அடுத்தது யாரு????
நாள் - 1
"நம்ம அடுத்த பிக் பாஸ் யாரு-ன்னு சொல்றீங்க ஸ்ரீராம்?"
"வேற யாரு? எல்லார்க்கும் தெரிஞ்சது தானே !"
"எல்லார்க்கும் தெரிஞ்சதுனா, நீங்க யாரை சொல்றீங்க? ஏன்னா இதுல ரெண்டு க்ரூப் இருக்கு...நீங்க சொல்றது ஓவியா?"
"யெஸ்...கண்டிப்பா..."
"கை கொடுங்க...! நானும் உங்க கட்சி-தான்...ஆனா..நம்ம குரு சார் மட்டும் 'கணேஷ்' தான்-னு சொல்றாரு"
"ஹலோ...! அப்படி சொல்றது நான் மட்டும் இல்ல...இன்னும் நெறய்ய பேர் சொல்றாங்க !" - குறுக்கிட்டு, தன் கருத்தை ஞாயப்படுத்தினார் குரு.
"பார்ப்போம்...! எப்ப சார் ரிசல்ட்? தெரியல இல்ல? எப்படியும் கூடிய சீக்கிரம் தெரியத் தானே போகுது !" - என்று மூவரும் தத்தம் இடத்திற்கு நகர்ந்தனர்.
நாள் - 2
"நேத்து டி.வி.ல பாத்தீங்களா குரு... நம்ம பிக் பாஸை? எப்படி சூப்பர் இல்ல?"
"யாரு ஓவியா? நான் பார்க்கலையே !"
"யெஸ்...வேற யாரு? ஹா...ஹா...! கண்டிப்பா உங்க க்ரூப் தோற்கத் தான் போகுது !"
நாள் - 3
இடம்: தனியார் அலுவலகம் - அனு என்டர்ப்ரைசஸ்
"என்ன குரு! மெயில் பார்த்தீங்களா ! நாங்கதான் அப்பவே சொன்னோமில்ல...!" - எக்காளித்து ஸ்ரீராம்
அன்றுதான் நெடுநாள் விடுப்பில் இருந்து விட்டு பணிக்கு வந்திருந்த பரணிக்கு என்ன நடக்கிறது என்று குழப்பமாக இருந்தது.
"என்ன முழிக்கறீங்க பரணி...வாங்க ஒரு காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்..." - அழைத்தது ஸ்ரீராமும் குருவும்.
இடம்: அலுவலக முதல் மாடி - சாப்பிடும் அறை
"நம்ம எம்.டி. வையாபுரி சார், புதுசா ஆரம்பிச்ச ஃபாரின் கம்பெனிக்கு டைரக்டரா போகப் போறாரு...! நேத்து ஒரு நகைக் கடை திறப்பு விழாவில கூட தலைமை தாங்கி பேசினாரே ...டீவியிலே பார்த்தியா? ம்ம்ம்...அவருக்கு அடுத்து நம்ம எம்.டி-யா வரப்போறது யாரா இருக்கும்-ன்னு கம்பெனி முழுக்க ஏகப்பட்ட காஸிப்...அதுல ஒரு க்ரூப் சொன்னது ஹெச்.ஆர். ஹெட் கணேஷ்-தான் வருவாரு-ன்னு...நான், என்னோட சேர்ந்து இன்னும் சில பேரு சொன்னோம் நம்ம அட்மின் ஹெட் ஓ.வெங்கடேசன் (ஓ.வி) தான் வருவார்-ன்னு...இப்போ மெயில் வந்து கன்ஃபர்ம் ஆயிடுச்சு...ஓ.வி...தான் நம்ம அடுத்த பிக் பாஸ்-ன்னு...!
ஹா... ஹா.. ஹா... ஸூப்பர் நாடகம் பாஸ் வாழ்த்துகள்
ReplyDeleteத.ம.1
வாங்க கில்லர் ஜி ! ஒரு பதிவைப் போட்டு இதை எந்த வகையில் சேர்ப்பது என்று குழம்பியிருந்தேன்...'நாடகம்' - என்ற பிரிவில் சேர்த்தமைக்கு நன்றி.. ஜி!
Deleteஹாஹா.... பிக் பாஸ்! :)
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி ஜி !
Deleteஓ.... இது வேறு! ஆரவ் மாதிரி ஏமாத்தறீங்களே பாஸ்! தம மூன்றாவது வாக்கு.
ReplyDeleteஹா..ஹா...ஹா ! நான் ஏமாற்றவில்லை...நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க-ன்னு சொல்லிதான் தப்பிக்கணும்...!
Deleteசக்தி, ஜூலி, காயத்ரி, ஆரவ் தவிர யார் வந்தாலும் ஓகே
ReplyDeleteபுரட்சிப்படை ஒத்துக்கொள்ளாது...!
ReplyDeleteஹா...ஹா...உங்கள் கருத்தை ஒத்துக்கிறேன் டிடி
Deleteநல்ல நாடகம் பாராட்டுகள்
ReplyDeleteத.ம. வாக்குடன்
நன்றி கவிஞரே!
Delete