#கடி ஜோக்ஸ் - பாகம் - 80
தூக்கி எறியலாமா?!
" ஏங்க ! தினம் ஆஃபிஸ் போயிட்டு வந்து பஸ் டிக்கெட் எல்லாம் தூக்கி போடாம...பத்திரமா அடுக்கி வைக்கிறீங்களே ! ஏன்?"
"விலை உயர்ந்த பொருள்களை தூக்கி எறியலாமா-ன்னு தான் !"
"???"
எலிசபத் கேட்ட கேள்வி
" M for MOUSE, R for RAT -ன்னு உங்க பையன் படிக்க ஆரம்பிச்சிருக்கானே ! எந்த ஸ்கூல்ல சேர்த்திருக்கீங்க?"
"எலி-மென்ட்டரி ஸ்கூல்-லதான் !"
"!!!"
செல்போன் திருடன்
"என்னங்க வாக்கிங் போனபோது செல்போனை புடுங்கிட்டு ஓடின திருடன், திரும்பி வந்து அத கொடுத்துட்டு என்ன சொல்லிட்டு போறான்?"
"அவன் ஐபோன் மட்டும்தான் திருடுவானாம். மத்ததெல்லாம் திருப்பி கொடுத்திடுவானாம் !"
"???"
மூன்றையுமே ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் !
Deleteதிருடனின் பாலிஸி ஸூப்பர் இவன் விரைவில் அரசியல்வாதியாக வருவான்
ReplyDeleteவாங்க ஜி ! ஐபோன் அரசியல்வாதி !
Deleteதிருடனின் நல்ல பாலிசி! :)
ReplyDeleteமூன்றும் ரசித்தேன்.
வாங்க ஜி ! ஒரு கொள்கை வேணும்ல?!
Deleteஅனைத்தும் அருமை பாராட்டுக்குரியது
ReplyDeleteவழக்காமான உற்சாகத்திற்கு நன்றி கவிஞரே!
Deleteரசிக்க வைக்கும் நகைச்சுவைகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
Delete