.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, September 3, 2015

ஆர்மி அங்கிள் !

"மணி ! வாசல்ல யார் வந்திருக்காங்க பாரு !" - அம்மாவின் கூவல் கேட்டு, ஓடி வந்தான் மணி...

எதிரே வாய் நிறையும் புன்னகையுடன் வந்தவரைப் பார்த்து..."அங்கிள் ! வாங்க...!ஆன்ட்டி வரலியா?" என்று கேட்டான்.

"அங்கிள், எப்போதும் சிங்கிளாத்தான் வருவார்...ஹா..ஹா...நான் Anti- Aunty...ஹா..ஹா..." என்று சிறித்தவாரே உள்ளே வந்தவர் அமர்ந்து கொண்டார்.

"டேய் ! என்னடா நான் அங்கிள் வந்திருக்கேன் ! என்னை விட்டுட்டு...ஆன்ட்டியைக் கேட்குறே"

"ம்...அது வந்து...ஆன்ட்டி வந்தா எனக்கு பலகாரம் சுட்டுத் தருவாங்க !"

"ஓ ! அதுதான் சேதியா ! நான் பல காரமென்ன..பல அதி காரிகளையே சுட்டவன்..!"

"அப்படீன்னா?"

"நான் ஆர்மியில இருந்தப்போ, எதிரி கேம்ப்-ல பெரிய பெரிய அதிகாரியையெல்லாம் சுட்டிருக்கேன்..."

"நிஜமாவா அங்கிள்? உங்க கிட்ட "gun" இருக்கா?"

"ஹா...ஹா..என் பேரு என்ன? ஆர்மி முரு கன்...! புரியுதா? ஹா..ஹா.."

"அங்கிள் ! என் பெயர்ல கூட தான் கன் இருக்கு...மணி gun டன்...! ஆனா, என்கிட்ட gun இல்லையே !"

"ஹி...ஹி..." - என் பதில் சொல்லமுடியாமல் சமாளித்தபடி, மணியின் முதுகில் தட்டிக் கொடுத்தார் அங்கிள்...

"என்ன அண்ணே சாப்பிடற? டீ, காபி..." - உபசரித்தாள் மணியின் அம்மா..

"டீ..க்ரீன் டீ...உடம்புக்கு நல்லது..."

"என்ன டீ?" - முதல் முறையாய் "க்ரீன் டீ" என்பதைக் கேள்விப்படும் மணி வியப்பாய் வினவினான்.

"அம்மாவ போய் 'என்னடி'னு கேட்கலாமா?" - என்று சிரித்தபடியே ஜோக்கடித்தார் அங்கிள்..

வாசலில் யாரோ வரும் ஓசை கேட்டது...

"என்னங்க..நீங்க இங்க இருக்கீங்க...உங்களுக்குத் தெரிஞ்சவங்க வீடா?" - என்று அங்கிளைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஒரு பெண்...

திரும்பிப் பார்த்த அங்கிளுக்கு "பகீர்" என்று இருந்தது..."இவ எங்கடா வந்தா? " - இது மைன்ட் வாய்ஸ்,,,

சற்றே சுதாரித்த படி..."தேவயானி..இங்க ஏன் வந்த...போன் பண்ணியிருக்கலாமே" என்றார் அங்கிள்.




"இந்த வழியாப் போய்கிட்டு இருந்தேன்..வாசல்ல உங்க காரை பார்த்தேன்..நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு நேரா வந்துட்டேன்..என்னங்க இது வந்தவள வான்னு கூப்பிடாம ஏன் வந்தன்னு கேட்கறீங்க?"

"யாருண்ணே இந்த பொண்ணு...உங்க கிட்ட அண்ணி மாதிரி உரிமையாப் பேசறா.."

"என்னது...அண்ணி மாதிரியா..நான் இவரோட பொண்டாட்டிதான்...யாருங்க இவங்க..."

"அது வந்து...வந்து.."

"ஷாக்" ஆன மணியின் அம்மா தொடர்ந்தாள்..."என்ன அண்ணே ! வீட்டுல கோமல வள்ளின்னு ஒரு சம்சாரம் இருக்கறப்போ இந்த சமாச்சாரம்  வேறயா!"

"அது யாருங்க கோமல வள்ளி?" - தேவயானியின் ஷாக்...

ஆர்மி அங்கிள் நல்ல FIRING-கில் மாட்டியதுபோல் தவித்தார்.

சற்று தூரத்தில் இருந்த மணி சொன்னான்..."Anti Aunty ன்னு சொன்னீங்களே...இதுதானா...அது...! இப்ப சொல்லுங்க...உங்க பேரு என்ன...?
- நிலைமை புரியாமல் சிரித்துக் கொண்டே மாடிக்கு ஓடினான்..

அசடு வழிந்த அங்கிளுக்கு மணி கேட்ட கேள்வியின் பதில் காதில் ஒலித்தது...பொருத்தமான பெயர்தான் !

------------------

இந்தப் பதிவை மேலும் நகைச்சுவையாகத் தொடர முடியுமா?...யாரவது முயன்றால் மகிழ்ச்சி...


1 comment:

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates