.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, November 16, 2013

சச்சினுக்கு சலாம் போடு !

சச்சினுக்கு சலாம் போடு !
   சச்சினுக்கு சலாம் போடு !
மெச்சியவன் புகழைப் பாடு !
   மேளதாளம் போட்டு ஆடு !

பந்துவீசும் வீரர்க் கெல்லாம்
   பட படப்பைத் தந்தவன் !
வந்து பார்க்கும் ரசிகருக்கு
   விருந்து படைத்துத் தந்தவன் !

பரம சிவன் நடனமதை
   பார்த்தது போல் பரவசம் !
திறமை யான டெண்டுல்கரின்
   ஆட்டம் கண்டு களிக்கையில் !

உச்சிவரை உயர்ந் திருக்கும்
   இமய மலை சிகரமும்
சச்சினவன் சாத னைகள்
  நிமிர்ந்து பார்க்க வேண்டுமே !

களம் இறங்கும் போதுதன்
  நூறு சதம் தந்தவன் !
இளம் தலை முறைக்கெல்லாம்
  இறைவ னாகத் திகழ்பவன் !

சாத னையின் மனித உரு
   'சச்சின்' என்று சொல்லலாம் !
வேத னையாய் இருக்கிறதே
   விடை பிரியும் போதுதான் !

நூறு நூறு நொறுக்கியவன் !
   நாட்டின் பெயர் ஏற்றியவன் !
நூறு நூறு ஆண்டுவாழ‌
   நெஞ்சம் வாழ்த்திச் சொல்கிறேன் !

6 comments:

  1. சிறப்பிற்கு சிறப்பு...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

      Delete
  2. எனக்கு கிரிக்கட் பற்றி ஆர்வமில்லை. அனுபவமுமில்லை...
    ஆயினும் உங்கள் கவிதையை
    வரிக்கு வரி ரசித்தேன். மிக அருமை!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! தங்களது வாழ்த்து இன்னுமொரு முதற் பரிசு பெற்றதுபோல் உள்ளது !

      Delete
  3. Its too good.....i loved each and every poetic aspect of it.Prasad just tooo good

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates