.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, March 2, 2017

சட்டம் செய்வோம் !



பெண்ணைப் பாலியலாய் வதைசெய்தார் எனும்சேதி..
    படிக்கும் போதெல்லாம் மனக்குமுறல் கொள்கிறது !
என்றே திருந்திடுவார் எனும்கேள்வி எழுகிறது !
   என்றும் விடையில்லை எனும்விடையே சேர்கிறது !

பொம்மைத் துப்பாக்கி 'கேப்' போட்டு சுடுவதுபோல்...
    பெண்ணைப் பொருளாக்கி 'ரேப்' செய்து போகின்றார் !
தன்மை இல்லாமல் தரம் தாழ்ந்து நடக்கின்றார் !
   தன்குல மானமெலாம் வானத்தில் விடுகின்றார் !

திரையில் காண்பதெலாம் செய்திடவே விழைகின்றார் !
    நிழலைப் பின் தொடரும் நெறுமூடர் ஆகின்றார் !
முறையில் லாதவொரு நடத்தையினைக் கொள்கின்றார் !
   மண்ணின் நெறியெல்லாம் மண்ணோடு புதைக்கின்றார் !

சட்டம் அதுசெய்வோம் பெண்கொடுமைக் கெதிராக...
   சீராய் அமல்செய்வோம் அதையிங்கு நேராக..!
நித்தம் நடக்கின்ற கொடுமைகட்கு முடிவாக...
   யுத்தம் அதுசெய்வோம் ஒருசேர விரைவாக...!
     

4 comments:

  1. வணக்கம்
    எப்போதுதான் விடிவுகாலம்வரும்......நன்றாக சொல்லியுள்ளீர்கள். வாழ்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதை....

    கடுமையான சட்டங்கள் தவிர அதை சரிவர செயல்படுத்தவும் தேவை...

    என்றைக்கு இக்கொடுமைகள் தீருமோ.....

    ReplyDelete
  3. வளமான கவிதை பாராட்டுகள்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates