.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, November 3, 2017

வாட்ஸ்-அப்பில் வந்த மழை !

#மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?
வாட்ஸ்-அப்-பில் வந்ததில் ரசித்தது: 

(சிவப்பு நிறத்தில் உள்ளவை நான் சேர்த்தது)இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது  !

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!

===========================================================

எனது பங்களிப்பு : நான் சேர்த்தது...

டாஸ்மாக் கடைக்காரர்: பட்டைய கெளப்புது !

சிகை அலங்காரி: சும்மா பிண்ணி எடுக்குது !

ஸ்டிரிக்ட் டீச்சர்: சாத்து சாத்துன்னு சாத்துது !

தல ரசிகன்: தெறிச்சு விடுது !

கொள்ளைக்காரன்: பொத்துகிட்டு ஊத்துது  !


PETS LOVER: RAINING CATS and DOGS !
 ============================================================

மனைவி : செம அடி அடிக்குது !

கணவன் :  வாங்கு வாங்குன்னு வாங்குது !



9 comments:

  1. வாட்ஸாப்பில் சுற்றிச் சுற்றி வருவது பதிவுக்கும் திசை மாறியதோ...

    ரசித்தேன்.

    மழைபொழிவை பதிவர்கள் எப்படிச் சொல்வார்கள்?

    ReplyDelete
  2. என்க்கும் வந்தது. நீங்கள் சேர்த்ததும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. காலத்திற்கேற்ற பதிவு. தங்கள் பதிவின் இணைப்பில் எப்படி தலைப்பை சேர்க்கிறீர்கள் என்பதை விளக்க இயலுமா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மின்னஞ்சலைத் தெரிவிக்கவும் கவிஞரே

      Delete
  4. கணவன் மனைவி கருத்துதான் செம

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜி நானும் ரசித்தது அதுவே

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates