.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 24, 2014

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?!

கருங்கூந்தல் மேகக் காரி !
   கடல்நீரை உறிஞ்ச உறிஞ்ச...
பெரும்பங்குத் தலைமேல் ஏற...
   உலர்த்திடத்  தலைவிரித்தாளே !

தரையெலாம் சிதறியே விழுமாம்...
  தூரலாய் நீர்த்துளிக் கோர்வை !
"மழைத்துளி" என்றோர் பெயரில்...
    மண்ணிலே வருணன் பார்வை !

பூமியின் அடியில் தோன்றி...
   பூமிவாழ் உயிர்களுக் கெல்லாம்...
சாமிபோல் உதவிய நீர்க்கு...
   பூமிதான் பிறந்த வீ டாகும் !

விடுப்பிலே தாயின் வீடு
    திரும்பிடும் புதுப் பெண்போல‌
துடிப்பிலே 'சோ'-வெனக் கூவி
    'திபுதிபு' என மண்சேரும் !

நீரெனப் புவியில் ஓடி
   நலமுடன் வாழும் போதும்
ஊரெலாம் குளிர்ந்திட மழையாய்
    தரையிலே வீழ்ந்திடும் போதும்

புவியெலாம் வாழ்த்திடும் என்றும் !
   புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் !
கவிஞர்கள் பாடிடும் மழைதான் !
   சொல்லாமல் சொல்வது என்ன?

உலகெலாம் வாழ்த்திடும் வண்ணம்
   நடந்திடும் உன்னத‌ குணத்தாள்...
'சலசல' மழைத்துளி சொல்லும்
   சங்கதி புரிந்தே வாழ்வோம் !

8 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    கவிதையின் கற்பனை வரிகள் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி ! மிக்க நன்றி ரூபன் !

      Delete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

      Delete
    2. அழகான வரிகள் அழகு கவிதை!! தங்கள் தளத்திற்கு பதியவன்!! நன்றிகளும் வாழ்த்துகளும்

      அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!

      Delete
    3. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் நண்பரே ! தொடர்ந்து வரவும் !

      Delete
  3. கருங்கூந்தல் மேகக் காரி !
    கடல்நீரை உறிஞ்ச உறிஞ்ச...
    பெரும்பங்குத் தலைமேல் ஏற...
    உலர்த்திடத் தலைவிரித்தாளே !
    ஆஹா! என்ன! அழகான கற்பனை! இந்த வரிகளைத்தாண்டி வரவே எனக்கு நேரம்பிடித்தது.
    வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்தேன். தொடர்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், ரசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி ! தொடரந்து வரவும் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates