.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, July 8, 2008

என் மனைவிக்காக...

Tune: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் நான்
இப்ப‌டி என் ம‌ன‌ம் துடித்த‌தில்லை
அத்த‌னை பெண்க‌ளில் தேவ‌தையாக‌
நீ ம‌ட்டும் நீ ம‌ட்டும் தெரிந்த‌து ஏன்?

ர‌ம்யா ஓ ர‌ம்யா நீஎன‌க்கே பிற‌ந்த‌வ‌ளா?!
பெண்ணில் ப‌ல‌ பெண்ணில்நீயே சிற‌ந்த‌வ‌ளா?!
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌






(எத்தனை பெண்களைக்)


கருங்காந்த விழிகள்.... அது சொல்லும் மொழிகள்
அதுபோல என் கவியும் இனிக்காது

வருங்காலமெல்லாம் வசந்தம் நம் வாழ்வில்
புது இன்பம் தந்தது யாரு நீதானே

பூவைத் தீண்டும் காற்றாய் வந்தேன்
பூவை உன்னை கண்டு கொண்டேன்

பெரும் புயலாய் வந்தேன்...
தென்ற‌ல் ஆகினேன்..

தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
(எத்தனை பெண்களைக்)

வெயில் காலம் வந்தால் நிழ‌ல் தேடி போவேன்
இனி உந்த‌ன் குழல் தேடி நான் சேர்வேன்
ம‌ழைக் காலம் வந்தால் குடை தேடிப் போவேன்
இனி உந்த‌ன் உடையைத் தேடி நான் சேர்வேன்

மாறிப் போகும் என் வானிலை
மாற்ற‌ம் த‌ந்தாள் என் தேவ‌தை
என் வாழ்வெனும் வானிலே நீ வெண்ணிலா

தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
(எத்தனை பெண்களைக்)

Tuesday, June 3, 2008

ஜனனிக்கு

மெட்டு: ரகசியமானது காதல்

பெருந்தவம் செய்திடல் வேண்டும் – மிக மிகப்
பெருந்தவம் செய்திடல் வேண்டும்
புவியினில் பெண்ணாய் பிறந்திட யாரும்
புவியினில் பெண்ணாய் பிறந்திட யாரும்

(பெருந்தவம் செய்திடல் வேண்டும்)

பெண்ணாகி எங்கள் குல கண்ணாகினாய் –எங்கள்
கண்ணாகி எந்தன் இசையின் பண்ணாகினாய்
கன்னிப் பருவம் நன்றும் தீதும் அறியாதது - கொஞ்சம்
எண்ணிப் பாரென சொன்னால் கூட புரியாதது
தந்தையின் ஆசிகள் உனக்கு – அது எப்பவும் கூடவே இருக்கு

சிந்தையில் இதை நிலை கொண்டு…தினம் வாழ்ந்திடு நீ இங்கு வென்று
(பெருந்தவம் செய்திடல் வேண்டும்)

ஜான்சியின் ராணீ போலே வீறு கொள்ளனும் – எதைச்
செய்தாலும் நீதான் அதிலே வெற்றி காணனும்

அன்னை தங்கை உறவதன் அருமை உண்ர்ந்தேயிரு – அவர்
வாழ்க்கையில் இன்பஙகள் பொங்கிட காரணமாயிரு

ஜகம் புகழ் பெண்மனி ஜனனி – என போற்றிடும் நாள் யெதிர்பார்த்து ஸ்ருதியுடன் வார்த்தைகள் கொண்டு – பாடுகிறேன் ஒரு வாழ்த்து

(பெருந்தவம் செய்திடல் வேண்டும்)

Saturday, October 13, 2007

நிலா

இளம் பிறை நிலா..எந்தன் பக்கம் ஓடி வருதே
கற்பனைத்தேரில் ஒரு உலா..மனதினில் பாடல் தருதே..
விண்ணிலே வெண்ணிலா...கண்ணிலே வந்ததே...
தந்தேன் நான் பண்ணிலே...
(இளம் பிறை நிலா)

மின்மினிப் பூச்சியாய் விண்மீன்கள் மின்னிட
அதனிடை ஜாலம் செய்கிறாய்...
'கண்மணீ' எனக் கொஞ்சி தாயவள் உனைக்காட்டி
மழலைக்கு உணவளிப்பாள்...
உன் மேலே மோகம்தான்...எத்தனை ராகம்டதான்..
பிறந்திடும் சுகம் சுகம் தான்..
(இளம் பிறை நிலா)

உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றப் படிகள்தான்
உன்தன் நிலை வளற்பிறையே..
சில நேரக் குற்றத்தில் புகழ் மங்கி உயிர் நீத்தல்...
உன்தன் நிலை தேய்பிறையே..
உமை நாதன் சிரம் மேலே...இடம் கொண்ட வெண்ணிலவே..
உன் புகழ் பாடி பாடி நான்...
(இளம் பிறை நிலா)

மழை

சின்னத் தூரலும் மழைச் சாரலும் நெஞ்சை நனைக்குது
வண்ணக் கோலமாய் நல்ல வில்லொன்று வானை மறைக்குது
உள்ளம் குளிருது ஆசைத் துளிருது...கானம் பொறக்குது ..
நல்ல கானம் பொறக்குது(சின்னத் தூரலும்)

உலக உயிர்கள் உய்ய உதவும் உயர்ந்த மழையே..
உணவுப் பொருள்கள் தருவதோடு பருகும் நீரே..
உன்னைக் காணாது சின்னப் புல்லதும் தலை காட்டாது...
(சின்னத் தூரலும்)

என்று பொழிவாய் என்று சொல்ல இங்கு யாருண்டு..நீ
உந்தன் முகத்தை காட்டினாலே பசுமை பொங்கும்..
உந்தன் முன்னோடி கர்ஜிக்கும் பெருஇடி..மின்னல் தோரணம்...
(சின்னத் தூரலும்)

Wednesday, August 22, 2007

வரதட்சணை

தாலி கட்ட கூலி கேட்கும் _ இவன்
ஓர் விலை (பேசும்) மகன்

Friday, February 16, 2007

காஞ்சி மாமுனி சரணம்

ஜகமே புகழும் ஜகத்குரு - அவர்
எளிமை என்பதன் மறுவுறு
தெய்வத் தோற்றம் தான் திருவுரு - அவர்
சரணம் பாடி அருள் பெறு

சரணம் சரணம் சுவாமிகள் சரணம்
காஞ்சி மாமுனி மலர் பதம் சரணம் (ஜகமே)

மனத்தால் குணத்தால் பெரியவர்
பண்பால் அன்பால் பெரியவர்
அவர் பதம் சரண் என்று தினம் தினம் நீ பாட
துன்பமெல்லாம் துன்பம் கொண்டுகணத்தினில் ஓடி போகும் (சரணம் சரணம்)

மதத்தின் குருவாய் இரு ந்தவர்
மதச்சார்பின்றி சிற ந்தவர்.
நடமாடும் தெய்வமாய் நமக்கெல்லாம் அருள் செய்த
புனிதரான மனிதருக்கு மாலை சூடி பூஜை செய்வோம் (சரணம் சரணம்)

என் மகனின் முதல் வருட பிற ந்த நாளுக்கு

ஆட வ ந்தான் தொட்டில் ஆட வ ந்தான்
சதயத்திலே உதயமான சூரியன் - இவன்
பண்பினிலே குளுமை தரும் ச ந்திரன்
இவனைப் பெற்றிடதான் என்ன தவங்கள் செய்தோமோ - தவங்கள் இன்றியேஇவன் பிறக்கக் கூடுமோ (ஆட வ ந்தான்)

இவன் ஒவ்வொரு அசைவிலும் - புதுஇன்பங்கள் பிறக்குது - அதைப்பாட்டினில் பாட - என்கவிதை சிறக்குது

இவன் சிரிப்பைப் பார்த்துதான் - பலகோடி பூக்களும் - தினம்
பொலிவுடன் மலர - கடும்பயிற்சி எடுக்குது

இவன் பேச்செல்லாம் புது இசையே - மூச்சுக்காற்றிலூம் புது இசையே...
இறைவன் எமக்கு உவன்து அளித்த செல்வமும் இவனன்ற்றோ (ஆட வ ந்தான்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates