வானிலை அறிக்கை கேட்டேன் !
வருகுது பெரும்புயல் என்றார் !
நீர்நிலை மட்டம் எல்லாம்...
உயர்ந்திடும் என்றும் சொன்னார் !
கடும் மழை புயலிலெல்லாம்..
குழந்தையர் சிக்கா திருக்க....
"விடுமுறை பள்ளிகள்" என்று...
இன்னொரு சேதியும் சொன்னார் !
தூரல்கள் அங்கும் இங்கும்...
ஓரிரு எண்ணியேத் தூர...
பேரிடி, காற்றும் இன்றி...
பொய்த்தது வானிலை அறிக்கை !
அடுத்தநாள் புயலைப் பற்றி...
பெரியதாய் அறிக்கை இல்லை..
கடுப்பிலே இருந்தவன் போல...
கதிரவன் கொதித்தே மேய்ந்தான் !
பள்ளியில் நடந்த தென்று
'பகீர்'எனும் செய்தி ஒன்றை...
சொல்லிடக் கேட் டதிர்ந்தேன் !
என்சொலக் கொடுமை தன்னை !
நாலிரு வயதேஆன...
பூத்திடா பூவின் மொட்டை
பாலியல் கொடுமை செய்தான்!
போதனை செய்யும் ஆசான் !
நேற்றைய வானிலை அறிக்கை...
இன்றுதான் பலித்தது போல...
கீற்றென மின்னலும் இடியும்...
குழந்தையின் வாழ்வில் இன்று !
சிறுவரை பாலியல் கொடுமை
செய்துசீர் அழிக்கும் இந்த...
சிறுசெயல் தன்னை ஒழிப்போம் !
சிந்தனை நல்லது கொள்வோம் !
வருகுது பெரும்புயல் என்றார் !
நீர்நிலை மட்டம் எல்லாம்...
உயர்ந்திடும் என்றும் சொன்னார் !
கடும் மழை புயலிலெல்லாம்..
குழந்தையர் சிக்கா திருக்க....
"விடுமுறை பள்ளிகள்" என்று...
இன்னொரு சேதியும் சொன்னார் !
தூரல்கள் அங்கும் இங்கும்...
ஓரிரு எண்ணியேத் தூர...
பேரிடி, காற்றும் இன்றி...
பொய்த்தது வானிலை அறிக்கை !
அடுத்தநாள் புயலைப் பற்றி...
பெரியதாய் அறிக்கை இல்லை..
கடுப்பிலே இருந்தவன் போல...
கதிரவன் கொதித்தே மேய்ந்தான் !
பள்ளியில் நடந்த தென்று
'பகீர்'எனும் செய்தி ஒன்றை...
சொல்லிடக் கேட் டதிர்ந்தேன் !
என்சொலக் கொடுமை தன்னை !
நாலிரு வயதேஆன...
பூத்திடா பூவின் மொட்டை
பாலியல் கொடுமை செய்தான்!
போதனை செய்யும் ஆசான் !
நேற்றைய வானிலை அறிக்கை...
இன்றுதான் பலித்தது போல...
கீற்றென மின்னலும் இடியும்...
குழந்தையின் வாழ்வில் இன்று !
சிறுவரை பாலியல் கொடுமை
செய்துசீர் அழிக்கும் இந்த...
சிறுசெயல் தன்னை ஒழிப்போம் !
சிந்தனை நல்லது கொள்வோம் !
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
கவிதை வரிகள் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வழக்கம் போல் ரூபனின் வார்த்தைகள் ஊக்க மருந்துதான் ! மிக்க நன்றி ரூபன் !
Delete
ReplyDeleteவணக்கம்!
அரங்கேற்றம் என்னும் அரும்வலை தன்னில்
உரமூட்டும் ஆக்கம் ஒளிரும்! - வரம்கூட்டும்
வண்ணத் தமிழை வளமாய் வடித்துள்ளார்!
எண்ணம் இனிக்க இயம்பு
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அன்பாலே சிலவார்த்தை தனைச்சொல்லி வாழ்த்தவந்த
Deleteவெண்பாவின் வேந்தனுக்கு நன்றிகளே ! - பண்பாட்டு
செந்தமிழில் உம்பணியும் சிறந்திடவே வேண்டுகிறேன் !
தொந்திகண பதியின் பதம் !
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !
Delete