.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, August 1, 2014

தித்திக்குதே !

இனிப்புதான் மிகவும் பிடிக்கும்
   என்றதை உண்டே வந்தால்...
இனிப்பதே உன்னைப் பிடிக்கும்
    சர்க்கரை நோயின் மூலம் !

ஜாங்கிரி, கேசரி என்று
    இனிப்புகள் பெயரைக் கேட்டால்
பொங்கிடும் நீரூற் றெனவே
     ஊறிடும் உள்நாக் கினிலே !

ஒன்றுதான் இரண்டுதா னென்று
    ஒவ்வொரு முறையும் இங்கே...
உண்டுநீ வந்தால் போதும்...
  'சர்'ரென சர்க்கரை ஏறும் !

யாருமே பார்க்கா நேரம்
   வாயினில் தினிக்கத் தோணும் !
கூறுமே உண்மையை இங்கே
   நேர்ந்திடும் உடல்மாற் றங்கள் !

வீட்டிலே உள்ளவர் எல்லாம்
    வாய்த்ததோர் வாய்ப்பு என்றே
சூட்டிலே பொசுக்கிய சொல்லால்
     'கரிசனம்' காட்டியே செல்வார் !

நாவினை அடக்கியே நாளும்
   வித்தையை அறிந்திட வேண்டும் !
தீவினை சர்க்கரை நோயாய்
   மேவிடும் முன்பே நாமும் !

2 comments:

  1. வணக்கம்
    அண்ணா
    படித்த போது கவிவரிகளும் எங்களுக்கு தித்திக்குதே... நல்ல செய்தியை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.....
    வாருங்கள் அன்போடு.... வாருங்கள் அன்போடு என்பக்கம்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ரூபன் ! தீபாவளிக் கவிதைப் போட்டியே முன்பாகவே அறிவிப்பு செய்தது நல்ல முடிவு. வரவேற்கிறேன். தீபாவளி அன்று முடிவுகள் வெளியிடத் தகுந்த நேரம் அமைத்துத் தரும். அதுவும் வித்தியாசமாய் படத்துக்கு கவிதை எழுதச் சொல்லி வைத்துள்ளது கற்பனைக்குத் தீனி...படத்தை பார்த்ததும் பொங்கி வந்த (?!) வார்த்தைகளை அமைத்து என்னுடைய பதிவை இட்டுவிட்டேன்...!

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates