.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 12, 2017

ஷட் அப் பண்ணுங்க !

திரையிலே நடித்திடு வோரை
இறையென ஏத்தாதீங்க !
'குறை'யென அவர்படம் சொன்னால்
குமுறியே சீறாதீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

வரைமுறைக் குள்ளே நல்ல‌
விமர்சனம் செய்தால் கூட‌
தரக்குறை வாகப் பேசி
தவறுகள் செய்யாதீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

வாங்கிய பணத்திற் காக‌
வேண்டிய வேலை செய்வார் !
தூங்கிடும் உந்தன் வாழ்வை
தூக்கியா விடுவார் யோசி !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

நாயகன் படத்தைப் பற்றி
நேர்மறைக் கருத்தைச் சொன்னால்
'தாய்'என போற்றும் பெண்மை
வாய்வழி அதனைச் சொன்னால்

உன்னுளே ஆடும் வக்கிரம்
உணர்வினைக் உருவாய் கொண்டு
பெண்ணினை வாட்டா தீங்க !
கண்ணையே குத்தா தீங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

காழ்ப்புணர் வோடு பேசி...
மாண்பினைக் குறைக்கா தீங்க !
பாழ்பட லாமா நம்ம‌
பைந்தமிழ் பண்பாடுங்க !

SHUT UP பண்ணுங்க...! ஹலோ SHUT UP பண்ணுங்க...!

தமிழ்மணம் வாக்களிக்க...

25 comments:

  1. ரசிகன் என்ற அறியாமைகளுக்கு நல்ல அறிவுரை அருமை நண்பரே...

    ReplyDelete
  2. அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  3. ஸூப்பர் ஓவியா... ச்சே... ஸூப்பர் பாஸ்.

    தம போட்டாச்சு..


    ReplyDelete
    Replies
    1. கவிதை ஓவியம்-ன்னு சொல்ல வந்தீங்க போல...! ஹா..ஹா..நன்றி ஸ்ரீராம்!

      Delete
  4. நன்றே சொன்னீர்

    ReplyDelete
  5. ரசிகர்களுக்கு வரண்முறை பற்றி வளமான வரிகள் பாராட்டுகள்

    ReplyDelete
  6. த.ம. வாக்குடன் பாராட்டுகள்

    ReplyDelete
  7. Cannot shut up for this🙏🏽
    Awesome 👌🏽

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates