.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, January 9, 2018

வீணையின் நாதம் !



​இசைக்கருவி பலஉண்டு அதற்கெல்லாம் மகராணி...
   வீணையெனும் வாத்தியமே ஏந்திடுவாள் கலைவாணி !
அசையாத மனம்கூட அசைத்திடுமே அதன்நாதம் !
   இனியஒலி யாவைக்கும் அதன்ஒலியே உவமானம் !

கடலோர மண்ணுக்கு பாய்ந்துவரும் அலையோசை...
   காதல்மதி கொண்டோர்க்கு கன்னியளின் வளையோசை...
மடல்பூக்கும் மலருக்கு தென்றல்தரும் முத்தஒலி...
   நடமாடும் மயிலுக்கு மழைஇடியின் சத்தஒலி...

அன்பான அன்னைக்கு தன்பிள்ளை மொழிமழலை...
   கவிபாடித் திரிவோர்க்கு செந்தமிழின் வார்த்தையலை...
ஒன்றாகச் சேர்ந்தோர்க்கு ஆனந்த சிரிப்பொலியாம்..
    இறைதேடும் பக்தர்க்கு ஆலயத்தின் மணியொலியாம் !

இருக்கின்ற நிலைபொறுத்து கேட்கின்ற ஓசையது..
   இனிதெனவே ஆகிடுமே...வீணையதன் நாதமென...
நறுக்கென்று எந்நாளும் நன்மொழியே பேசிடுவோம்..!
   நாதமென அம்மொழிகள் ரீங்காரம் செய்திடுமே ! 

 தினமணியில் படிக்க...

12 comments:

  1. அருமை நண்பரே இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மேலான முதற்கருத்துக்கு நன்றி ஜி !

      Delete
  2. ​வாழ்த்துகள். அருமை.

    //இருக்கின்ற நிலைபொருத்து //

    நிலை பொறுத்து?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்...வரிகளை எழுதும்போது எனக்கும் இதில் ஐயம்..கூகுள் செய்து பார்த்தே எழுதினேன். தெளிவான விடை கிடைக்கவில்லை என்றாலும் depending on என்பதற்கு பொருத்து என்றும் patience என்பதற்கு பொறுமை/பொறுத்து என்றும் யூகித்துக் கொண்டேன். யூகம் சரியா? யாரேனும் தெளிவு செய்தால் திருத்திக் கொள்வேன்! நன்றி

      Delete
    2. சந்தேகமே வேண்டாம். பொருத்துதல் என்றால் fix செய்தல், ஒட்டுதல் (பள்ளிக்காலத்தில் பரீட்சையில் கேட்பார்களே... "பொருத்துக" என்று)

      இங்கு வரவேண்டிய வார்த்தை பொறுத்துதான்.

      :)))

      Delete
    3. விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீராம்...

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  4. அருமையான வரிகளில் வீணையின் நாதத்தை மீட்டி விட்டிர்கள்

    ReplyDelete


  5. தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates