.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 26, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 64


ஆடு வாங்கி வந்தேன் !
"வீட்டுல ஆடு வளர்க்கலாம்-ன்னு ஆடு வாங்கிட்டு வரச்சொன்னா என்னங்க மூணு ஆடு வாங்கிட்டு வந்திருக்கீங்க? நாலா வாங்கணும்...இல்ல ரெண்டு வாங்கியிருக்கலாம்..."

"என்னாச்சு...மூணு வாங்கினா என்ன?"

"ODD - ஆ இருக்குதில்ல...!"


வில்லாதி வில்லன் !


"வில் வித்தையில் சிறந்தவனான அண்டை நாட்டு மன்னன் நம் மன்னனை நாளைக்கு போருக்கு அழைத்திருக்கிறான்."

"நம் மன்னர் அதற்காக இன்று ரெடி-யாகிக் கொண்டிருக்கிறாரா?"

"ஆமாம்.....இப்போதே WILL எழுதிக் கொண்டிருக்கிறார்...!"


சொந்த அனுபவமா?

"நம்மோட அனுபவங்கள்தான் நமக்குப் பாடமா இருக்கனும்-ன்னு இல்லை...அடுத்தவங்க அனுபவத்திலேர்ந்தும் நாம தெரிஞ்சக்கலாம்-ன்னு சொன்னா அதுக்கு அந்த எழுத்தாளர் ஏகாம்பரம் தான் நல்ல உதாரணம்..."

"ஏன் அப்படி சொல்ற?"

"கல்யாணம் பண்ணிக்காமலேயே மனைவி (கணவனை மிரட்டும்) ஜோக்ஸ் எழுதறாரே !"தமிழ்மணம் வாக்களிக்க...

Thursday, August 24, 2017

விவேகம் தலைக்கு மட்டுமா?விவேகம் என்றால் புத்தி கூர்மையாம் !
விவேகம் என்றால் தெளிய பார்வையாம் !
விவேகம் என்றால் பகுத்து ஆய்வதாம் !
விவேகம் என்றால் மதியின் நுட்பமாம் !

விவேகம் என்றால் தலைக்கு மட்டுமா?
விவேகம் என்றால் மனதிற் கில்லையா?

மனதில் விவேகம் இருந்துவிடில்..
நடைமுறைக் கொத்த நினைவு வரும் !
நல்லதே செய்கிற எண்ணம் வரும் !

மதியும் மனமும் இணைவாக‌
சரியாய் இருந்தால்தானே விவேகமாம் !தமிழ்மணம் வாக்களிக்க...

Monday, August 21, 2017

என்ன தவம் செய்தேன்? - தினமணி - கவிதைமணி

தினமணி நாளிதழின் கவிதைமணி பகுதியில் 'என்ன தவம் செய்தேன்?' என்ற தலைப்பில் கவிதைகள் வரவேற்கப்பட்டன. தேர்வான கவிதைகளில் எனது கவிதையும் ஒன்று...மகிழ்வுடன் பகிர்கிறேன். 

தினமணி இணைய தளத்தில் படிக்க...


Saturday, August 19, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 63


பஞ்சும் தீயுமா?
"நம்ம கேட்டவரம்பனுக்கு, எதிர்த்த வீட்டு எலிசபத் மேல ஒரு கண்ணு-ன்னு சொன்னா, 'இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு?'-ன்னு கேட்கறீங்களே ! ஏன்?"

" CAT- ட வரம்பனுக்கு, எலி சபத் மேல கண்ணு இருக்கத்தானே செய்யும் !"

"!!!"


தலைவர் வாழ்க !
"மீட்டிங் போஸ்டரைப் பாத்துட்டு தலைவர் லோகநாதன் ஏன் அப்செட் ஆயிட்டாரு?"

"அவர் எல்லா மீட்டிங்-க்கும் லேட்-டாத்தான் வருவார்ன்னு, 'லேட் லோகநாதன்' அவர்களே வருக-ன்னு போட்டுட்டாங்களாம். தான் உயிரோட இருக்கற போதே லேட்-ன்னு போட்டாங்களேன்னு அப்செட் ஆயிட்டாரு !


இணைச்சுட்டோமுல்ல?

"ஏங்க ஆதார் அட்டையையும், பான் கார்டையும் PIN பண்ணி வெச்சிருக்கீங்க?"

"பான் கார்டை, ஆதார் அட்டையோட இணைக்க சொன்னாங்களே !"

"???"

தமிழ்மணம் வாக்களிக்க...

Tuesday, August 15, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 62

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !....'கடி'க்க சுதந்திரம் இருக்கு ! சிரிக்க சுதந்திரம் இருக்கு !


கண் மங்கலாவாத் தெரியுது?
"உங்க வீட்டுக்காரர் எல்லாமே மங்கலா தெரியுது-ன்னு சொன்னதுக்கு ரொம்ப கோபப்பட்டியாமே ! ஏன்?"

"அவரு...எல்லாமே மங்கலா தெரியுது-ன்னு சொல்லல...எல்லாமே பக்கத்து வீட்டு 'மங்களா' வாத் தெரியுது-ன்னு சொன்னாரு...!"

"???"

கையை நீட்டு...!

"ஏன்டா ! எத்தனை தடவை சொன்னாலும், ஹோம் ஒர்க்-கை நீட்டா எழுத மாட்டியா?"

"நீட்-டுலேர்ந்து தமிழ்நாட்டுக்கு எக்ஸம்ட்ஷன் கேட்டிருக்காங்க மேடம் !"

"!!!!"

ஒன்ஸ் மோர் !

"அந்த பெரிய மனுஷர் வீட்டு கல்யாணத்துல ஏன் போட்டோகிராபர்-ஐ அடிச்சு கலாட்டா பண்றாங்க...!"

"தாலி கட்டும்போது போட்டோ எடுக்க லேட் ஆயிடுச்சாம். அதுனால இன்னொரு தடவ தாலி கட்டுங்க...கரெக்டா எடுக்கறேன்-ன்னு சொன்னாறாம்...! அதான் !"

"???"

தமிழ்மணம் வாக்களிக்க...

Saturday, August 12, 2017

ஷட் அப் பண்ணுங்க !

திரையிலே நடித்திடு வோரை
இறையென ஏத்தாதீங்க !
'குறை'யென அவர்படம் சொன்னால்
குமுறியே சீறாதீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

வரைமுறைக் குள்ளே நல்ல‌
விமர்சனம் செய்தால் கூட‌
தரக்குறை வாகப் பேசி
தவறுகள் செய்யாதீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

வாங்கிய பணத்திற் காக‌
வேண்டிய வேலை செய்வார் !
தூங்கிடும் உந்தன் வாழ்வை
தூக்கியா விடுவார் யோசி !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

நாயகன் படத்தைப் பற்றி
நேர்மறைக் கருத்தைச் சொன்னால்
'தாய்'என போற்றும் பெண்மை
வாய்வழி அதனைச் சொன்னால்

உன்னுளே ஆடும் வக்கிரம்
உணர்வினைக் உருவாய் கொண்டு
பெண்ணினை வாட்டா தீங்க !
கண்ணையே குத்தா தீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

காழ்ப்புணர் வோடு பேசி...
மாண்பினைக் குறைக்கா தீங்க !
பாழ்பட லாமா நம்ம‌
பைந்தமிழ் பண்பாடுங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

தமிழ்மணம் வாக்களிக்க...

Thursday, August 10, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 61பிக் பாஸ் பைத்தியம்


"உங்க பையன் பிக் பாஸ் பைத்தியமா இருப்பான் போல...!"

"எப்படி சொல்றீங்க?"

"பழம் வைக்க பெரிய கூடை எடுத்துட்ட வா-ன்னு சொன்ன 'Bigg......BOSS....ket'-டா-ன்னு கேட்கறான் !"

"!!!"


சிந்தனை சிற்பியின் நக்கல் !

"ரங்கன், மங்கன்-ன்னு ட்வின்ஸ் சிற்பிகள் இருக்காங்க தெரியுமா? அதோ போறாரே அதான் அந்த மங்கன்...!"

"சிற்பி மங்கனா? கல் உளி மங்கன்-ன்னு சொல்லுங்க...!"

"!!!"

 

 கோஷ்டி பூசல் !

"நேத்து நடந்த நம்ம‌  கட்சி கோஷ்டி பூசல்ல கைகலப்பு ஆகி கடைசியில அவன் அவன் துண்ட காணும் துணிய காணும்-ன்னு ஓடற அளவுக்கு போயிடுச்சு !"

"கோஷ்டி பூசல், வேட்டி பூசல் ஆயிடுச்சு-ன்னு சொல்லுங்க !"


Saturday, August 5, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 60

எலிகளின் பிக்பாஸ்"எலிகள் எல்லாம் சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்திச்சே ! என்னாச்சு !"

"முதல் வாரத்திலேயே எல்லாரும் 'எலி'மினேட் ஆயிட்டாங்க !"

"???"
அயர்ன்-காரர் அயன் படம் பார்த்தாரா? 
"ஏங்க சலவை கடை காரர் ரொம்ப கோபமா இருக்காரு?"

"அயர்ன் கடை-ன்னு போட்டிருக்கே ! இங்கே பழைய இரும்பு கிடைக்குமா-ன்னு யாரோ கேட்டாங்களாம்...!"

"!!!!"


எள்ளு - எதுக்கு இந்த லொள்ளு?


"எப்படியாவது சொந்தத் தொழில் பண்ணி இந்த ஊருலயே பெரிய்ய ஆளா வருவேன்-ன்னு ஊர்க்காரங்ககிட்ட சபதம் பண்ணி 'எள்ளு' வியாபாரம் பண்ணின ஏகாம்பரத்தோட பிஸினஸ் சுத்தமா படுத்திடிச்சாமே !"

"அப்படியா ! ஊர்க்காரங்க என்ன பண்ணினாங்க?"

"அவரைப் பாத்து எள்ளி நகையாடினாங்க !"


Thursday, August 3, 2017

பிக் பாஸ் - ஓவி(யா)?

அடுத்தது யாரு????


நாள் - 1

"நம்ம அடுத்த பிக் பாஸ் யாரு-ன்னு சொல்றீங்க ஸ்ரீராம்?"

"வேற யாரு? எல்லார்க்கும் தெரிஞ்சது தானே !"

"எல்லார்க்கும் தெரிஞ்சதுனா, நீங்க யாரை சொல்றீங்க? ஏன்னா இதுல ரெண்டு க்ரூப் இருக்கு...நீங்க சொல்றது ஓவியா?"

"யெஸ்...கண்டிப்பா..."

"கை கொடுங்க...! நானும் உங்க கட்சி-தான்...ஆனா..நம்ம குரு சார் மட்டும் 'கணேஷ்' தான்-னு சொல்றாரு"

"ஹலோ...! அப்படி சொல்றது நான் மட்டும் இல்ல...இன்னும் நெறய்ய பேர் சொல்றாங்க !" - குறுக்கிட்டு, தன் கருத்தை ஞாயப்படுத்தினார் குரு.

"பார்ப்போம்...! எப்ப சார் ரிசல்ட்? தெரியல இல்ல? எப்படியும் கூடிய சீக்கிரம் தெரியத் தானே போகுது !" - என்று மூவரும் தத்தம் இடத்திற்கு நகர்ந்தனர்.

நாள் - 2

"நேத்து டி.வி.ல பாத்தீங்களா குரு... நம்ம பிக் பாஸை? எப்படி சூப்பர் இல்ல?"

"யாரு ஓவியா? நான் பார்க்கலையே !"

"யெஸ்...வேற யாரு? ஹா...ஹா...! கண்டிப்பா உங்க க்ரூப் தோற்கத் தான் போகுது !"
நாள் - 3
இடம்: தனியார் அலுவலகம் - அனு என்டர்ப்ரைசஸ்

"என்ன குரு! மெயில் பார்த்தீங்களா ! நாங்கதான் அப்பவே சொன்னோமில்ல...!" - எக்காளித்து ஸ்ரீராம்

அன்றுதான் நெடுநாள் விடுப்பில் இருந்து விட்டு பணிக்கு வந்திருந்த பரணிக்கு என்ன நடக்கிறது என்று குழப்பமாக இருந்தது.

"என்ன முழிக்கறீங்க பரணி...வாங்க ஒரு காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்..." - அழைத்தது ஸ்ரீராமும் குருவும்.

இடம்: அலுவலக முதல் மாடி - சாப்பிடும் அறை

"நம்ம எம்.டி. வையாபுரி சார், புதுசா ஆரம்பிச்ச ஃபாரின் கம்பெனிக்கு டைரக்டரா போகப் போறாரு...!  நேத்து ஒரு நகைக் கடை திறப்பு விழாவில கூட தலைமை தாங்கி பேசினாரே ...டீவியிலே பார்த்தியா? ம்ம்ம்...அவருக்கு அடுத்து நம்ம எம்.டி-யா வரப்போறது யாரா இருக்கும்-ன்னு கம்பெனி முழுக்க ஏகப்பட்ட காஸிப்...அதுல ஒரு க்ரூப் சொன்னது ஹெச்.ஆர். ஹெட் கணேஷ்-தான் வருவாரு-ன்னு...நான், என்னோட சேர்ந்து இன்னும் சில பேரு சொன்னோம் நம்ம அட்மின் ஹெட் ஓ.வெங்கடேசன் (ஓ.வி) தான் வருவார்-ன்னு...இப்போ மெயில் வந்து கன்ஃபர்ம் ஆயிடுச்சு...ஓ.வி...தான் நம்ம அடுத்த பிக் பாஸ்-ன்னு...!

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates