.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, March 19, 2014

பூமியை வாழவிடு



பூமியிலே அழகுஎன்ன பூவா காற்றா? - சீறிப்
   பாய்ந்து வரும் கடலலையா? நீரின் ஊற்றா?
சாமியவன் படைப்பினிலே எல்லாம் அழகு ! - இன்னும்
   சொல்லப் போனால் கிரகங்களிலே பூமியே அழகு !

அழகுமிகும் பூமியிலே உயர்ந்தவன் மனிதா !  - அந்த‌
   அழகையெல்லாம் சிதைத்திடுதல் சரியா? முறையா?
நிழலைத்தரும் மரத்தையெல்லாம் வெட்டிச் சாய்த்தாய் !
    நிலத்தையெல்லாம் மனைகளாக்கி பசுமை மாய்த்தாய் !

அறிவியலின் போர்வையிலே அழிவுகள் செய்தாய் ! - அந்த‌
   இயற்கையோடு இயைந்த வாழ்வின் அருமை மறந்தாய் !
கரிப்புகையால் காற்றதனை காயம் செய்தாய் ! - அந்தக்
    காயம்பட்டக் காற்றினையே மூச்சாய் உண்டாய் !

உன்குலத்து சந்ததிகள் வாழ்ந்திட வேணும் ! - மற்ற‌
   உயிர்களுமே உரிமையுடன் வாழ்ந்திட வேணும் !
பண்ணெடுத்து வேண்டுகிறேன் கேட்டிட வேணும் ! - இந்த‌
   பூமியினை வாழவிடு எல்லோரும் வாழ !

2 comments:

  1. அருமை... உண்மை...

    சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ! உங்கள் வருகையும் ஊக்குவிப்புகளும் எனக்குத் தொடரவேண்டும் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates