.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, January 4, 2015

மானுடம் வாழ்க !

செயற்கை கோளென்ன ! சந்திரனில் காலென்ன?
   சாதிக்கப் பிறந்தவனே மனிதா !
இயற்கை விதியான 'அனைவரும் சமன்' என்ற‌
   உண்மை மறந்ததவும் ஏனோ?

அரக்கன் 'சாதி'யினை ஆளாக்கி வைத்தாயே !
   அவனுன்னை ஆள்வானே இன்று !
இரக்கம் இல்லாமல் வெறியாட்டம் ஆடிஅவன்...
      உந்தன் இனமழித்தல் நன்றோ?

மதத்தின் பெயர்சொல்லி மதம்கொண்ட யானைபோல்..
   மூர்க்க நடமாடும் மனிதா !
சகத்தில் ஒருமதமே ! 'மானுடமே' அதன்பேராம்...
    வேறு ஒன்றில்லை அறிவாய் !

இரத்தம் நிறமிங்கு ஒன்றாகும் எல்லோர்க்கும்...
     ஏற்றத் தாழ்வதிலே உண்டோ?
சத்தம் போட்டிங்கு ஒன்றாகச் சொல்லிடுவோம்..
     'வாழ்க மானுடமே' என்றே !

3 comments:

  1. அருமை... சிறுகதை போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! கண்டிப்பாக...தனபாலன் சார் ! தயார் செய்து கொண்டிருக்கிறேன் சிறுகதைப் போட்டிக்கு !

      Delete
  2. வணக்கம்
    அண்ணா
    இரசிக்க வைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி... தனபாலன் அண்ணா சொன்னதை செய்யுங்கள்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates