.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, August 23, 2013

வாலி !

வாளி வாளியாய் வார்த்தை கொட்டியது - நீ
பாடல் எழுதும் போது !
பாட்டு எழுதுதல் உனக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே !

கவியரசு காலத்திலேயே
புதுமுரசு கொட்டியவன் நீ !

அந்தக் கண்ண தாசனுக்கே
சின்ன பயம் தந்தவன் நீ !

பத்தாறு ஆண்டுதாண்டி
முத்தான பாடற் தந்தாய் !

எத்தனை நாள் ஆயிடினும்
முணுமுணுக்கும்  பாடற் தந்தாய் !

வாலிபக் கவிஞரென
மூத்தோரும் வாழ்த்திட்டார் ! - உன்

சீரிய நடைமுறையை
முன்மாதிரியாய் பார்த்திட்டார்!


சிந்தனைக்கும் ரசனைக்கும்
உன்பாடற் பெரும் விருந்து !

வந்தனைகள் செய்கின்றோம்
எம்மோடு மனமுவந்து !

1 comment:

  1. வணக்கம் பிரசாத்.
    என் வலைத்தளத்திற்கு வந்து படித்ததற்கு நன்றி.

    வாலியைப் பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது. அதுவும் 'கண்ணதாசனுக்கே சின்ன பயம் தந்தவன்' என்ற வரிகளை மிகவும் ரசித்தேன்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates