.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, March 21, 2015

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது !

"அப்படி இருந்த நானா, இப்படி ஆயிட்டேன் !" - நினைவலைகளிலிருந்து மீண்ட அழகேசன், தன்னைப் பற்றி, தானே ஆச்சர்யப் பட்டுக்கொண்டான். அவன் நினைவலைகளில் தவழ்ந்த நினைவுகள் என்னென்ன?

பிறந்தது கிராமத்தில் என்றாலும், விவரம் தெரிந்த வயதிலிருந்து, அவன் படித்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பள்ளிக்கூட நண்பர்களுடன், வெறித்தனமாக ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தான். நாளடைவில், ஹாலிவுட் சென்று, தன் அபிமான நட்சத்திரங்களை சந்திக்க வேண்டும் என்பதே அவனது வாழ்வின் குறிக்கோள் ஆனது. பருவ வயதில், ஹாலிவுட் நடிகைகளின் அழகில் மயங்கி, ஹாலிவுட் சென்றுதான், தன் வருங்காலத் துணையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவும் எடுத்தான்.

பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, மேல்படிப்பு என்னும் சாக்கில், அமெரிக்கா பயணமானான். அழகேசனின் தாய்க்கு அவனை அனுப்புவதற்கு மனமே இல்லாமல் இருந்தாள். படிக்கும் காலத்தில் தன்னுடன் கிராமத்தில் கழிக்காமல் போனவன், படித்து முடித்தவுடன், தன்னுடைய வயதான காலத்தில் தன்னுடன் வந்து இருப்பான் என்று எண்ணியிருந்தாள். தன்னுடைய 'அழகு', தன்னை விட்டு நீண்ட தூரம் சென்றதிலிருந்து அவள் உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாய் பலவீனமானது.

அழகு, அமெரிக்கா சென்று, வேலையும் தேடிக்கொண்டான். தன் பெற்றோருடன் அவ்வப்போது தொலைபேசி மூலம் பேசி வந்து கொண்டிருந்தான்.

"அழகு ! எப்படிப்பா இருக்க?"

"நல்லாத்தாம்மா இருக்கேன். "

"அம்மாக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்குப்பா...ஒரு வாரம் லீவுல வந்துட்டுப் போயேன்..."

"அம்மா...லீவெல்லாம் கிடையாதும்மா...இங்க இருந்து எல்லா வசதியும் அனுபவிச்ச பிறகு அந்த கிராமத்தில வந்து என்னால் எல்லாம் இருக்க முடியாதும்மா !"

அழகேசனின் தாய்க்கு குரல் தழுதழுக்க "சரிப்பா..உடம்ப பாத்துக்க.." என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். அடுத்த நாள் அழகேசனுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது !  மறுமுனையில், அழகேசனின் தந்தை பேசினார்..."டேய் ! அழகு...உங்க அம்மா உடம்பு முடியாம இருக்காங்கடா...நீ வந்து ஒரு தடவ பாத்துட்டு போயிடுடா !"...

அழகேசன் திரும்பி வந்து அவனை பார்த்ததிலிருந்து, அவனது தாய்க்குத் தெம்பு பிறந்தது. மருத்துவர்களால் தர முடியாத மனத்தெம்பினை, மகனால் தரமுடியும் என்று தாய்க்குத் தெரியாதா?

"நீதான்...நல்லா ஆயிட்டயே அம்மா ! நான் கெளம்பறேன்...! நீங்களும் என்னோட வந்துடுங்க...அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சுட்டுப் போறேன்.." என்றான் அழகு...

"ரெண்டு நாள்ல பொங்கல் வருதுடா அழகு...பண்டிகைக்கு இருந்துட்டுப் போடா..." - அம்மா சொல்கிறாளே என்பதைவிட, தான் அவசரப்பட்டு சென்றுவிட்டால், மீண்டும் தொலைபேசி அழைப்பு வருமோ திரும்ப வரச்சொல்லி" என்ற நினைப்பில், பொங்கல் கழித்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தான்.

"பொங்கலோ பொங்கல்" என்று இல்லங்கள் தோறும் எழுந்த கோஷங்கள் பொங்கல் வந்துவிட்டதை அறிவித்தன. சூரிய பூஜைக்கு வெளியே வந்த அழகேசன் கண்களில், அவன் இதுவரை காணாத அழகு கண்ணில் பட்டது - எதிர் வீட்டில்..."அடடா...என் தேவதை" என பிண்ணணியில் ஒலித்தது போல் இருந்தது. பாவாடை, தாவணியில் இருந்த அந்த பெண், பாரம்பரியமான முறையில் பொங்கல் கொண்டாடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன், தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, அவனுக்கேப் புதிய அனுபவமாக இருந்தது.

அன்றைய தினம் அஸ்தமனம் ஆவதற்குள், அந்தப் பெண்ணை பற்றிய விவரங்கள் அவனிடம் சேர்ந்தன். பெயர், மகேஸ்வரி - சென்னையில் இருப்பவள் - பொங்கல் மற்றும் தீபாவளிப் பண்டிகைக்குக் கண்டிப்பாக கிராமத்திற்கு வந்து குடும்பத்துடன் தான் கொண்டாடுவாள். திரையில் காணும் ஒப்பனை செய்த ஹாலிவுட் நடிகைகளை விட, இவள் இயல்பாகவே அழகாக இருந்த்து, அழகேசனுக்கு அதிசயமாய் இருந்தது. 'ஐபேட்' - டில் பாட்டுக் கேட்டுக் கொண்டு, வாசற்பக்கம் அமர்ந்திருந்தவன், அடுத்த நாள் மாட்டுப் பொங்கலுக்கு தயார் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி கண்ணில் பட்டாள். மாட்டு கொம்புக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தாள். இவனது நெஞ்சிலே வானவில் வண்ணமிட்டது !

பொங்கல் தினங்கள் முடிந்தது. மகேஸ்வரியின் அழகு அவனை பாடாய் படுத்தியது. அவளுடன் பேசி, பழக்கப்பட்டும் கொண்டான். அழகேசனின் அம்மாவுக்கு, ஏற்கனவே மகேஸ்வரியை மிகவும் பிடிக்கும். அவள் மீது, தன் மகனுக்கு வந்த ஈர்ப்பினை அவள் ரசித்தாள். மகேஸ்வரி - அழகேசன் திருமணம் நடந்து இன்று  2 வருடம் ஆகிவிட்டது.

"இந்தாங்க காபி..." - என எதிரில் மனைவியாய் நின்ற மகேஸ்வரி, அவனது நினைவலைகளைக் களைத்தாள் !

* * * * * * * * * * * * * *

Friday, March 13, 2015

ரூபனின் தைப் பொங்கல் சிறுகதைப் போட்டி - 2015-ல் பரிசு !

தமிழ் வலைப்பதிவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நண்பர் ரூபன் அவர்கள் குழுவுடன் நடத்திய பொங்கல் சிறுகதைப் போட்டியில், எனது சிறுகதை ஆறுதல் பரிசை வென்றுள்ளது.

சிறுகதையைப் படிக்க...

http://psdprasad-tamil.blogspot.com/2015/03/lifechangingfestival.html


வெற்றி பெற்ற சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்...!போட்டி முடிவுகளுக்கான ரூபனின் பதிவு கீழே !

http://www.trtamilkkavithaikal.com/2015/03/2015.html

Story Contest Winner

Thursday, March 5, 2015

ஜோக்கு(?!)

இவன்:  ரகு ! என் ஃபுட்பால் கோச், முடியே வெட்ட மாட்டார் போல...அவ்வளவு முடி !
அவன்: அப்ப அவரு கோச் சடையான்-னு சொல்லு !
இவன்: ஹா ! ஹா ! ஹா !


_______________________________________________________________

"அதோ போறாரே...அவரு, படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கிறவங்ககிட்ட‌ வேலை வாங்கித் தருவதா சொல்லி, நிறைய பணம் வாங்கிகிட்டு நாமம் போட்டுட்டடாராம்!"

"அப்ப அவரு ஒரு 'பட்டை போடும் வேலைதாரி !'-ன்னு சொல்லுங்க !"

_______________________________________________________________


"சங்கீத வித்வானா இருந்த சோமசுந்தரம் அரசியல்ல குதிச்சிட்டாராமே !"

"தோடி ராகம் பாடிகிட்டு இருந்தவரு, இனிமே மோடி ராகம் பாடுவார்-ன்னு சொல்லுங்க !"

_______________________________________________________________

 "ஒரு வருஷம் முன்னாடி ஒரு தடவ தற்கொலை செங்சுக்கலாமுன்னு  10 ரூபாய்க்கு விஷம் வாங்கினேன். இப்ப போயி அதையே வாங்கப் போனா 35  ரூபாய்ன்னு சொல்றான் !"

"விலைவாசி விஷம் மாதிரி ஏறுதுன்னு புரிஞ்சுகிட்டீங்களா?"

_______________________________________________________________


Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates