.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, March 25, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 44


 'பேட் பாய்ஸ்'
ஏன்டா..ட்ராமாவில ராமர் வேஷம் போடணும்...ஆளுக்கு ஒரு ஆயுதம் எடுத்துகிட்டு வாங்கடான்னு சொன்னா, கையில 'BAT' எடுத்துகிட்டு வந்திருக்க...!"

"நீங்கதானே வில்லோ (WILLOW) , அம்போ எடுத்து வரச்சொன்னீங்க...அதான்...!"

"???"




'கே...கே...'





"என்னங்க...அந்தத் தரகர் நம்ம பையனுக்கு பார்த்த பொண்ணோட காது 'கே' மாதிரி இருக்கும்-ன்னு சொல்றாரு...அது எப்படிங்க காது அந்த 'ஷேப்'ல இருக்கும்?"

"உனக்கு அது புரியலயா...பொண்ணோட காது 'கே'-க்காது-ன்னு சொல்றாரு...!"



சொந்த படம் !



"கல்லு கல்லா சுட்ட தோசையாலே மனைவிகிட்டே அடிவாங்குவாரே நம்ம கந்தசாமி அவரு இப்போ சினிமா எடுக்கிறாராமே ! என்ன படம்?"

"என்னை நோக்கி பாயும் தோசா...!"

Sunday, March 19, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 43

ஆண்டனி, மூட்டு வலி, காபி




ஆண்டனி
"நம்ம ஆண்டனி எவ்வளவு அமைதியா இருப்பாரு...! அவரோட பையன், அவருக்கு அப்படியே எதிர்பதம்...!"

"ஆண்டனியோட பையன்...அவரோட 'ஆண்டானிம்' (ANTONYM) -ன்னு சொல்லுங்க !"

மூட்டு வலி
"மூட்டு வலிக்கு டாக்டர் கொடுத்த மருந்தை தடவிகிட்டேர்ந்திலேர்ந்து, வலி அதிகமா ஆயிடுச்சு !"

"மூட்டு வலிக்கு மருந்து கொடுக்கறதுக்கு பதிலா...வலி மூட்டும் மருந்து கொடுத்துட்டார் போல...!"



காபி
"நம்ம ராமு குடும்பத்துக்கு காபி குடும்பம்-ன்னு பேரு...ஏன் தெரியுமா?"
"தெரியலயே !"
"ராமுவோட‌ தாத்தா...ஒரு நாளைக்கு 5 தடவை காப்பி குடிப்பாரு...அவனோட அப்பா சங்கீத வித்வான்...எல்லா கச்சேரியிலேயும் 'காபி' ராகம் பாடுவார்..."
"அப்ப ராமு..."
"இவன் எல்லா எக்ஸாம்-லேயும் 'காபி' அடிச்சு மாட்டிக்கிறானே !..."

Sunday, March 5, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 42

வாரம்...தாரம்..சேதாரம்..!



"என்ன தலைவரே ! போன வாரம் உங்க ரெண்டாம் தாரத்துக்கு சேதாரம் இல்லாம 'கோல்ட் செயின்' வாங்கினதா சொன்னீங்க...இப்ப வந்து சேதாரம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க?"

"நான் வாங்கினது, நேத்திக்கு என் முதல் சம்சாரத்துக்கு தெரிஞ்சிடுச்சே!"

"அப்ப சேதாரம் தான்...!"


கைப்புள்ள கந்தசாமி !



"வருஷத்துக்கு ஒரு புள்ள-ங்கிற கணக்கா புள்ள பெத்திகிட்டாரே கந்தசாமி...அவரு என்னவா இருக்காரு?"

"கணக்கு புள்ளையா-தான்..!"

திக்கி திக்கி வந்தீக..!



"திக்கி திக்கி பேசுவாரே திவாகர்...அவர் இப்ப என்ன பண்றாரு?"

"திக்..திக்..திகில்"-ன்னு த்ரில்லர் நாவல் எழுதறாரு !"

Thursday, March 2, 2017

சட்டம் செய்வோம் !



பெண்ணைப் பாலியலாய் வதைசெய்தார் எனும்சேதி..
    படிக்கும் போதெல்லாம் மனக்குமுறல் கொள்கிறது !
என்றே திருந்திடுவார் எனும்கேள்வி எழுகிறது !
   என்றும் விடையில்லை எனும்விடையே சேர்கிறது !

பொம்மைத் துப்பாக்கி 'கேப்' போட்டு சுடுவதுபோல்...
    பெண்ணைப் பொருளாக்கி 'ரேப்' செய்து போகின்றார் !
தன்மை இல்லாமல் தரம் தாழ்ந்து நடக்கின்றார் !
   தன்குல மானமெலாம் வானத்தில் விடுகின்றார் !

திரையில் காண்பதெலாம் செய்திடவே விழைகின்றார் !
    நிழலைப் பின் தொடரும் நெறுமூடர் ஆகின்றார் !
முறையில் லாதவொரு நடத்தையினைக் கொள்கின்றார் !
   மண்ணின் நெறியெல்லாம் மண்ணோடு புதைக்கின்றார் !

சட்டம் அதுசெய்வோம் பெண்கொடுமைக் கெதிராக...
   சீராய் அமல்செய்வோம் அதையிங்கு நேராக..!
நித்தம் நடக்கின்ற கொடுமைகட்கு முடிவாக...
   யுத்தம் அதுசெய்வோம் ஒருசேர விரைவாக...!
     

Sunday, February 26, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 41

கொஞ்சம் கேட்டு சொல்றேன்...!



"கிரிக்கெட் அம்பயரா இருந்தவரு, இப்போ கோர்ட்டுல 'ஜட்ஜா' இருக்கார்ன்னு நெனைக்கிறேன்...!"

"எத வெச்சு சொல்றீங்க,,,!"

"தீர்ப்பு சொல்ல சொன்னா...டி.வி.ஸ்க்ரீன் சிக்னல் காட்டறாரே !"


கச்சேரி ப்ரேக்கர் !



"சட்டசபையிலேர்ந்து கோபத்தில வந்த நம்ம எம்.எல்.ஏ-வை பாட்டு கச்சேரிக்கு தலைமை ஏற்க சொன்னது தப்பா போச்சு !"

"என்னாச்சு?"

"பாதி கச்சேரியில மேடை ஏறி மைக்-க உடைச்சிட்டாரே !"

புடி...புடி...புடி...!



"ரௌடி ரங்கன் அவன புடிக்க வர்றவங்களையெல்லாம், கையில கத்தியால கீறி விட்டுட்டு ஓடிடறானாமே !"

"சரியான 'கீறி'மினலா இருப்பான் போல...!"

Friday, February 17, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 40




இது என்ன 'விசா'ரணை?
 
"நம்ம தலைவரு, 'விசா' இல்லாம வெளிநாடு பயணம் போறார்ன்னு கேள்விப்பட்டேன்...அது எப்படிங்க?"

"அட நீங்க வேற...! அவரு ரெண்டாவது சம்சாரம் 'விசாலம்மா'வைக் கூட்டிகிட்டு போகலைங்கிறது தான் அப்படி சொல்றாங்க...!"

"???"


'ரூம்..ரூம்...'

"நம்ம தலைவரை அவங்க வீட்டுல ஒரு 'ரூம்'ல அடைச்சு வெச்சிருக்கிறாங்களாமே...! அந்த 'ரூமை' விட்டு வெளியே வரமுடியாதுன்னு சொல்றாங்க...!"

"அதெல்லாம் வெறும் 'ரூமர்'-ங்க...!"

"!!!!"


கனவு பலிக்குமா?

"முதலமைச்சர் ஆகிற தன்னோட கனவு பலிக்காத மாதிரி, நம்ம தலைவரு நேத்து கனவு கண்டாராம்...ரொம்ப அப்சட்...!"

"அவரு நேத்து கண்ட கனவு பலிச்சிடுமே !...எதுக்கு அப்சட்டு?"

"!!!!"


குதிரை சவாரி

"குதிரை பேரத்தில வந்த காசுல தலைவரு, தன்னோட பேரனுக்கு குதிரை வாங்கிக் கொடுத்தாராம்...!"

"யாரோட சவாரி போக...?"

"கொள்ளுப் பாட்டியோட தான்...!"

Friday, February 3, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 39

கரையுமா தொப்பை?

"இதை சாப்பிட்டா ஒரே வாரத்துல தொப்பை கரைஞ்சு, பேண்ட் லூசாயிடும்-ன்னு சொன்னாங்க...சாப்பிட்டேன்..."

"கரைஞ்சுதா? லூசாச்சா?"

"ம்...ஆச்சு...!என் பேண்ட் பர்ஸ்ல இருந்த பணம் கரைஞ்சுது...! நானே லூசாயிட்டேன் !

கண்மணி..அன்போடு



"கடி-ஜோக்ஸ் எழுதி லெட்டர் அனுப்பியிருக்கீங்களே ! ஏன்?"

"நீங்க தானே ஒரு 'கடி'தம் எழுதச் சொன்னீங்க...!"



கலர் தெரியுமா?



"ஏங்க அவரு எப்போதும் நம்ம பச்சமுத்து-வ 'சேப்பு முத்து'-ன்னே கூப்பிடறாரு?"

"அவரு கலர்-ப்ளைண்ட்-ங்க...!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates