.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, July 1, 2017

கலாய்...மரண கலாய்...!


'நகைச்சுவை' என்று 'tag' செய்து எழுதினால், பல பேர் வந்து படிக்கிறார்கள். சீரியஸ் விஷயங்களுக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதில்லை. பெரும்பாலோனவர்கள், வேலை மற்றும் அலுவல்களிலிருந்து சற்று 'ரிலாக்ஸ்' செய்வதற்கு இணைய பக்கம் வருவதால், 'நகைச்சுவை'-யை விரும்பிப் படிக்கின்றனர் என்று இருக்கலாம். 


நகைச்சுவையில் பல ரகங்கள் இருக்கின்றன். இதிலே 3-ம் பட்ச நகைச்சுவையாகக் கருதப்படுவது 'மற்றவரை நையாண்டி' செய்வது' போல் பேசி நகைச்சுவை(?) செய்வது. இதற்கு மாடர்ன் பெயர் 'கலாய்...மரண கலாய்...!" என்றும் ஆங்கிலத்தில் 'ட்ரால்' என்றும் சொல்கிறார்கள்.

எதையும் விமர்சிக்கும் அதிகாரம் யாருக்கும் இருக்கிறது என்பதல்ல விவாதம். தாராளமாய் விமர்சனங்கள் செய்யலாம். ஆனால், 'கண்ணியம்' கெடாமல் விமர்சனம் செய்ய முடியுமா முடியாதா என்பதுதான் சிந்திக்க வேண்டியது. விமர்சனம் செய்வோர்க்கு 'கண்' போன்றது 'கண்ணியமாய் கருத்துரைப்பது'. வெறுப்பாக நாம் சொல்ல வரும் விஷயத்தைக் கூட அடுத்தவர்க்கு புரியும் படியும், அதே சமயம் மனம் புண்படாத வகையிலும் சொல்ல முடியுமே ! அந்த பண்பாடு ஏன் இப்போது மங்கிக் கொண்டிருக்கிறது?



'ட்ரால்' செய்து வீடியோ பதிவு செய்தால், பல லட்சம் பேர் பார்க்கிறார்கள். அதிலே, ஒட்ட வைத்து வரும் திரைப்பட வசனங்களை பார்த்தால்.."ஏன்டா நாயே...! நீயெல்லாம் சோறுதான் திங்கறியா...இல்ல..." என்பது போன்ற வன்மையான வார்த்தைகள்...! யாரை 'கலாய்'-க்கிறார்களோ அவரை 'நாய்' என்று திட்டுவது போல் ஒட்டு வேலை செய்கிறார்கள். யார் எப்படி ரசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை...ஆனால், இதுபோன்ற வசனங்கள் வரும்போது மனதில் எனக்கு ரொம்பவும் 'நெருடல்' வருகிறது. யாராக இருந்தாலும், பண்பான வார்த்தைகளால் விமர்சிக்கலாமே... !

இது ஒரு 'செயின்' போல் ஆகிவிடுகிறது. என் தலைவன் அல்லது சாதிக்காரனை ஒருத்தன் 'கலாய்'த்தால் பதிலுக்கு நானும் அவனது தலைவன் அல்லது சாதியை விமர்சனம் செய்து, அதுவும் தரக்குறைவாக...பதிவு செய்ய வேண்டுமா? சிந்திக்க வேண்டிய தலைப்பு - இந்த 'கலாய்த்தல்' அல்லது 'ட்ராலிங்' என்னும் கலாச்சாரம்...

வேறு எதையும் விட வள்ளுவனின் வாக்கு இங்கே மிகவும் நன்றாகப் பொருந்தும்...

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று."

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண‌
நன்னயம் செய்து விடல்."

பண்பாடோடு நடக்கும் சமுதாயமாக‌ எப்போது மாறுவோம்? 

என்ன உறவுகளே ! இதே உணர்வு உங்களுக்கும் இருந்திருக்கிறதா? இது பற்றி உங்கள் கருத்து என்ன? பகிருங்களேன்...!

9 comments:

  1. முழுவதும் ஆமோதிக்கிறேன். எல்லோரும் நண்பர்களே. அவர்கள் மனம் புண்படுமாறு பதிவிடுதலைத் தவிர்த்தல் நலம்.

    ReplyDelete
    Replies
    1. கருத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் !

      Delete
  2. ஸ்ரீ ராம் அவர்களின் கருத்தே
    என் கருத்தும்
    சுருக்கமாக என்றாலும் நிறைவாக
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

      Delete
  3. தங்கள் பதிவு சிறப்பானதே, அடுத்தவர் மனம் புண்பட்டு சிரிப்பதை விட அடுத்தவர் மனம் பண்பட சிந்தித்து சிரிக்க வைப்பதே சிறந்த நகைச்சுவை. உதாரணம் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியான உதாரணம் தந்தீர்கள் நண்பரே...நன்றி

      Delete
  4. ஆமோதிக்கிறேன்...

    அருமை... உண்மை...

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் சிறந்த எண்ணங்கள்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates