.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, September 24, 2015

லுங்கி !

"குலுங்கி அழுது கேட்கிறேன்-என்னை ஏன் கைவிட்டீர்?" என்ற தலைப்பில் சக பதிவர், திரு. டி.என்.முரளிதரன் அவர்கள், மங்கி வரும் லுங்கி அணியும் பழக்கத்தைப் பற்றி மிக விரிவாகவும், நகைச்சுவையுடனும் எழுதியிருந்தார்.

http://www.tnmurali.com/2015/06/voice-of-lungi-indian-dresses.html

லுங்கி தொடர்பான எந்தத் தகவலையும் விடாமல், அவர் பதிவு செய்திருந்தது என்னைக் கவர்ந்தது. அதையே ஒரு கவிதையாக்கும் முயற்சியில் இறங்கினேன். அதன் விளைவு இதோ:
 -----------------------------------------------------------------------------------------------------------





 "லுங்கி" என்றென்னை சட்டை செய்ய மறந்தாயா இளைஞனே ! - முட்டி வரை
தொங்கும் ட்ராயருக்கு மாறி எனை மறந்ததுஏன் நண்பனே !
இடையில் அணிந்திங்கு இடைப்பட்ட வயதுடையோர் மட்டுமே -  சற்றும்
தடைகள் அதுவன்றி நடந்திடுவார் அவருக்கென் நன்றியே!

திரையில் ரவுடிகளும் எனைஅணிந்த காலம் மாறிப் போனதே ! - இப்பொழுது
அரையில் பர்முடாசும் இடம்பிடிக்க என்நிலைமை பாவமே !
லுங்கி டான்ஸென்று ஆடினாரே பாலி வுட்டின் பாதுஷா ! - பல கோடி
பொங்கி பாட்டு ஹிட்டு, என்நிலைமை மாறவில்லை சோகமே !

போர்வை அதுவாக நான்மாறி உதவியதை மறந்ததேன்? - கிழிசல்களை
பார்வை படாவண்ணம் மறைத்திடுவேன் எனைத் தவிர்த்தல் நியாயமா?
வேட்டி அதுகூட அவிழ்ந்திங்கு சங்கடங்கள் சேர்க்குமே  - என்னுடனே
போட்டி அதுபோட வேட்டிக்கிலை சிறிதளவும் தகுதியே !

அன்னை சேலைபோல  மழலைதூங்கும் தூளியாக மாற்றியே ! - அந்தரத்தில்
என்னைத் தொங்கவிட்டு ஆட்டியதும் மறந்ததுஏன் நண்பனே !
அழுக்கைத் துடைத்தெடுக்க, கைப்பிடிக்கும் துணியெனவே மாறினேன் ! - காலில்
மிதிக்கும் மிதியடியாய் நசுங்கி யேநான் இறுதிநாளைப் போக்கினேன் !

தையல் செலவுஇல்லை தையல்கூட அணிந்து கொண்டு போகலாம் ! - நல்ல
வெயில், மழை யெனவே எப்பொழுதும் எனை அணிந்து கொள்ளலாம் !
பொங்கல் திருநாளில் இலவசமாய் வேட்டி தரு வோரெல்லாம் - லுங்கி
எங்களையும் இலவசமாய் தந்துபலர் வாழ்த்துக்களை வாங்கலாம் !

மதங்கள் எனக்கில்லை; கோயில் செல்ல தடைஎனக்கு உள்ளதே ! - என்றும்
பதமாய் இயற்கையதன் அழைப்பினுக்கு விலகிடுவேன் சீக்கிரம் !
வேட்டி விளம்பரத்தில் தோன்றுகின்ற பிரபலங்களில் ஒருவரும் - கொஞ்சம்
மாற்றி எங்கள்குலம் போற்றினாலும் அவருக்கென் நன்றியே!

வீதி ஓரத்தில் கூவிஎனை விற்றுவந்த ஆட்களும் - இன்று
ஜாதி மாற்றம்போல் பர்முடாசை ஆதரித்து வருவது ஏன்?
இணைய வலைத்தளத்தில் வேட்டிக்கென் குரல்கொடுத்த பேரெல்லாம் - இங்கு
இணைந்தே எங்களுக்கும் குரல்கொடுக்கும் நாளும்வந்து சேருமோ?!

அண்டை நாடெல்லாம் கொண்டாடி எனைஅணிவார் இன்றுமே ! - ஐயகோ 
தொண்டை அடைக்கிறது  என்நிலைமை சொல்லியது குமுறியே !
இறுக்கம் மிகுவான ஆடைகளை அணியும் அன்பு நண்பனே ! - எங்கள்
உருக்கம் தனையறிந்து இரக்கம்காட்டி ஆதரிக்க வேணுமே !

11 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. ஐயா!நான் எழுதிய கருத்துக்கள் அனைத்தையும் எதுகை மோனையுடன் கவிதைக்குள் அற்புதமாக கொண்டு வந்துவிட்டீர்கள்
    வாழ்த்துகளும் பாராட்டும்

    ReplyDelete
  3. எல்லாமும் மாக இருந்த ஆடை,,,
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  5. வணக்கம்
    அண்ணா
    வித்தியாசமாக அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாங்க.. அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அசத்தல் என்று சொல்லி என்னை அசர வைத்த ரூபனுக்கு நன்றி !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates