.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 2, 2014

பூவை

படத்துக்குப் பாட்டு -  ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது ...

கூந்தலில் சூடும் பூவை
   கூடையில் ஏந்திக் கொண்டு
பாந்தமாய் வளைந்தே நிற்கும்
   பூவைப்போல் தோன்றும் பூவை...
பார்வைதான் யாரைத் தேடும் ?
    பொங்குதே விழியில் நாணம் !
கோர்வையாய் வார்த்தைத் துளிகள்
    கவிதையின் சரமெனத் துள்ளும் !

"பூ"வெனக் கூவியே சென்ற‌
   வீதியின் கடைசி வீட்டில்...
"ஆ" வென சத்தம் எழுப்பி
   இவளது கவனம் ஈர்த்த...
மேலுடை அணியாக் காளை
   முகமது நினைவில் தோன்ற...
கால்களும் கோலம் போடும் !
    கனவிலே நெஞ்சம் ஓடும் !

"நேற்றுபோல் இன்றும் அவனே
   நேரிலே தோன்றிடு வானோ?
காற்றிலே பறந்தென் நெஞ்சம்
   காதலை மொழிபெயர்த் திடுமோ?"
என்றெலாம் எண்ணியே இவளும்
   இன்றைய ஊர்வலம் துவங்க...
"நன்றெலாம் நடக்கும்" எனநாம்
   நல்லதோர் வாழ்த்தும் சொல்வோம் !

 

7 comments:

  1. வணக்கம்
    அண்ணா.
    அழகு கவிகண்டு மகிழ்ந்தேன்... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா
    ஒரு போட்டியாளர் 2கவிதைகள் எழுத வேண்டும்
    1.படத்துக்கு ஒருகவிதையும்
    2.விரும்பிய தலைப்பில். ஒருகவிதையும்
    எல்லாம் இரண்டு கவிதைகள் எழுத வேண்டும்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன். போட்டி விதிமுறைப்படி இரண்டு கவிதை எழுத வேண்டும் என அறிவேன். நினைவூட்டியமைக்கு நன்றி...!இப்பொழுது, "சட்"டென்று தோன்றியதால் உடனே பதிவு செய்தேன். Concept வேறு யாரும் பதிவதற்குள் பதியவேண்டுமென பதிவிட்டேன். இன்னொரு கவிதையை விரைவில் பதிவு செய்கிறேன். நன்றிகள் !

      Delete
  2. வணக்கம்
    எழுதிய கவிதைக்கான இணைப்பை பதிவில் சொல்லிய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் நடுவர்களுக்கு சென்றடையும்... இன்னும் அனுப்ப வில்லை ..... பார்த்தேன்.
    இதோ முகவரி-Ramask614@gmail.com.,இதுக்கு அனுப்புங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இரண்டு கவிதைக்குமான இணைப்பை ஒன்றாக அனுப்பலாம் என்றிருக்கிறேன் ரூபன்...சரிதானே?

      Delete
    2. வணக்கம்
      சரி அப்படியே செய்யுங்கள்....

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  3. அருமை! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates