மாற்றம் வரவேண்டும் எனநினைக்கும் மனமிருக்கா தோழா? - நாட்டின்
மாண்பை மேம்படுத்தும் கனவிருக்கா கண்களிலே தோழா?
சீற்றம் கொண்டுபின் அடங்கியேநீ ஒதுங்குவதும் முறையா? - ஏதும்
சீர்செய் முடியாது எனமுடித்து ஒடுங்குவதும் சரியா?
வலிமை சேர்உடலும் பணபலமும் படைத்ததொரு கூட்டம் ! - கொடும்
வன்மை முறைசென்று விதவிதமாய் ஆடுதிங்கே ஆட்டம் !
சீற்றம் கொண்டுபின் அடங்கியேநீ ஒதுங்குவதும் முறையா? - ஏதும்
சீர்செய் முடியாது எனமுடித்து ஒடுங்குவதும் சரியா?
வலிமை சேர்உடலும் பணபலமும் படைத்ததொரு கூட்டம் ! - கொடும்
வன்மை முறைசென்று விதவிதமாய் ஆடுதிங்கே ஆட்டம் !
தனிமை தனில்புலம்பி துடிதுடிக்கும் தோழர்களின் நாட்டம் - ஒன்றாய்
திரண்டே தோள்கொடுத்தால் எதிரியெலாம் எடுத்திடுவார் ஓட்டம் !
கனிம வளம்தன்னை களவாடிக் காசாக்கும் கும்பல் ! - அதைக்
திரண்டே தோள்கொடுத்தால் எதிரியெலாம் எடுத்திடுவார் ஓட்டம் !
கனிம வளம்தன்னை களவாடிக் காசாக்கும் கும்பல் ! - அதைக்
கண்டே அஞ்சாமல் போராடும் சகாயம் அவர்கள் !
தனியாய் நம்முன்னே ஒளிர்கின்ற சுடரெனவேத் தெரிவார் ! - அவர்
வழியில் தடைதாண்டி துவளாமல் நீச்சலிட நீவா !
பாயும் நதியெல்லாம் வளைந்தோட அஞ்சுவதும் இல்லை ! - கடை
சேரும் கடல்தூரம் அறிந்ததவும் சோர்வதுவும் இல்லை !
ஓயும் இப்பொழுது என அலைகள் நினைப்பதுவும் இல்லை ! - தான்
ஓங்கி வீழ்ந்தாலும் மீண்டுமெழ மறப்பதுவும் இல்லை !
"போகும் தூரமது வெகுதொலைவு" சிந்தையிலே வைத்து...- அதற்குள்
'போதும்' எனஎண்ணி நில்லாமல் இலக்கினையே நோக்கு!
'ஆகும் இதுநம்மால்' நம்பிக்கை ஒளிதன்னை ஏற்று ! - எதிர்
காணும் தடைகளைநீ வெற்றியதன் படிகளென மாற்று !
வெற்றிக் கனியதுவும் கைசேரும் வரையிலும்நீ ஓடு ! - அந்த
வானம் அதைத்தாண்டி வரைந்திடுவாய் புதுஎல்லைக் கோடு !
சுற்றும் எதிர்மறையை நம்பிக்கை அதனாலே வீழ்த்து ! - இந்த
உலகேப் பாடிடுமே உனைஏற்றி அருந்தமிழில் வாழ்த்து !
உறுதிமொழி:
1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்
2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
கவிதையின் திறன் கண்டு மனம் மகிழ்ந்தேன் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் !
Deleteவாழ்துகள்1 மிகநல்ல கவிதை!
ReplyDeleteநன்றி ஐயா ! தொடர்ந்து வரவும் !
Deleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஐயா ! தொடர்ந்து வரவும் !
Deleteஅருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி தளிர் சுரேஷ் அவர்களே!
Deleteவெற்றிக் கனியதுவும் கைசேரும் .... வாழ்த்துகள்
ReplyDeleteபாவலரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
Deleteவணக்கம் !
ReplyDeleteநம்பிக்கை ஊட்டும் பாவரிகள் கண்டு மகிழ்ந்தேன்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா .
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ! தொடர்ந்து வரவும் !
Deleteஅருமை
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா
நன்றி நண்பரே
Deleteஅருமை அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!
ReplyDelete