.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, May 20, 2017

பாகுபலியும் பரோட்டா புலியும்...


"பாகுபலி படம் பார்த்த பின்புதான் அரசன் பாகுபலி எவ்வளவு பலசாலி என்பதே எனக்குத் தெரிந்தது அமைச்சரே !" - பாகுபலியின் அண்டை நாட்டு  மன்னன் சிங்கம்புலி ஆச்சர்யத்தில் இருந்தான்.

"எனக்குந்தான் மன்னா...! இவ்வளவு பலசாலியான ஒரு அரசன் நம் அண்டை நாட்டை ஆள்வதால், எந்த நேரமும் நம் மீது போர் தொடுக்கலாம்...ஆகையால்..." - இழுத்தார் அமைச்சர்.

"படம் பார்த்த பின்பு எனக்கும் அந்த கிலி வந்துவிட்டது அமைச்சரே...! பாகுபலிக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது என்பது எனக்கு உடனே தெரியவேண்டும்...அவன் என்ன செய்கிறான்..என்ன சாப்பிடுகிறான் என்ற விவரங்களை எனக்கு சீக்கிரம் சேர்த்து வந்து கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே !"

"உத்தரவு மன்னா...!"

"மன்னா...ஒரு நிமிடம்...இந்த விஷயத்தில் நீங்கள் அவசரப் படவேண்டாம்" - வழக்கம்போல் அறிவுறுத்தத் தொடங்கினார் அரசவையின் மூத்த குரு...ஆனால் அரசன் அவரை சட்டை செய்யவில்லை.

பாகுபலியின் திரைப்படம், அவனது நாட்டை விட பக்கத்து நாடுகளில் பெரும் 'ஹிட்' - பாகுபலியின் வீர்த்தையும், பலத்தையும் திரையில் பார்த்து அவரவர் பேசி ஆச்சர்யமடைந்து கொண்டிருந்தனர்.

மறுநாள்...

"அமைச்சரே ! பாகுபலியின் பலத்திற்கான ரகசியம் தெரிந்ததா?"

"இல்லை மன்னா...நம் ஆட்களை அங்குமிங்கும் அனுப்பியுள்ளேன்...அவர்கள் விரைவில் தகவல் சேகரித்து வருவார்கள் மன்னா..."

"சீக்கரம் ஆகட்டும்...நானும் பாகுபலிக்கு இணையான பலமும் வீரமும் கொண்டவனாய் ஆக வேண்டும்...இந்த சிங்கம்புலி அந்த பாகுபலிக்கு எந்த அளவிலும் குறைந்தவனில்லை என்று ஊரே போற்ற வேண்டும்..."

"ஆகட்டும் மன்னா!"

வெயில் தணியும் மாலை வேளை....ஸ்மார்ட் ஃபோனை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார் அமைச்சர். Facebook-ல் ஒரு வீடியோ தென்பட்டது - அந்த வீடியோவை முழுதும் பார்த்த அமைச்சரின் முகம் மலர்ந்தது.  நேரே மன்னரிடம் ஓடி "மன்னா...பாகுபலியின் வீரத்திற்கான ரகசியம் தெரிந்து விட்டது. ..அவனது உடலுக்கு வலு சேர்க்கும் உணவு, நம் நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த வீடியோவைப் பாருங்கள் !"

வீடியோவை - ப்ளே செய்கிறார் அமைச்சர். அதில்...

பாகுபலி பறந்து அடிக்கும் அனல் பறக்கும் காட்சி...காட்சி முடிந்ததும் ஒரு நிருபர் ஓடி வந்து...'பாகுபலி மன்னா...உங்கள் வீரம், பலத்தின் ரகசியம் என்ன?" - அதற்கு பாகுபலி சொல்லும் பதிலைக் கண்டதும் மன்னனுக்கும் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அப்படி என்ன சொன்னான் பாகுபலி?

"எனது உடல் வலிமைக்குக் காரணம் அண்டை நாட்டில் தயாரிக்கப்படும் 'பரோட்டா புலி' கடை பரோட்டா...!...

தொடர்ந்து காட்சியைப் பார்க்காமல் 'கட்' செய்தார் அமைச்சர். "மன்னா தங்களின் ஐயம் தீர்க்கும் பதில் கிடைத்து விட்டது. நம் நாட்டு 'பரோட்டா புலி' கடை 'பரோட்டா'தான் பாகுபலி பலத்தின் ரகசியம். வாருங்கள் இப்போதே அங்கே போகலாம்....

GPS ஆன் செய்து 'பரோட்டா புலி' கடையைத் தேடி புறப்பட்டான் மன்னன் சிங்கம்புலி...

தன் கடைக்கு மன்னன் படை சூழ வருவதைக் கண்டு 'பரோட்டா' மாஸ்டர் கொஞ்சம் பயந்து விட்டான். அவன் சுதாரிப்பதற்குள் மன்னன் சிங்கம்புலி அவனருகில் வந்துவிட்டான்.

"பரோட்டா மாஸ்டர்...உங்கள் கடை பரோட்டா-தான் பக்கத்து நாட்டு பாகுபலியின் பலத்துக்கு காரணம் என்று அறிந்தோம். உங்கள் நாட்டு மன்னனான எனக்கும் அது வேண்டும். இன்று முதல் இரண்டு வேளையும் அரண்மனைக்கு 'டோர் டெலிவரி' செய்து விடுங்கள்...!"

என்ன நடக்கிறது என்பது பரோட்டா மாஸ்டருக்கு மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது....அவன் தைரியத்தை வரவைத்துக் கொண்டு சொன்னான்...

"மன்னா...மன்னிக்க வேண்டும்...பாகுபலி படத்தின் பாப்புலாரிட்டியை பயன்படுத்தி எனது கடைக்கு ஒரு விளம்பரம் செய்து தருவதாக 'டிஜிட்டல் மார்கெட்டிங்' செய்யும் என் தம்பி சொன்னான். நானும் சரி என்று சொன்னேன். அந்த விளம்பரம்தான் Facebookல் நீங்கள் பார்த்தது. மன்னன் பாகுபலி-யின் பலத்துக்கு அதுதான் காரணமா எனக்குத் தெரியாது...ஆனால் எங்கள் கடையில் வீட் பரோட்டா போடுகிறோம்...தாங்கள் சாப்பிட்டு செல்ல வேண்டும்' என்று சொல்லி முடித்த மறுநிமிடம்...மன்னன் சிங்கம்புலிக்கு சிரிப்பதா கோபப்படுவதா எனத் தெரியவில்லை... மன்னன் அமைச்சரை பார்க்க, அமைச்சர் மூத்த குருவை பார்க்க...கருத்து சொல்ல இதுதான் சாக்கு என்று அவர் சொன்னார்..

"மன்னா...நான் அப்போதே சொன்னேனே...இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று...திரையில் காண்பதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடக்கூடாது - அதுவும் இந்த 'வைரல் வீடியோ' உலகத்தில்...மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்..."

மன்னன் 'வீட் பரோட்டா' டேஸ்ட் செய்து விட்டு, வீட்டுக்குத் திரும்பினான்...!

10 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி !

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  4. Replies
    1. ரசனைக்கு நன்றி டி.டி !

      Delete
  5. சூப்பர் நான் மகந்த் கணேஷ்ன் நன்பண்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates