.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, September 28, 2015

தொடர்ந்து எழுது தோழா !



காவியம் படைச்சோமுன்னு
    கவிதையும் எழுதிவெச்சா...
ஓவியம் வரைஞ்சோமுன்னு
    புதுமையாத் தீட்டிவெச்சா..
பாவிப்ப யலுகயாரும்
    பாத்துபா ராட்டுதன்னை
தூவிட்டுப் போகலைன்னு
   துக்கமா? தேவையில்லை !

சப்பையாய் சரக்கில்லாமல்
   சரமாரி எழுதற'அவனும்'
குப்பையாய் சந்தம்வெச்சு
   கிடைச்சத எழுதறபோதும்
"அப்பப்பா ஆஹா"என்று !
   அம்பது அலம்பல்வருது!
எப்பவும் அதைநினைக்காதே !
    உண்மையில் அதுநிளைக்காதே !

உன்னிடம் ஆற்றல்உண்டு!  
   உறுதியாய் அதையேநம்பு !
முன்னிடம் அதுவேஉன்னை
   மெனக்கட்டுச் சேர்க்கும்பாரு !
"என்னிடம் திறமைஇருக்கு"...
   என்றுநீ நம்பியேஎழுது!
கண்டிப்பாய் ஒருநாள்வருமே
   கூட்டம்உன் பின்னால்தானே !

உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

11 comments:

  1. மிக்க நன்றி ! சூப்பர் fast !

    ReplyDelete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
    2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  3. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  4. அருமையான கவிதை வாழ்த்துக்கள்,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  5. பாட்டாளி மக்கள் பாட்டைப்
    பண்பட்ட மரபில் நட்டுக்
    கூட்டாக கொள்கை சேர்த்துக்
    கொடுத்தநல் விருத்தம் வெற்றி
    ஈட்டித்தான் வந்த தென்ற
    இன்புறும் செய்தி தன்னைக்
    கேட்டுத்தான் உவப்பீர் நெஞ்சம்
    கவர்ந்தநும் கவிதை வாழ்க!

    போட்டியில் வெற்றி ஈட்ட வாழ்த்துகள் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்து படித்து நெகிழ்ந்தேன்! மிக்க நன்றி !

      Delete
  6. அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates