அதிகாலைப் பொழுது பிறக்கின்ற பொழுது
புதுப் பாடல் உருவாக்கும் மனது - ஒரு
புதுப் பாடல் உருவாக்கும் மனது
(அதிகாலைப் பொழுது)
துயில் நீக்கும் சேவல்தான் கூவி..-புது நாட்கதவைத் திறக்கின்ற சாவி.
நன்னாளை வரவேற்கு கோலம் - நம் நங்கையர் கைகளின் ஜாலம்
விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்
விளக்கொன்றை போட்டது வானம் - இ ந்த மண்ணெல்லாம் சிதறும் ஒளி வெள்ளம்
(அதிகாலைப் பொழுது)
சுப்ரபாதம் இசைத்திடும் கோவில் - முதல் தொழுகைதான் செய்யும் பள்ளிவாயில்
இரு நாதம் ஒரு சேர இன்பம் அது பொங்கிட துள்ளிடும் உள்ளம்
நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்
நாளெல்லாம் அதிகாலைப் பொழுதாய் இருக்காதோ என எண்ணச் சொல்லும்
(அதிகாலைப் பொழுது)
(மறு பதிவு செய்யப்பட்டது).
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
பாடல் மிக அருமையாக உள்ளதுநானும் ஒரு இராகத்தில் படிமகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி
தொடருங்கள் முற்சியை.. ஒரு நாள் வானம் உங்கள் வசமாகும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிகள் ரூபன் ! நான் கூட இதை ஹிந்தோள ராகத்தில் மெட்டமைத்து பாடலாகத் தான் எழுதினேன் !
Deleteரசித்தேன்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா !
Delete