.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, June 2, 2017

இசையே ! வாழ்க !



இசைக்கொரு உருவம் தரவே
 விரும்பினன் நான்முகன் ப்ரம்மா !
தசையோடு ரத்தம் எல்லாம்
  சுருதியும், லயமும் கூட்டி..
அவ்வுரு தன்னைக் கருவாய்
   சுமந்தது இசையின் அம்மா !

கலைமகள் என்னும் வாணி !
   கலைகளின் அதிபதி ராணி !
அலைகடல் புவியின் வாழ்வில்
   அமைதியில் மனதைக் கட்டும்
இசைக்கடல் வேண்டும் என்றே
   திறனெல்லாம் அவ்வுருக்கே தந்தாள் !

வயல்வெளிப் பாடல் எல்லாம்
   திரையிலேத் தேனாய் கேட்க..
அயற்சிகள் நீக்கும் புதிய‌
    அரும்பெரும் மருந்தாய் ஒன்றை
மருத்துவம் கண்டது இங்கே !
   மகத்துவம் என்னே சொல்வேன் !

விருதுகள் இவனிடம் வந்தால்
  வேகமாய் பெருமை கொள்ளும் !
சுருதிகள் இவன்கை பட்டால்...
  கிருதியாய் தேனை வார்க்கும் !
அரியதோர் பிறவியாம் ராசா !
   மனதிலே பூத்திடும் ரோசா !

ஆயிரம் ஆயிரம் ஆண்டு
   அவனியில் அவனும் வாழ்ந்து
ஆயிரம் கோடி பேரின்
   இதயத்தை இசையால் ஆண்டு
சாதனை மேலும் செய்ய‌
   சரஸ்வதி அருளும் செய்வாள் !

பிரியமுடன்...
பி.பிரசாத், 

21 comments:

  1. இளையராஜா - இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். நாமும்.

    ReplyDelete
  2. பல நேரங்களில் மருந்து என்பது சரி...

    ReplyDelete
  3. இளையராஜா இசையை ரசிக்க தெரியாதவர் ரசனை கெட்டவர்

    ReplyDelete
  4. V well written. Excellent presentation. vazgha illaiyaraja.

    ReplyDelete
  5. அருமை இளையராஜாவின் பெருமை சேர்க்கும் வரிகள்

    ReplyDelete
  6. இவர் மறைந்தும் இசை இவரை மக்கள் மனதில் வாழவைக்கும் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்எகு நன்ன்னறி கில்ங்கலர்ஜி...பிறந்த நாளில் மறைவைப் பற்றி பேசிட்டீங்க...

      Delete
  7. Beautifully written. God bless.

    ReplyDelete
  8. Beautifully written. God bless you both.

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates