.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, June 2, 2015

தெய்வமாகலாம் !

விரிந்து கிடக்கின்ற உலகத்தைப் பார்ப்பதற்கும்...
   இயற்கை எழில்தன்னை அகத்துள்ளே சேர்ப்பதற்கும்...
திரிந்து செல்கையிலே பாதையினை அறிவதற்கும்..
   இறைவன் நமக்களித்த சீதனமே இருவிழிகள் !

மண்ணில் கதைமுடித்து மண்ணோடு கலக்கும்முன்
   என்னே ! இன்பங்கள் கண்ணாலே அடைகின்றோம் !
கண்ணால் நாம்பெற்ற இன்பமெலாம் கண்ணற்றுக்
   கலங்கும் மற்றவர்கள் அடைந்திடவும் வேண்டாமோ?

தானம் பலவுண்டு, இருந்தாலும் நாமிங்கு...
   கண்ணுற்ற காட்சியெலாம் கண்ணற்றோர் கண்டுணர...
வானம் தனைமுட்டும் புண்ணியமும் கைகூட...
   தானம் எனஇரண்டு கண்களையும் தந்திடுவோம் !

தெய்வம் அதுதந்த விழியிரண்டை நீயிங்கே...
   தானம் எனத்தந்தால் விழிபெற்றோன் இப்புவியில்..
உய்யும் வரைஉனையே தெய்வமெனப் போற்றிடுவான் !
   ஒளியே நீஎனவும் தினம்உன்னை ஏற்றிடுவான் !

தானம் செய்யுங்கள் ! கண்தானம் செய்யுங்கள் !
  தரணி விட்டபின்னே தெய்வம்போல் உய்யுங்கள் !
ஊனம் உள்ளோர்க்கு உளமார உதவுங்கள் !
   அவர்தம் வாழ்வினிலே வெளிச்சம் காட்டுங்கள் !

4 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    ஒவ்வொரு வரிகளும் மிகவு அருமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ரசித்திருப்பீர்கள் போல...! உங்கள் வரிகளில் தெரிகிறது...! மிக்க நன்றி ரூபன் !

      Delete
  2. // ஒளியே நீஎனவும் தினம்உன்னை ஏற்றிடுவான்.. //

    உண்மை... உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தனபாலன் சார் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates