.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, September 14, 2017

சேர்த்து வைத்த கனவு !

பெற்றோர்கள், தன்னால் நினைவாக்க முடியாத கனவுகளை, தன் பிள்ளைகள் மூலம் நினைவாக்க முயற்சி செய்வர்...!



Shared from:
Dinamani


Saturday, September 9, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 66


மேயர் மார்த்தாண்டம் !



"உங்க பையன் இந்த ஊர் மேயரா? அப்படின்னா நீங்க ரொம்ப செல்வாக்கான ஆளு-ன்னு சொல்லுங்க !"

"அட நீங்க வேற...ஒழுங்கா படிக்கவும் படிக்காம, வேலைக்கும் போகாம, ஊர் மேய்ஞ்சிகிட்டிருக்கான். அதனாலே, தன்னை  'ஊர் மேயர்'-ன்னு தானே சொல்லிகிடுத் திரியறான் !"

"!!!"



DISCOUNT OFFER




"நம்ம கம்பெனி வரவு செலவு கணக்கு பார்க்கிறவரு கூட தன்னோட fees-ல‌ 'ஆடி' மாச டிஸ்கௌண்ட் கொடுக்கறாராமே !"

"அவர் 'ஆடி'-ட்டர் ஆச்சே !"

"???"


ஸ்பெஷல் டே !
 
 

"இன்னிக்கு என்னங்க ஸ்பெஷல்? ஃப்ரைட் ரைஸ், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் -ன்னு எல்லாம்  ஃப்ரைட் அயிட்டம்ஸ்?"

இன்னிக்கு FRI DAY ஆச்சே !

Wednesday, September 6, 2017

தலைப்பு 1: மனம் ஒரு குரங்கு ! தலைப்பு 2: வாழ்வும் சாவும் !

​இரு தலைப்பு - ஒரு கவிதை ?!....#Bluewhale

"அருகிலே உள்ள‌
அண்ணாச்சி கடைசென்று
அரைகிலோ அரிசி வாங்கி வா !"
அம்மா சொன்னது 
அவன் காதில் விழவில்லை !
அலைபேசியில்
அயராது ஆழ்ந்திருந்தான்...!
அரைமணி கழித்து
'என்னாச்சு? அரிசி' என்றால்..
'எப்போ சொன்ன' என்கின்றான் !

அன்னை சொல்கின்ற‌
சிறு வேலை செய்யாமல்
அன்றாட சோத்திற்கு
வழியேதும் செய்யாமல்...
எவனோ சொல்கின்ற
'டாஸ்க்'(TASK) எல்லாம் செய்கின்றான் !
தன்னை தன்கையால்
மாய்த்திடும் நாள் குறித்து....!




Monday, September 4, 2017

Saturday, September 2, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 65


சாப்பிட்டு நேரா வாங்க !



"தன்னோட ஒரு பையனுக்கு ஹோட்டலும், இன்னொரு பையனுக்கு ஹோட்டல் பக்கத்திலேயே ஒரு மருந்து கடையும் வெச்சு கொடுத்த நம்ம ராமசாமி புத்திசாலி !"

"எப்படி சொல்றீங்க?"

"ஹோட்டலேர்ந்து வெளியில வந்தா நேராக் கண்ணுல படுற மாதிரி "இங்கு வயிற்று வலி மருந்து கிடைக்கும்'ன்னு போர்டு வெச்சிருக்காரே !"

"!!!"


CATCH THE POINT

"பவுண்டரி அருகில் நின்றிருந்த FIELDER எதிரணி பேட்ஸ்மேன் கொடுத்த ரெண்டு கேட்ச்சை தவறவிட்டார் என்பதற்காக அவர் மீது 'தண்ணீர் பாட்டில்' வீசி எறிந்தாயா?"

"இல்லைங்க...! அவருக்கு உதவி பண்ண‌ காட்ச்- ப்ராக்டிஸ் கொடுத்தேன்...அவரு அதையும் புடிக்கல...!"

"???"

முள்ளு முள்ளு சலூன் !


"அந்த சலூன்-ல எல்லார்க்கும் முள்ளு, முள்ளாய் முடி வெட்டி விடறாங்களாமே ! ஏன்?"

"அது ரோஜா சலூன் ஆச்சே !"

"!!!"


தமிழ்மணம் வாக்களிக்க...

Saturday, August 26, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 64


ஆடு வாங்கி வந்தேன் !
"வீட்டுல ஆடு வளர்க்கலாம்-ன்னு ஆடு வாங்கிட்டு வரச்சொன்னா என்னங்க மூணு ஆடு வாங்கிட்டு வந்திருக்கீங்க? நாலா வாங்கணும்...இல்ல ரெண்டு வாங்கியிருக்கலாம்..."

"என்னாச்சு...மூணு வாங்கினா என்ன?"

"ODD - ஆ இருக்குதில்ல...!"


வில்லாதி வில்லன் !


"வில் வித்தையில் சிறந்தவனான அண்டை நாட்டு மன்னன் நம் மன்னனை நாளைக்கு போருக்கு அழைத்திருக்கிறான்."

"நம் மன்னர் அதற்காக இன்று ரெடி-யாகிக் கொண்டிருக்கிறாரா?"

"ஆமாம்.....இப்போதே WILL எழுதிக் கொண்டிருக்கிறார்...!"


சொந்த அனுபவமா?

"நம்மோட அனுபவங்கள்தான் நமக்குப் பாடமா இருக்கனும்-ன்னு இல்லை...அடுத்தவங்க அனுபவத்திலேர்ந்தும் நாம தெரிஞ்சக்கலாம்-ன்னு சொன்னா அதுக்கு அந்த எழுத்தாளர் ஏகாம்பரம் தான் நல்ல உதாரணம்..."

"ஏன் அப்படி சொல்ற?"

"கல்யாணம் பண்ணிக்காமலேயே மனைவி (கணவனை மிரட்டும்) ஜோக்ஸ் எழுதறாரே !"



தமிழ்மணம் வாக்களிக்க...

Thursday, August 24, 2017

விவேகம் தலைக்கு மட்டுமா?



விவேகம் என்றால் புத்தி கூர்மையாம் !
விவேகம் என்றால் தெளிய பார்வையாம் !
விவேகம் என்றால் பகுத்து ஆய்வதாம் !
விவேகம் என்றால் மதியின் நுட்பமாம் !

விவேகம் என்றால் தலைக்கு மட்டுமா?
விவேகம் என்றால் மனதிற் கில்லையா?

மனதில் விவேகம் இருந்துவிடில்..
நடைமுறைக் கொத்த நினைவு வரும் !
நல்லதே செய்கிற எண்ணம் வரும் !

மதியும் மனமும் இணைவாக‌
சரியாய் இருந்தால்தானே விவேகமாம் !



தமிழ்மணம் வாக்களிக்க...

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates