சின்ன பல்புகூட சில நேரமே எரியும் ஊரில்...
வண்ண விளக்குகள் வீதி வழி எங்கும் !
செல்ல வழிகூட சொல்லிஉதவாதோர் ஊரில்...
சென்ற இடமெல்லாம் வாழ்த்தும் வணக்கமும் !
நல்லக் குடிநீரைத் நாடினாலும் கிடைக்காத ஊரில்...
வெல்ல இனிப்போடு தண்ணீர்த் தரும்பந்தல் !
கெட்ட மணம்வீசும் குட்டிச் சந்துகள் கூடயிங்கு..
சுத்தம் செய்யப்பட்டு ப்ளீச்சிங் பவுடருடன் !
பெற்ற பிள்ளைகூட உதறிய பெரு மூதோட்டிக்கு...
உற்ற துணை யாரோ வெள்ளைஉடையான் !
என்ன நடக்குதென விழிரெண்டும் விழிக்கும்போது
சின்னம் காட்டினானே...! தேருதல் நேரமென்று !
( இந்த சிந்தனைகளைத் தொடர்வதுபோல் எழுதி, இன்னும் மூன்று பத்திகளை இணையுங்களேன் பின்னூட்டத்தில் ! சேர்ந்து ரசிக்கலாம் ! )

சரியாகச் சொன்னீர்கள்...
ReplyDeleteதேர்தல் வரை கொண்டாட்டம் - முடிந்த பின்
வழக்கம் போல் திண்டாட்டம்...
நன்றி தனபாலன் சார் ! வழக்கம்போல் முதல் பின்னூட்டம் - 'சுருக்' (கமாய்)கென்று !
Delete