.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, November 20, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 33

"டா", "டி" 

"சின்ன வயசில 'போடா..போடி'-ன்னு சண்டை போட்டுகிட்டு இருந்த ராமுவும், ஷீலாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டு போயி...இப்போ ஹோட்டல் வெச்சு நடத்தறாங்களாமே...!  இப்பவும் "டா", "டி" உண்டா?"

"இப்ப கூட இவன் போன் 'டா', பகோ 'டா' போடறான். அவ பச்ச 'டி', கிச்ச 'டி' யும் செய்யறாளாம் !"




ஜாதகமே தெரியும்



"பூனைக் கண் புவனாவோட ஜாதகமே உன் கையில இருக்குன்னு சொன்னியே...அவ நட்சத்திரம் என்ன சொல்லு பார்க்கலாம்..!"

"கேட் டை ! (Cat-eye) "

"!!!"



கிழிஞ்ச படம்



"'கிழிஞ்ச துணி'-ன்னு ஒரு படம் எடுத்தீங்களே...ரிவ்யூ எப்படி இருக்கு?"

"படத்துல நிறைய ஓட்டை இருக்கு-ன்னு சொல்றாங்க..!"

"!!!!"

Saturday, November 12, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 32


மகுடி வித்வான் !


"அந்த நாதஸ்வர வித்வான், தன்னோட காதலி ஞாபகம் வந்தா மகுடி வாசிப்பாராமே!!! ஏன்?"

"காதலி பேரு 'நாக' லட்சுமி ஆச்சே !"


சவுண்டு பார்ட்டி !


அந்த சேனல்ல இரைச்சலா  பேசி நாட்டு நடப்பு ப்ரோக்ராம் பண்ணுவாரே...அவர் ஏதோ படத்துல நடிக்கிறாராமே...என்ன படம்?

'கத்தி' சண்டை...!



ர‌வுண்டு பார்ட்டி !


ஏற்கனவே குண்டா இருந்த காமெடி நடிகர் காங்கேயம், பட வாய்ப்பு இல்லாம ஒரு வருஷம் இருந்ததுல...இன்னும் குண்டாயிட்டாரே...!

அவரு, 'இன்னும் ஒரு ரவுண்டு வருவேன்'-னு சொன்னாரே...அதான்...!



வள்ளல் மன்னன் !



"மன்னர் ஜாகிங் போகும் போது இளநீர் குடித்துவிட்டு 20 ரூபாய்க்கு, 500 ரூபாய் கொடுத்துவிட்டுப் போறாரே ! எவ்வளவு பெரிய வள்ளல் நம்ம மன்னர்?"


"அட நீ வேற..! இளநீர்காரன் 'சேஞ்ஜ்' தர முடியாது'ன்னு சொல்லிட்டானாம்...!"



Saturday, November 5, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 31



கணக்கு வெச்சு செய்யறோமுல்ல...!



"மாசா மாசம் அந்தக் கடையில ஷேவ் பண்ணிகிட்டு  பணம் கொடுக்காம வர்றியே ! ஏன்?"

"அங்க‌ என்னோடு ஷேவிங்ஸ் அக்கௌண்ட் இருக்கு...!"

"???"




மூக்கு பிடிக்க...



"நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டேன்-னு சொன்னீங்க...கூடவே ,..சாப்பாடு நல்லாவே இல்ல-ன்னு சொல்றிங்க?"

"மூக்கப் புடிச்சிகிட்டு சாப்பிடற அளவுக்கு துர்நாற்றம்-ன்னு சொல்ல வந்தேன் !"

"!!!!"


ஸ்ட்ரைக் !




"அந்த ஆஸ்பத்திரியிலே அடிப்படை வசதிகள் செஞ்சு  தராததுனால ஆப்பரேஷன் பண்ண முடியாது-ன்னு ஸ்ட்ரைக் பண்றாங்களாமே !"

"சர்ஜிகல் ஸ்ட்ரைக்-ன்னு சொன்னாங்களே ! இதுதானா அது...!"

"!!!"

Saturday, October 22, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 30

ஆன்லைன் மாமி

"பக்கத்து வீட்டு மாமி, காய் கறி-லேர்ந்து, மொபைல், டி.வி வரைக்கும் எல்லாமே ஆன்லைன்-ல தான் வாங்கறாங்க !"

"அப்போ அந்த மாமி, சாதாரண மாமி இல்ல...இமாமி ! (e-மாமி) !"

"!!!"


மரமா? மாமனா?

"உன்னோட வருங்கால கணவர் நீ என்ன சொன்னாலும், ரீ-ஆக்டே பண்ணாம மரம் போல‌ இருக்காரே !...ஏன்.."

"அவருதான் என் "wood" -பீ ஆச்சே !"

"!!!"



விளையாட்டுப் பிள்ளை

"நான் 'படி படி'ன்னு சொன்னாலும் படிக்காம என் பையனும் 'படி படி'-ன்னு விளையாடிகிட்டிருக்கான் !"

"அப்படி என்ன விளையாடறான்?"

"கபடி-தான்..!"


Saturday, October 15, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 29



சர்ஜிகல் ஸ்ட்ரைக்

"மன்னா ! மன்னா ! அண்டை நாட்டு மன்னன் படையெடுத்து நம் நாட்டு எல்லைக்குள் புகுந்துவிட்டான் !"

"என்னது? அப்படியா? உடனே என் அந்தப்புரத்திற்கு எட்டு கட்ட பாதுகாப்பை ஏற்பாடு செய்யுங்கள் !"

"???"



ஜிங்கு ஜாங்கு ஜிங் !

"கச்சேரியிலே 'ஜிங் ஜாங்'-ன்னு வாசிப்பாரே நம்ம ஜால்ரா வித்வான் "கிரி", அவருக்கு தீபாவளிக்கு என்ன ஸ்வீட் வாங்கிக் கொடுக்கலாம்?"

"ஜாங்கிரி தான் !"




ஆப்பா டக்கார்



"அப்பாடக்கர்-ன்னு கேள்விபட்டிருக்கேன். நம்ம அப்பாசாமிய ஏன் 'ஆப்பா டக்கார்'ன்னு சொல்றாங்க?"

"அதுவா...அவரு வெளியில எங்க போகணும்-னாலும், "App"-ல 'டக்'ன்னு கார் 'புக்' பண்றாரே...! அதான்...!"

"!!!"

Sunday, September 25, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 28



"சதுரம், செவ்வகம், முக்கோணம் -ன்னு ஷேப்ஸ் பாடத்தில வெச்ச டெஸ்ட்டுல என்னடா மார்க்கு?"

"வட்டம்-பா !"

"???"





"ஆடித் தள்ளுபடியில வாங்கின கார் எப்படி இருக்குங்க?"

"ஆடிப் போயி..இப்போ தள்ளும் படி இருக்கு...!"

"!!!"




"தொழில் செய்யறோமுன்னு நாலு பேரா சேர்ந்து 'லோன்' வாங்கினிங்களே...என்ன ஆச்சு?"

"லோனைத் திருப்பிக் கட்டணும்-ன்னு சொன்னவுடனே, என்ன லோன்லியா விட்டுட்டு போயிட்டாங்க...!"

"!!!"

Saturday, August 27, 2016

கடி ஜோக்ஸ் - பாகம் - 27



"என் பையன்... கிரிக்கெட் பந்து, கால்பந்து, ஹாக்கி பந்து-ன்னு எல்லா விளையாட்டு பந்துகளையும் வெச்சு ஆராய்ச்சி செய்யறான்....!"

"உங்க பையன் ஒரு பா(Ba)லியல் நிபுணர்-ன்னு சொல்லுங்க !"

--------------------------------------



"இந்தத் த்யேட்டர்ல, இடைவேளையின் போது, பாலும் பழமும் இலவசமா கொடுப்பாங்களா?"

"ஏன் கேட்கறீங்க?"

"பால் கனி சீட்டு வாங்கிட்டு வந்திருக்கேனே !"

--------------------------



"அந்தத் தூங்கு மூஞ்சி நடிகரை வெச்சு ஒரு படம் எடுத்தீங்களே... என்ன ஆச்சு?"

"படம் வெளியாகும்-ன்னு கனவுல கூட நினைக்க முடியல...!"

"!!!!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates