.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, July 29, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 59


"'பின்'-னால வருத்தப் படக்கூடாது !"


"என்னங்க செஞ்சீங்க ஏ.டி.எம்.-ல? நல்லா வேலை செஞ்சுகிட்டிருந்த மிஷின் திடும்-ன்னு நின்னுபோச்சு !"

"Enter PIN -ன்னு சொல்லிச்சு - என்கிட்ட இருந்த ஊக்கு நாலு எடுத்து உள்ளே போட்டேன் ! மக்கர் பண்ணுது !"

"!!!"


இதுதான்டா உண்ணாவிரதம் !


"தலைவர் வீட்டுல 2 நாளைக்கு சமையக்காரி லீவாம். அதனால ஏதாவது ஒரு காரணத்துக்காக அனுமதி வாங்காத இடத்துல் உண்ணாவிரத போராட்டம் செய்யலாம்-ன்னு சொல்றாரு?"

"இது என்னங்க கதை?"

"அனுமதி வாங்காத இடத்துல போராட்டம் செஞ்சா கைது பண்ணி உள்ள வெச்சாலும், சாப்பாடு போடுவாங்களே ! அதான் !"ரெயின் ரெயின் !
 

"நீங்க மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லையாமே ! அப்படியா?"

"ஆமாங்க...ஏன்னா.மழை பேஞ்சாதான் பள்ளிக்கூடம் லீவு விட்டுடுறாங்களே !"

Saturday, July 22, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 58


 ஐ வில் கிள்ளு யூ !

"எங்க க்ளாஸ் டீச்சர் கிட்ட‌ தப்பு பண்ணி மாட்டிகிட்டா பயங்கரமா கிள்ளுவாங்கடா !"

"அவங்க பயங்கர 'கிள் லேடி'-ன்னு சொல்லு....!"

"!!!"

 மாமியார் - தி பிக் பாஸ் !


"எங்க அம்மாவ கண்டிப்பா அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில பங்குபெற வைக்கணும்-ன்னு ரொம்ப ஆர்வமா இருக்கியே ! அவங்க மேல உனக்கு இவ்ளோ பாசமா?"

"அட நீங்க வேற...! அவங்கள அந்த வீட்டுல அடைச்சு வெச்சாங்க-ன்னு, நான் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாமுன்னுதான்..!"

"???"


ஜோஸ்யம் பலித்ததா?! "தலைவரோட சின்ன வீடு.. தனம்.... இப்போ முன்ன மாதிரி அடிக்கடி வந்து தலைவரப் பார்க்கறது இல்லையாம்...ஜோஸ்யக்காரன் சொன்னது நிஜமாயிடுச்சு !"

"அப்படி என்ன சொன்னார் ஜோஸ்யக்காரரு?"

"குரு பெயர்ச்சி-க்கு அப்பறம் 'தனம்' வரவு குறையும்-ன்னு சொன்னாரே !"

"!!!

Saturday, July 15, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 57


அத்தியாவசய பொருட்கள் அவை யாதெனில்..

"அத்தியாவசய பொருட்கள் பால், பருப்பு-ன்னு பட்டியல் எடுத்து அதுக்கு வரி குறைப்பு கேட்கலாம்-ன்னு பார்த்தா, அந்த லிஸ்ட்-ல 'செண்ட் பாட்டில்'-ல சேர்க்க சொல்றீங்களே !"

"ஆமாங்க...தண்ணி இல்லாம பல நாள் குளிக்காம இருக்கும் போது, அதுதானே அத்யாவசமா இருக்கு,,,!"

"???"
குவாரி டு டாக்டர் !

"குவாரி-யில கல் உடைச்சிகிட்டு இருந்தவரு மறுவாழ்வு பெற்று, நல்லா படிச்சு, இப்போ பெரிய டாக்டரா இருக்காராம் !"

"அப்படியா ! என்ன டாக்டர்?"

"'ஸ்டோன்' சர்ஜனாம்...!"


பயில்வான் ஆவறது ஈஸியா?

"தினமும் உடற்பயிற்சி செஞ்சு, நல்ல பயில்வான் ஆகணும்-ன்னு குறிக்கோளோட ஆரம்பிச்சவரு...பாதியிலேயே முயற்சியக் கைவிட்டுட்டாராம் !"

"பயில்வான் ஆக நெனச்சவரு ஃபெயில்வான் ஆயிட்டாரு-ன்னு சொல்லுங்க !"

"!!!"

Saturday, July 8, 2017

வதந்தி பரப்பாதே தோழா !

​​
வாடா தம்பி முரளி ! - நீ
  கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
   பரப்பி டாதே வதந்தி !

சோறு தின்னா தினம் தினமும் ! -ஒரு
    நோவு வந்து சேருமுன்னு...
நீரு குடிச்சா அடிக்கடி யாய் ! - உள்
   நெஞ்சடைச்சு போகுமுன்னு!

ஜோரா நிக்கும் தலைவரை யும்  - அவர்
   காலம் ஆனார் சோகமுன்னு...
தீரா சண்டை ஹீரோவுக்கும் - அவர்
  காதலிக்கும் வந்ததுன்னு...!

பூவா வித்தா அதுல கூட - பல‌
   ப்ளாஸ்டிக் பூவு உள்ளதுன்னு...
மாவா வித்தா அதுல கூட - ஒரு
   மாஞ்சா கலந்து  இருக்குதுன்னு.

தாலி கயிறைக் கட்டிகிட்டா -  பெரும்
   தாக்கம் தரும் ஆபத்துன்னு...
காலி டப்பா கையில் வெச்சா - பணம்
   காலியாகிப் போகுமுன்னு..

தோதா ஒரு திட்டம் வந்தா - அதத்
   தொடர்ந்து வரும் குழப்பமுன்னு...
ஏதோ ஒண்ணு சொல்லிகிட்டு - இங்க
    ஏய்க்கிறது பொழுதுபோக்கா?


​வாடா தம்பி முரளி ! - நீ
  கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
   பரப்பி டாதே வதந்தி !

Saturday, July 1, 2017

கலாய்...மரண கலாய்...!


'நகைச்சுவை' என்று 'tag' செய்து எழுதினால், பல பேர் வந்து படிக்கிறார்கள். சீரியஸ் விஷயங்களுக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதில்லை. பெரும்பாலோனவர்கள், வேலை மற்றும் அலுவல்களிலிருந்து சற்று 'ரிலாக்ஸ்' செய்வதற்கு இணைய பக்கம் வருவதால், 'நகைச்சுவை'-யை விரும்பிப் படிக்கின்றனர் என்று இருக்கலாம். 


நகைச்சுவையில் பல ரகங்கள் இருக்கின்றன். இதிலே 3-ம் பட்ச நகைச்சுவையாகக் கருதப்படுவது 'மற்றவரை நையாண்டி' செய்வது' போல் பேசி நகைச்சுவை(?) செய்வது. இதற்கு மாடர்ன் பெயர் 'கலாய்...மரண கலாய்...!" என்றும் ஆங்கிலத்தில் 'ட்ரால்' என்றும் சொல்கிறார்கள்.

எதையும் விமர்சிக்கும் அதிகாரம் யாருக்கும் இருக்கிறது என்பதல்ல விவாதம். தாராளமாய் விமர்சனங்கள் செய்யலாம். ஆனால், 'கண்ணியம்' கெடாமல் விமர்சனம் செய்ய முடியுமா முடியாதா என்பதுதான் சிந்திக்க வேண்டியது. விமர்சனம் செய்வோர்க்கு 'கண்' போன்றது 'கண்ணியமாய் கருத்துரைப்பது'. வெறுப்பாக நாம் சொல்ல வரும் விஷயத்தைக் கூட அடுத்தவர்க்கு புரியும் படியும், அதே சமயம் மனம் புண்படாத வகையிலும் சொல்ல முடியுமே ! அந்த பண்பாடு ஏன் இப்போது மங்கிக் கொண்டிருக்கிறது?'ட்ரால்' செய்து வீடியோ பதிவு செய்தால், பல லட்சம் பேர் பார்க்கிறார்கள். அதிலே, ஒட்ட வைத்து வரும் திரைப்பட வசனங்களை பார்த்தால்.."ஏன்டா நாயே...! நீயெல்லாம் சோறுதான் திங்கறியா...இல்ல..." என்பது போன்ற வன்மையான வார்த்தைகள்...! யாரை 'கலாய்'-க்கிறார்களோ அவரை 'நாய்' என்று திட்டுவது போல் ஒட்டு வேலை செய்கிறார்கள். யார் எப்படி ரசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை...ஆனால், இதுபோன்ற வசனங்கள் வரும்போது மனதில் எனக்கு ரொம்பவும் 'நெருடல்' வருகிறது. யாராக இருந்தாலும், பண்பான வார்த்தைகளால் விமர்சிக்கலாமே... !

இது ஒரு 'செயின்' போல் ஆகிவிடுகிறது. என் தலைவன் அல்லது சாதிக்காரனை ஒருத்தன் 'கலாய்'த்தால் பதிலுக்கு நானும் அவனது தலைவன் அல்லது சாதியை விமர்சனம் செய்து, அதுவும் தரக்குறைவாக...பதிவு செய்ய வேண்டுமா? சிந்திக்க வேண்டிய தலைப்பு - இந்த 'கலாய்த்தல்' அல்லது 'ட்ராலிங்' என்னும் கலாச்சாரம்...

வேறு எதையும் விட வள்ளுவனின் வாக்கு இங்கே மிகவும் நன்றாகப் பொருந்தும்...

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று."

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண‌
நன்னயம் செய்து விடல்."

பண்பாடோடு நடக்கும் சமுதாயமாக‌ எப்போது மாறுவோம்? 

என்ன உறவுகளே ! இதே உணர்வு உங்களுக்கும் இருந்திருக்கிறதா? இது பற்றி உங்கள் கருத்து என்ன? பகிருங்களேன்...!

கடி ஜோக்ஸ் - பாகம் - 56

JUST FOR GIGGLES - NO VIEWS REGISTERED HERE...!

யாரைப் பாத்து என்ன கேள்வி?"ஏன்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்ட?"
 

"அப்படி என்ன அண்ணே கேட்டான்?"
 

"வரிக்குதிரை வளர்க்கிறானம் வீட்டுல...அதுக்கும் வரி கட்டணுமா?ன்னு கேட்கறான்...!"

"!!!"


 வரி வரியா...

"என்னங்க நாலு வரி நோட்டு கேட்டா ரெண்டு வரி நோட்டு கொடுக்கறீங்க?"

"ரெண்டு வரி- tax -ல புடிச்சிட்டோம் !"

"???"'வரி'-சை !
 
"வரிசையா நின்னவங்க எல்லாம் ஏன் கலைஞ்சு ஓடறாங்க...!"

"வரிசையிலே நின்னா புது 'வரி' கட்டணும்-ன்னு யாரோ சொன்னாங்களாம் ...!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates