேட்ச்சை தவறவிட்டார் என்பதற்காக அவர் மீது 'தண்ணீர் பாட்டில்' வீசி எறிந்தாயா?"

"இல்லைங்க...! அவருக்கு உதவி பண்ண‌ காட்ச்- ப்ராக்டிஸ் கொடுத்தேன்...அவரு அதையும் புடிக்கல...!"

"???"

முள்ளு முள்ளு சலூன் !


"அந்த சலூன்-ல எல்லார்க்கும் முள்ளு, முள்ளாய் முடி வெட்டி விடறாங்களாமே ! ஏன்?"

"அது ரோஜா சலூன் ஆச்சே !"

"!!!"


தமிழ்மணம் வாக்களிக்க...

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates