.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, January 13, 2017

இந்த பொங்கல்....!



இனிய செங்கரும்பை
கடித்து சார் உறிஞ்சி
சக்கையை எறிந்துவிட..
ஈக்கள் மொய்த்திடுமே !

காசு லெஸ்ஸாக‌ (cash-less?) 
கரும்பே வாங்காமல்..
"E-கரும்பு" எனச்சொல்லி
படைக்கின்ற பொங்கலாச்சு !

துள்ளி வருகின்ற‌
ஜல்லிக்கட்டு காளையுடன்
மல்லுகட்டும் வீரர்களை..
தள்ளி நின்று பார்த்தாலும்
உள்ளம் அள்ளிப் போயிடுமே !

'மிருக வதை' என்று சொல்லி
அதற்கிங்கே ஆச்சு தடை..
மாட்டோடு மல்லுகட்டும் வீரரெல்லாம்...
கோர்ட்டோடு மல்லுகட்டும் பொங்கலாச்சு !

நெல் கலங்கள் நிரப்பி வைத்து
மகசூலை அளவுசெய்து..
உழவர் மனம் மகிழ்வோடு
ஊருக்கெலாம் படைத்திடுமே !

நீர் வரத்து நின்றதனால்
சோர்வுற்று உழவரெலாம்
சோறுடைக்க வழியின்றி
வாழ்வுடைத்த பொங்கலாச்சு !

ஆயிரம்தான் ஆயிடினும்...
மானமிகு தமிழினத்தின்
தனிப்பெருமை அதைஉணர்த்தும்
'போகி' , 'பொங்கல்'  திருநாளில்
ஆயிரம் ஆயிரமாய் 
வாழ்த்துக்களை சொல்லிடுவோம்...!

நாளை எனும் நாளை இங்கே
நல்லதொரு மாற்றம் தரும் !
பொங்கல் முதல் மங்கலமே
பொங்கி வரும் நம்பிடுவோம்...!


4 comments:

  1. /// கோர்ட்டோடு மல்லுகட்டும் ///

    வேதனை தோழர்...

    ReplyDelete
  2. நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம்.

    ReplyDelete
  3. வித்தியாசமான கவிதை. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. கால த்தின்கோலம்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates