.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, January 30, 2016

ஜோக்ஸ் - பாகம் - 17
"அந்த ஹோட்டல்ல இன்னும் கையாலதான் பில் எழுதிக் கொடுக்கறாங்க...ஆனா, ஹோட்டல்-ல கம்ப்யூட்டரைசேஷன் பண்ணியாச்சுன்னு சொல்றங்களே !"

"ஹோட்டல்ல நிறைய சர்வர்-ஸ் இருக்கிறதனால அப்படி சொல்றாராம் !"

"????"

"காதலர் தினத்துக்கு எங்கேயாவது போகலாம்ன்னு சொன்னா, ஏங்க காசிக்குப் போகலாமுன்னு சொல்றீங்க?"

"காசிக்குப் போனா ஏதாச்சும் விட்டுட்டு வரணும்ன்னு சொல்வாங்க...அதான் உன்னை அங்கேயே விட்டுட்டு வரலாமுன்னு பார்த்தேன்!"

" !!!!"

"ஆங்கிலம் சரியாத் தெரியாதனாலே, நான் ஒரு மர்டர் அட்டம்ட் கேஸ்ல மாட்டிகிட்டேன் !"

"அப்படி என்ன சொன்னீங்க?"

"உன் கன்னத்திலக் கிள்ளுவேன்னு என் சம்சாரத்துக்கிட்ட சொல்றதுக்கு "ஐ வில் கில் யூ"ந்னு சொன்னேன்...அவ போயி போலிஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டா !"

Thursday, January 28, 2016

தாய்மொழி தமிழின் இன்றைய நிலை !

 கட்டுரையைப் படித்து மதிப்பீடு செய்யவும் !
அகம்-ப்ரதிலிபி நடத்திய கட்டுரைப் போட்டியில், எனது கட்டுரை, கீழ்காணும் முகவரியில் வெளியாகியுள்ளது. போட்டி முடிவுகளுக்கு வாசகர் தரும் மதிப்பீட்டையும் கருத்தில் கொள்வதாக அறிவித்துள்ளார்கள்.
தாங்கள், சிறிது நேரம் ஒதுக்கி, கட்டுரையைப் படித்து, அந்த தளத்திலேயே மதிப்பீட்டையும் பதிவு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

"Read for Free"  என்னும் பொத்தானை அழுத்திக் கட்டுரையைப் படிக்கவும். தங்களின் வலையுறவுகளுக்கும் பகிர்ந்து மதிப்பீடு செய்து உதவவும்.
கட்டுரைத் தலைப்பு: தாய்மொழி தமிழின் தற்போதைய நிலை என்ன? அதை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

பி.பிரசாத்.

Saturday, January 23, 2016

ஜோக்ஸ் - பாகம் - 16


"அந்த குத்துச் சண்டை வீரர், விளையாட்டை விட்டுவிட்டு சினிமாவில் குதிக்கப் போறாராமே ! சினிமாவில் என்ன செய்ய போறாரு?"

"'பஞ்ச்' டயலாக்" எழுதப் போறாராம் !"

"!!!!

'பழைய ப்ளேடு'ன்னு ஒரு க்ரைம் த்ரில்லர் படம் எடுக்கலாமுன்னு இருக்கேன். அதுக்கு 'நச்'சுன்னு ஒரு 'பஞ்ச் லைன்' சொல்லேன் !"

"மொக்கை !"

"!!!!""இப்பெல்லாம், ஒரு படம் 10 நாள் ஓடறதே பெரிய விஷயம் ! அந்த நடிகர் தயாரிச்சு நடிக்கிற படத்துக்கு  'பத்தாவது நாளை நோக்கி'ன்னு போஸ்டர்  அடிச்சு ஒட்டியிருக்காங்களே!"

"அட ! நீங்க வேற ! படம் இன்னும் ரிலீசே ஆகல...படம் ரிலீசுக்கு 10 நாள் முன்னாடியே இப்படி ஒரு போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்க !"

Thursday, January 14, 2016

போகி, பொங்கல், பொன்னம்மா !
​போகி வந்தாச்சு ! பூங்கொடியே ! பொன்னம்மா !
   போயே போயாச்சு ! துன்பம்இனி இல்லம்மா !
ஆக்கி வெப்போமே ! பொங்கல புதுபானையில் !
   ஆகும் நம்காலம் ! நாளை வரும் வேளையில் !
உலகப் பொதுவிளக்காம்...சூரியனை வேண்டியே !
   கரும்பும், பொங்கலையும் படையலென வெப்போமே !
கலகம் அதுநீக்கி, நன்மையெல்லாம் வந்திடும் !
   கரும்பு போல்இனிக்கும் வாழ்வதுவும் கூடிடும் !
மஞ்சள் கொத்துடனே  இஞ்சிக் கொத்தும் சேர்த்துநீ !
    பொங்கும் பானையில கட்டிவெச்சுக் கும்பிடு !
நெஞ்சில் நெனச்சிருநீ ! நமக்குஎன்றும் உதவிடும்...
     நேசம் அதுமிகுந்த மாட்டுக் கூட்டம் தன்னையும் !
அழகர் கோயிலிலே அர்ச்சனையும் செய்யுவோம் !
   அழகாய் மருமகளைத் தைமகள்அவ காட்டுவா!
உழவர் நமக்கெல்லாம் இயற்கையேதான் பொன்னம்மா !
  உயர்ந்த தெய்வமாகும் உண்மையிது பொன்னம்மா !
   

Friday, January 8, 2016

ஜோக்ஸ் - பாகம் - 15

மனைவி செஞ்ச வெயிட்டான ஸ்வீட்!


"கையில என்னய்யா வெச்சிருக்க? 'ஓங்கி அடிச்சா ஒன்ற கிலோ வெயிட்'-டுன்னு சொல்ற?"

"என் பொண்டாட்டி செஞ்ச மைசூர் பாக்- தான் !"

"!!!"

________________________________________________________________________

மெதுவா போனா என்ன கிடைக்கும்?

"அந்தக் கடையில சுடசுட நாலு மணிக்கு போடற பஜ்ஜி, பகோடா ஏதாச்சும் வாங்கி வரேன்னு மெதுவா ஆறு மணிக்குக் கிளம்பி போனீங்களே, ஏதாச்சும் கிடைச்சுதா?"

"மெதுவா போனா என்ன கிடைக்கும் - மெது வடைதான்...!"

"!!!"
___________________________________________________________________________

பல் களை வேந்தன் !!

"உங்க தலைவர "பல் களை வேந்தன்" ந்னு சொல்றீங்களே ! ஏன்?"

"அவருக்கு கோபம் வந்து பளார்ன்னு அடிச்சார்ன்னு - அரேஞ்சு பண்ணினமாதிரி இருக்கிற பல் எல்லாம் களைஞ்சு போனமாதிரி ஆயிடும்...அதனால தான் !"
Friday, January 1, 2016

2016


புத்தாண்டுத் திருமகளே நீவருவாய் ! - நல்
   புத்துணர்வு பெருமகிழ்ச்சி அதுதருவாய் !
எத்துயரும் இல்லாத ஆண்டெனவே ! - இங்கு
   எம்வாழ்வில் நலம்சேர்க்க நீவருவாய் !

அன்னையென நம்மையெல்லாம் காத்திடுவாள் ! - அந்த
   இயற்கையவள் சீற்றங்களை குறைத்திடுவாய் !
மண்ணின்வளம் போற்றிஅதை காத்திடுமோர் - நல்
   மனமதனை மனிதருக்கு அளித்திடுவாய் !

மதமென்னும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு - பல
   மனிதஉயிர் குடிக்கின்ற பயங்கரத்தை...
பதப்படுத்தி நல்வழியில் திரும்பிடச்செய் ! - அவர்
  சக்திகளை ஆக்கமுடன் செயல்படவை !

வரும்ஆண்டு வளமெல்லாம் சேர்க்குமென.. - புது
  நம்பிக்கை அதுவளர்த்து வாழ்த்துகிறோம் !
வரும் ஆண்டே ! என்னவெல்லாம்  கொணர்வாயோ ! - அவை
  எல்லாமும் நலம்கூட்ட வேண்டுகிறோம் !


 

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates