.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, December 28, 2006

முருகா முருகா (உயிரே உயிரே மெட்டில்)

உயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் அமையும் படி நான் எழுதின பாட்டு. Try pannunga..
-----------------------------------------------------

முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ
அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ
குயிலாய் இரு ந்தால் நானும் ஓம் என்று கூவிடுவேன்
மயிலாய் இரு ந்தால் நானும் உனைத் தாங்கி ஓடிடுவேன்

(முருகா)

உனை நெஞ்சில் நிறுத்தி ஓம் என்று சொன்னால்
வினையெதும் வ ந்திடுமா?
துணை என்றே உன்னைத் திடமாக கொண்டால்
 நோவேதும் வ ந்திடுமா?
ஆறு படை வீடு தனை ஆளும் ஆன்டவன் அருளால்
பேரின்பம் பேரின்பமே..
பேறு பதினாறும் குறைவின்றிப் பெறவேண்டும் என்றால்
பேராளன் துணை வேண்டுமே

குமரா குமரா எனச் சொன்னாலே தித்திக்கின்றதே !

(முருகா முருகா)

திருச்செந்தூர் சென்றால் திருமுருகன் ஆட்சி
தெய்வீகம் தெய்வீகமே
திருப்பரங் குன்றத்தில் குருபரன் காட்சி
தேவாம்சம் தேவாம்சமே
சுவாமி மலை மீது உனைக் காண தினம் கூடும் அடியார்
திருக்கூட்டம் திருக்கூட்டமே
பழ முதிர்சோலை திருத்தணிகை தலங்ளில் உந்தன்
எழிற் கோலம் எழிற் கோலமே !

பழனி பழம் நீ..அவ்வை தமிழ் பாட வைத்தவன் நீ !

(முருகா)

3 comments:

  1. மனீஷா கொய்ராலா ஓடி வரும் பாட்டை இப்படி முருகனுக்கு பாட முடிகிறதென்றால் உங்களுக்கு
    எந்த அளவுக்கு பக்தி இருக்கிறது என்று எனக்குப் புரிகிறது...

    மனீஷா ஓடி வருவதை எல்லாம் தவிர்த்து நானும் முயற்சி செய்ததன் பலன்..
    உங்க அளவுக்கு முருகனைப் பற்றிய டேட்டா எல்லாம் என்னிடம் இல்லை, ஏதோ இருக்குறதை வச்சிட்டு ட்ரை பண்ணியிருக்கேன்! பாட்டு கரெக்டா உக்காருதான்னு சொல்லுங்க.

    --------------------------------------------------------------

    தீராத பாவங்கள் தீராதோ முருகா மனமுருகி நின்றாலே
    மாறாத சோகங்கள் மறையாதோ முருகா தினமுன்னைக் கண்டாலே
    உன் இளம் பாதம் பணிந்தாலே மோட்சங்கள் பக்கம் தீராத வினை தீருமே
    உனை உளம் உருக நினைத்தாலே நிமிடங்கள் சொர்க்கம் சேராத புகழ் சேருமே
    அழகே, அமுதே உனை என் சொல்லி பாடுவதோ!

    ReplyDelete
  2. பாடல் வரிகளை மிகவும் இரசித்தேன் நண்பரே - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. இது என் முதல் பதிவு..இப்போது வந்து ரசித்தமைக்கு நன்றி ஜி

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates