.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, September 29, 2013

ஒளி காட்டும் வழி !


தீபங்கள் அணிசேர்க்கும் தீபாவளிப் பண்டிகை !
    தந்திடுமே நெஞ்சினிலே தெம்போடு நம்பிக்கை !
பாபங்கள், பிணி நீக்கும் நீராடும் நதிகங்கை !
   வாழ்த்துக்கள் பறிமாறி சேர்ந்திடும்ஓர்ஆயிரங்கை !


ஒளிர்கின்ற தீபங்கள் காண்பிக்கும் வழிஎன்ன?
    ஜொலிக்கின்ற புத்தாடை சொல்கின்ற குறிஎன்ன?
மிளிர்கின்ற மத்தாப்பு மொழிகின்ற மொழிஎன்ன?
    இனிக்கின்ற தித்திப்பு விளிக்கும் சங் கதிஎன்ன?



வருங்காலம் ஒளிமயந்தான் நமக்கிங்கு என்கிறது !
    மனஅழுக்கு ஆடையினைக் களைந்திடவும் சொல்கிறது !
ஒருபோதும் விலகாத இன்முகந்தான் பார்க்கிறது !
   இன்சொல்லே எப்போதும் சொல்லென்று கேட்கிறது !


ஒளிகாட்டும் வழிதன்னை ஒருசேரக் கண்டிடுவோம் !
    ஒற்றுமையின் வலிமையினால் தடையெதையும் வென்றிடுவோம் !
வழிகாட்டும் மூத்தவராய் நல்வழியில் சென்றிடுவோம் !
    வருங்கால சந்ததியின் உதாரணம் ஆகிடுவோம் !

34 comments:

  1. வணக்கம்

    உங்களின் கவிதைவந்து கிடைத்து விட்டது மிக சந்தோசமாக உள்ளது கவிதை நாடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத் தருகிறேன் அத்தோடு போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்

    உங்களின் கவிதைவந்து கிடைத்து விட்டது மிக சந்தோசமாக உள்ளது கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத் தருகிறேன் அத்தோடு போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வரும் காலம் ஒளிமயமாக மனஅழுக்கை நீக்கிட சொல்லும் வரிகள் சிறப்புங்க.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வழிகாட்டும் மூத்தவராய்...என்ற வரிகள் ரொம்பவும் பிடித்திருந்தன. நாம் முதலில் வழிகாட்டிகளாய் இருக்க வேண்டும்.
    நல்ல கவிதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமை...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தந்த அனைத்து அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

    ReplyDelete
  7. ''..ஒளிகாட்டும் வழிதன்னை ஒருசேரக் கண்டிடுவோம் !
    ஒற்றுமையின் வலிமையினால் தடையெதையும் வென்றிடுவோம் !
    வழிகாட்டும் மூத்தவராய் நல்வழியில் சென்றிடுவோம் !
    வருங்கால சந்ததியின் உதாரணம் ஆகிடுவோம் !...''
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி !

    ReplyDelete
  9. அருமையான கவிதை!
    போட்டியில் முதல் பரிசை வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும், என் கவிதையைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் மிக்க நன்றி ! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ! நன்றி ! நன்றி ! நன்றி !

    ReplyDelete
  11. ரூபனின் தீபாவளி கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி வாகை சூடியதற்கு வாழ்த்துகள், பிரசாத்!

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரரே!

    ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு உளமார்ந்த நல் வாழ்த்துகள்!

    மிக அருமையான கவிதை!
    தீபாவளியின் சிறப்பினைச் சிறப்பாகக்
    கவியில் நிறைத்துள்ளீர்கள்.

    மிக அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  13. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரரே.
    போட்டியில் வெற்றி பெற்றமைக்கு அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். சிறப்பான கவிதை. மிக அருமை. தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. வெற்றி வாகை த‌ந்தோர்க்கும்
    போற்றி வாழ்த்து தந்தோர்க்கும்
    நன்றி சொல்ல விழைகின்றேன்...
    ஒன்றல்ல இரண்டல்ல...ஓராயிரம் !

    ReplyDelete
  16. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்...! கவிதை அருமை ...!இனிய செய்திகளையே இயம்பியது.மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வணக்கம்

    தங்களின் கவிதை போட்டியில் 1முதலாவது இடத்தை பெற்றுள்ளது மிக்க மகிழ்சியாக உள்ளது.. முதலில்நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் என்னுடைய வலைப்பக்கம்சென்று பாருங்கள் எல்லாம்புரியும்
    எல்லா விடயங்களையும் பின்னூட்டத்தில் எழுதமுடியாது...அதனால் என்னுடைய மின்னஞ்சலக்கும்.தனபாலன் அண்ணா ஆகிய இருவருக்கும் தகவல் அனுப்புங்கள்... பின்பு சொல்லுகிறோம்....எல்லாவற்றையும்

    என்னுடைய வலைப்பக்கம் நீங்கள் வந்தது பதிவை பார்த்ததா அல்லது பார்க்க வில்லையா என்று உங்களுக்குத்தான் தொரியும்

    (சோதனை குறியீட்டை எடுத்துவிடுங்கள் பின்னூட்டம் இடுவதில் சிரமம்)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. ரூபன் அவர்களே...இது போன்றதொரு அரிய வாய்ப்பினை நல்கியமைக்கு நன்றி ! பின்னூட்டத்தில் தாங்கள் பதிவு செய்த கருத்துக்களுக்கும் நன்றி... தாங்கள் சொன்ன படி நான் ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன். நன்றி !

    ReplyDelete
  19. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  20. வணக்கம்!

    சிந்தனை மின்னும் செழுந்தமிழை நன்கோதி
    வந்தனை செய்யும் மனம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

      Delete
  21. வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  22. எல்லாவற்றையும்,நல்ல விதமக மனதிலேற்றும் கவிதை.
    தீபாவளியே திரும்ப வா என்று கூப்பிடுவதுபோல உள்ளது.
    முதல்ப்பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.அன்புடன் சொல்லுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி !

      Delete
  23. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...தொடர்ந்து வாருங்கள் !

      Delete
  24. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...தொடர்ந்து வாருங்கள் !

      Delete
  25. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...தொடர்ந்து வாருங்கள் !

      Delete
  26. வணக்கம்
    தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றியடைதமைக்கான சிறப்புச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் கையில் வந்து கிடைத்தவுடன் rupanvani@yahoo.com
    dindiguldhanabalan@yahoo.com இந்த இரு மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates